தமிழ்மணத்தின் பூங்கா வலையிதழ்
புரட்டாதி மாதம் முதற்கொண்டு தமிழ்மணம் திரட்டி ஒவ்வொரு வாரமும் திரட்டப்படும் பதிவுகளிலே சிறந்த பதிவுகளைத் தொகுத்து பூங்கா வலையிதழாக வெளியிடவிருக்கிறது. வெள்ளி முதற்கொண்டு அடுத்த வியாழன் வரையிலான, தொகுப்பதற்குப் பதிவர்களினால் அனுமதிக்கப்பட்ட பல்வேறுதுறைப்பதிவுகளிலிருந்து சிறந்த பதிவுகள் தொகுக்கப்பட்டு பூங்கா இதழாக தொடரும் திங்கட்கிழமையிலே வெளியிடப்படும். இதற்கான தேர்வினை பூங்கா ஆசிரியர் குழுவும் தொகுக்கப்படும் வாரத்துக்கு முன்னைய வாரத்தின் சிறப்பு நட்சத்திரமும் தேர்ந்தெடுப்பார்கள். பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டியிலே உள்ளிடும்போதே அப்பதிவுகளைப் பூங்கா இதழுக்குத் தேர்ந்தெடுக்க சம்மதம் தெரிவிக்கவோ மறுக்கவோ பதிவருக்கு வசதி செய்யப்படும். இதுபற்றிய செயல்முறை விளக்கமாக இன்னும் ஓரிரு நாட்களிலே தமிழ்மணம் அறிவிப்பிலே பதியப்படும்.
40 Comments:
பூங்க வலையிதழ்
நீங்கா புகழடைய
நாங்கள் இருக்கிறோம்.
பாங்காய் இதழமைய, நல்லொதொரு
பங்கை அளித்திடுவோம் !
By கோவி.கண்ணன் [GK], At September 04, 2006 12:20 AM
நல்ல முயற்சி.
By Santhosh, At September 04, 2006 12:20 AM
நல்லதோர் எண்ணணமும், வடிவமும். இத்திட்டத்தால் தமிழ்மணத்தின் தனித்துவமும், பதிவர்களின் ஆர்வமும், அதிகரிக்கும் என நம்புகின்றேன்.
வாழ்த்துக்கள்!
By மலைநாடான், At September 04, 2006 12:23 AM
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
By ப்ரியன், At September 04, 2006 12:24 AM
எங்கள் இதயங்களில்
வீசிக்கொண்டிருக்கும் - தமிழ் மணம்
புதியன பல தந்து
உலகெங்கும் மணம் வீசட்டும்..
வாழ்த்துக்களுடன்
மானா
04.09.2006
By மஸாகி, At September 04, 2006 12:40 AM
வரவேற்கத்தக்க முயற்சி. வாழ்த்துக்கள்.
By அருள் குமார், At September 04, 2006 1:30 AM
தமிழ்மணத்தில் கவர்ந்த மலர்கள்
புதுப்பூங்காவிலும் மணம் பரப்பும்
நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
நல்ல முயற்சி! புதியதொரு அங்கீகாரம் கிட்டும் என்ற எண்ணம், தரமான படைப்புகள் தோன்ற கண்டிப்பாய் வழிவகுக்கும். வாழ்த்துக்கள்!
By நெல்லை சிவா, At September 04, 2006 2:16 AM
நன்றி...
By ரவி, At September 04, 2006 3:00 AM
நல்ல முயற்சி!
வாழ்த்துக்கள்.
By - யெஸ்.பாலபாரதி, At September 04, 2006 4:45 AM
வணக்கம் தமிழ்மண நிர்வாகிகளே
தங்களின் புதுமுயற்சி குறித்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். வாழ்த்துக்கள்
By கானா பிரபா, At September 04, 2006 4:51 AM
அட! தமிழ்மணத்தில் இன்னுமொரு முல்லை மணம்! நன்றியும் வாழ்த்துக்களும்!
By நாமக்கல் சிபி, At September 04, 2006 5:42 AM
நல்ல பதிவுகளை ஊக்குவிக்க எடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சி நற்பலனைத் தரும். தமிழ்மணத்தின் புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்களும், நன்றியும்!
By சுந்தரவடிவேல், At September 04, 2006 6:02 AM
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் !!
By பழூர் கார்த்தி, At September 04, 2006 6:26 AM
புதிய முயற்சியை வாழ்த்துக்களோடு வரவேற்கிறேன்...
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
By Unknown, At September 04, 2006 9:15 AM
வாழ்த்துக்கள்
By Chandravathanaa, At September 04, 2006 9:34 AM
நல்ல முயற்சி, வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
சில கேள்விகள் (எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும்:-)
1 வகைப்படுத்தப்பட்ட இடுகைகளிலிருந்து ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொன்று தேர்ந்தெடுக்கப்படுமா?
2. நட்சத்திரக்குத்து தேர்ந்தெடுப்புக்கு உதவி செய்யுமா?
இப்போதைக்கு இவ்வளவு கேள்விகள்தான்:-))
By பினாத்தல் சுரேஷ், At September 04, 2006 10:13 AM
வாழ்த்துக்கள், நல்ல முயற்சி
By Sivabalan, At September 04, 2006 10:14 AM
வாழ்த்துக்கள்!
By thiru, At September 04, 2006 10:42 AM
நல்லதொரு விடயம்.
By இளங்கோ-டிசே, At September 04, 2006 11:01 AM
நன்றாக அமைய நல் வாழ்த்துகள்
By ENNAR, At September 04, 2006 11:07 AM
நல்ல முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள்!
By மணியன், At September 04, 2006 11:43 AM
புது முயற்சி. நல்ல சேவை.
வாழ்த்து(க்)கள்.
By துளசி கோபால், At September 04, 2006 5:43 PM
இந்த உந்துதலால் மட்டுமாவது நக்கல், தனிமனிதத் தாக்குதல், தரமற்ற சொற்களைப் பயன்படுத்தல்.... ஆகியவை குறைந்தால் தமிழ்ப்பதிவுலகிற்கு விடிவு கிட்டும்.
By ஞானவெட்டியான், At September 04, 2006 9:52 PM
ரொம்பவும் மகிழ்ச்சியான செய்தி
By வேந்தன், At September 05, 2006 12:35 AM
பூங்கா புத்தம் புதிய மலர்களோடு வாசம் வீச வாழ்த்துக்கள்.
By வல்லிசிம்ஹன், At September 05, 2006 6:27 AM
வாழ்த்துக்கள். அருமையான யோசனை!!
By கதிர், At September 05, 2006 8:49 AM
பதிவர்களின் வாழ்த்துகளுக்குத் தமிழ்மணம் நன்றி தெரிவிக்கிறது.
பதிவர் சுரேஷ் தமிழ்மணம் இதைச் செயற்படுத்தும் முறை பற்றி கடந்த மாதங்களிலே தமிழ்மணத்தினை அவதானித்து வரையறுத்திருக்கிறது. ஏற்கனவே கூறியபடி இரு நாட்களிலே முழுத்திட்டம் இங்கே வெளியிடப்படும்.
ஆனால், உங்கள் கேள்விகளுக்குச் சுருக்கமான பதில்களைத் தரலாம்.
1. ஒவ்வொரு வகைப்படுத்தலிலும் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட இடுகைகள் தேர்ந்தெடுக்கப்படும். தரமே குறியாகக் கொள்ளப்படுகிறது. எண்ணிக்கை அல்ல.
2. தமிழ்மணம் கவனித்ததன்படி நட்சத்திரக்குத்தினைத் தேர்ந்தெடுத்தலுக்குப் பயன்படுத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. பூங்கா ஆசிரியர்குழுவும் முன்னையவாரத்தின் நட்சத்திரமும் தேர்விலே ஈடுபடுவார்கள்.
By தமிழ்மணம், At September 05, 2006 10:37 AM
உங்கள் பதிலுக்கு நன்றி தமிழ்மணம்.
என் பயங்களை(?) நீக்கிவிட்டீர்கள்.
By பினாத்தல் சுரேஷ், At September 05, 2006 10:57 AM
மிக நல்ல முடிவு. இது வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
By G.Ragavan, At September 05, 2006 12:00 PM
"தமிழ்மணத்தின் பூங்கா வலையிதழ்"
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
By துபாய் ராஜா, At September 05, 2006 12:17 PM
பூங்காவில் தமிழ் மேலும் மணக்க, வாழ்த்துக்கள்.
By இரா. வசந்த குமார்., At September 06, 2006 2:54 AM
தமிழ்மணத்தின் பூங்கா வலையிதழ் மிக சிறப்பாக வெற்றியடைய வாழ்த்துக்கள்.
தமிழ்மண வலைப்பதிவாளர்களுக்கு இது ஒரு மிக அரிய வாய்ப்பு.
By மஞ்சூர் ராசா, At September 06, 2006 6:53 AM
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்!
By சத்தியா, At September 07, 2006 1:58 PM
பூங்காவில் உலவக் காத்திருக்கிறோம்.
By பெருசு, At September 07, 2006 7:49 PM
பூங்கா பூத்துக் குலுங்க என் இனிய
வாழ்த்துக்கள்.
-முகு-
By Mugundan | முகுந்தன், At September 17, 2006 9:41 AM
தமிழ்மணத்தின் பூங்கா பூத்துக்குலுங்கி நறுமணம் பரப்பிட வாழ்த்துக்கள்.
அட! முதல் இதழில் நம்ம மூணாறு பயணக்கட்டுரை தேர்வாகியிருக்கிறது! என்னே என் பாக்கியம். தன்யனானேன்.
பேருவகையுடன்,
ஹரிஹரன்
By Hariharan # 03985177737685368452, At September 18, 2006 5:58 AM
I was asked to enable comment moderation in my blog & i was fwded to this link.I am kind of new to this.So please excuse me if this is an inappropriate post.
Why am i not able to see the tiltes (i can see only squares).. the rest of the posts are legible in tamil.Am i missing something??
Deepa
By Deepa, At November 21, 2006 6:09 AM
I was asked to enable comment moderation in my blog & i was fwded to this link.I am kind of new to this.So please excuse me if this is an inappropriate post.
Why am i not able to see the tiltes (i can see only squares).. the rest of the posts are legible in tamil.Am i missing something??
Deepa
By Deepa, At November 21, 2006 6:09 AM
என்னுடைய வலைப்பதிவில் பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்யத் தொடங்கிவிட்டேன்.
http://pakutharivu.blogspot.com
முடிந்தால் jm.suresh@gmail.com என்ற முகவரிக்கு ஒரு acknowledgment குடுத்தால் நன்றிக்குறியவனாவேன்.
--
Suresh
By சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam, At January 24, 2007 11:08 AM
ஐயா, இங்கு எனது பதிவில் நிகழும் விவாதங்கள் தமிழ்மணம் மறுமொழி திரட்டியால் திரட்டப்படாமல் உள்ளது. திரட்டிக்காக ஏற்கெனவே விண்ணப்பித்திருக்கிறேன். திரட்டும் பொழுது இந்தக் குறிப்பிட்ட பதிவின் மறுமொழிகளையும் திரட்டச்செய்யுமாறு வேண்டுகிறேன்.
நன்றி.
http://pakutharivu.blogspot.com/2007/01/blog-post.html
--
Suresh
By சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam, At January 24, 2007 1:45 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home