தமிழ்மணம் அறிவிப்புகள்

Thursday, April 13, 2006

வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி.

அமேசான் (ஆமஸான்) நிறுவனத்தின் ஒரு அங்கமான அலெக்சா என்ற நிறுவனம் வலைத்தளங்களின் பிரபலத்தை அளந்து பட்டியலிடுகிறது. இது பிரபலத்தை அளக்கும் முறையில் குற்றங்குறைகள் இருக்க வாய்ப்பிருப்பினும், வலையுலகில் பரவலான அங்கீகாரத்தை அலெக்சா வரிசைஎண் (Alexa rating) பெற்றுள்ளது. ஒரு தளம் பிரபலங்களின் இறங்குவரிசையில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பதை அலெக்சா வரிசைஎண் குறிக்கிறது. தற்போது யாஹூ.காம் தளம் முதல் இடத்திலும் கூகிள்.காம் தளம் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. மூன்றுமாதகால இடைவெளியில் ஒரு தளத்தின் தொடர்ந்த பிரபலத்தை அளந்து அதன் சராசரி வரிசைஎண் தீர்மானிக்கப்படுகிறது. இந்த வரிசையில் 100,000 என்பது ஒரு மைல்கல். தொடர்ந்த தினசரி வரிசைஎண் காட்டுதல், வரைபடம் மூலம் வரிசைஎண் மாறுபாட்டைக் காட்டுதல் உள்ளிட்ட பல தகவல்கள் காட்டப்பட இந்த 100,000 என்பது ஒரு எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்மணம் வலைவாசலின் பிரபலம் ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் முதல் முறையாக தமிழ்மணத்தின் அலெக்சா வரிசைஎண் 100,000-ஐக் கடந்துள்ளது. வெகுசில முழு தமிழ்த்தளங்களே கடந்துள்ள இந்த சாதனையை உங்கள் தமிழ்மணம் கடந்துள்ளதில் முழுப்பங்கு தமிழ்மணத்தில் பங்கேற்கும் வலைப்பதிவுகளையும், தொடர்ந்து வருகைதரும் வாசகர்களையுமே சாரும். இதுவரை இந்த குறியீட்டைக் கடந்துள்ள முழுமையான தமிழ்த்தளங்கள் யாவுமே பலவும் வியாபார நோக்கில் நடத்தப்படுபவையே. அவ்வகையிலும் இது ஒரு சாதனையே. இந்த சாதனை உரைக்கும் செய்தி தமிழ்மணத்தில் இடம்பெறும் வலைப்பதிவுகள் ஒரு மிகப்பரந்த வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளன என்பதேயாகும்.
இந்த சாதனையை அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் காணிக்கையாக்குகிறோம்.

அன்புடன்,
-காசி
(தமிழ்மணம் நிர்வாகக் குழு சார்பாக)

72 Comments:

  • //இந்த சாதனையை உங்கள் தமிழ்மணம் கடந்துள்ளதில்//
    தமிழ் மணம் மேலும் மேலும் வளர்ந்து சாதனை சிகரத்தை எட்ட வாழ்த்துக்கள், உங்கள் தமிழ்மண கட்டடத்தில், வலைப்பதிவுகள் எனும் செங்கற்கள் தொடர்ந்து உங்கள் உயரத்தை உயர்த்தும்.

    By Blogger கோவி.கண்ணன், At April 13, 2006 1:50 AM  

  • வாழ்த்துக்கள் காசி. மேலும் பல மைல்கற்களை அடைய வாழ்த்துக்கள்.

    By Blogger இலவசக்கொத்தனார், At April 13, 2006 1:55 AM  

  • ம்ம்ம்...
    கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது...
    மேலும் பல சாதனைகளுக்கும், விருதுகளுக்கும் இது முதல் படி...
    வாழ்த்துக்கள்!

    By Blogger - யெஸ்.பாலபாரதி, At April 13, 2006 2:10 AM  

  • ரொம்ப சந்தோஷமா இருக்கு காசி.
    இது நம்ம எல்லாருக்கும் தமிழ்ப்புத்தாண்டு பரிசுதானே?

    இவ்வளவுக்கும் பாடுபடுற நீங்க நல்லா இருக்கணும்.

    என்றும் அன்புடன்,
    துளசி & கோபால்

    By Blogger துளசி கோபால், At April 13, 2006 2:15 AM  

  • வாழ்த்துக்கள்.

    By Blogger அழகப்பன், At April 13, 2006 2:16 AM  

  • நீங்கள் மற்றும் உங்கள் தளம் மேலும் மேலும் பல சிறப்புகளை பெற வேண்டும் என் வாழ்த்துகிறேன்

    By Blogger MURUGAN S, At April 13, 2006 2:21 AM  

  • காசி

    சந்தோசமான செய்தி. நன்றி.
    நானும் தமிழ்மணத்தோடு இணைந்திருக்கும் ஒரு வலைப்பதிவாளர் என்ற நிலையில்,
    தமிழ்மணத்தின் இந்த சாதனையில் பெருமையடைகிறேன்.

    நட்புடன்
    சந்திரவதனா

    By Blogger Chandravathanaa, At April 13, 2006 2:40 AM  

  • உங்களின் சேவைக்குக் கிடைத்த சிறிய பரிசு என இதை கொள்க காசி...இன்னும் நிறைய சாதனைகள் செய்யும் தமிழ்மணம்

    By Blogger ப்ரியன், At April 13, 2006 2:45 AM  

  • //உங்கள் தமிழ்மணம்//

    சகோதரரே! உங்களின் இந்த பரந்த மனப்பாங்கு உங்களை மேலும் மேலும் பல சாதனைகள் படைக்கச் செய்யும். எட்டிப்பிடிக்க முடியாத உயரத்திற்கு "எங்கள் தமிழ் மணம்" உயர பிராத்திக்கிறேன். தற்போதைய சாதனைக்கு அன்பு கலர்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    இறை நேசன்.

    By Anonymous Anonymous, At April 13, 2006 3:10 AM  

  • வாழ்த்துக்கள்

    By Blogger தகடூர் கோபி(Gopi), At April 13, 2006 4:06 AM  

  • நீடூழி வாழ வாழ்த்துகள் காசி!

    சந்தோஷமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது

    By Blogger meenamuthu, At April 13, 2006 6:09 AM  

  • வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

    By Blogger சிவக்குமார் (Sivakumar), At April 13, 2006 6:34 AM  

  • congrats thamizhmanam.

    - Suresh kannan

    By Blogger பிச்சைப்பாத்திரம், At April 13, 2006 6:34 AM  

  • தமிழ்நாதமும் வருகிறது.

    By Anonymous Anonymous, At April 13, 2006 6:45 AM  

  • வாழ்த்துகள் காசி.

    By Blogger Nirmala., At April 13, 2006 6:56 AM  

  • Repeattu! :-)

    By Blogger ஜெ. ராம்கி, At April 13, 2006 8:25 AM  

  • Repeattu! :-)

    By Blogger ஜெ. ராம்கி, At April 13, 2006 8:25 AM  

  • வாழ்த்துக்கள் காசி! தமிழ் வருடப்பிறப்பில் கேட்கும் நல்ல செய்தி இது.

    தமிழ்மணம் (அட இது நம்ம வீடு தான்) மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்!

    By Blogger thiru, At April 13, 2006 8:53 AM  

  • Thanks for everyone who wished. Thambi and ananymous, thanks for highlighting the cases of puthinam & tamilnaatham. I have slightly modified the statement.

    (excuse me for the english)

    By Blogger Kasi Arumugam, At April 13, 2006 8:58 AM  

  • பத்தாயிரத்துக்குள் நுழைய வாழ்த்துகள் (என்னுடைய முந்தைய பதிவு: E - Tamil : Traffic Rank)

    By Blogger Boston Bala, At April 13, 2006 9:06 AM  

  • வாழ்த்துக்கள் காசி மற்றும் தமிழ்மணம் நிர்வாக குழுவினருக்கும். நான் வெறும் வாசகரே.தமிழ்மணத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.இதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு,உங்களின் நேரம் அனைத்துக்கும் நன்றி.
    .. aadhi

    By Anonymous Anonymous, At April 13, 2006 9:19 AM  

  • வாழ்த்துக்கள் காசி மற்றும் தமிழ்மணம் நிர்வாக குழுவினருக்கும். நான் வெறும் வாசகரே.தமிழ்மணத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.இதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு,உங்களின் நேரம் அனைத்துக்கும் நன்றி.
    .. aadhi

    By Anonymous Anonymous, At April 13, 2006 9:21 AM  

  • தனி மனிதன் உழைப்பால்
    தமிழ்மணத்திற்கு பெருமை
    தமிழ் இனத்திற்கே பெருமை
    வாழ்த்துக்கள் காசி அண்ணே!
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    By Blogger சிங். செயகுமார்., At April 13, 2006 9:23 AM  

  • வாழ்த்துக்கள் காசி. புத்தாண்டுப் பரிசாக இச்செய்தி தோன்றுகிறது. அனைத்துக்கும் மூல காரணம் உங்கள் மற்றும் நண்பர்களின் ஊக்கமும், உழைப்புமே.

    By Blogger Muthu, At April 13, 2006 9:28 AM  

  • இத்தனை முயற்சிகளுக்கும் காரணம் நிங்கள்தான் காசி..தமிழ் வளர பாடுபட்டுக்கொண்டிருக்கும் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

    அன்புடன்

    ரசிகவ் ஞானியார்

    By Blogger Gnaniyar @ நிலவு நண்பன், At April 13, 2006 9:33 AM  

  • இத்தனை முயற்சிகளுக்கும் காரணம் நிங்கள்தான் காசி..தமிழ் வளர பாடுபட்டுக்கொண்டிருக்கும் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

    அன்புடன்

    ரசிகவ் ஞானியார்

    By Blogger Gnaniyar @ நிலவு நண்பன், At April 13, 2006 9:35 AM  

  • அன்புடையீர்,
    சலியாத, தளராத உழைப்பிற்க்குக் கிட்டிய பரிசு. அதுவும் எங்களுக்குப் புத்தாண்டுப் பரிசு. ஏனெனில் நாங்களும் ஒரு அங்கம்தானே?
    இருப்பினும் உழைத்தவர்களுக்கு இதயங்கனிந்த பாராட்டுக்கள்; எம் வாழ்த்துகள் உரித்தாகுக.

    By Blogger ஞானவெட்டியான், At April 13, 2006 10:09 AM  

  • காசி
    தளத்தின் மேம்பாட்டிற்கு உழைப்பதுடன் மட்டுமல்லாமல் அங்கீகாரங்களையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வதிலும் நீங்கள் தனித்துவம் வகிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    By Blogger தாணு, At April 13, 2006 11:07 AM  

  • காசி,வணக்கம்!தாங்களிட்ட பதிவுகளுக்குள் இப்போதுதாம் சென்று வாசிக்கின்றேன்!இச் செய்தியை அறியுந் தறுவாயில், நானும் தமிழ் மணத்தை வாழ்த்துவதில் மகிழ்வடைகிறேன்.

    By Blogger Sri Rangan, At April 13, 2006 1:09 PM  

  • மென் மேலும் உயரங்கள்ஏறி சிகரங்கள் தொட வாழ்த்துக்கள்

    By Blogger மலைநாடான், At April 13, 2006 4:36 PM  

  • வாழ்த்துகள் காசி.

    Thamizmanam illaiyeel naangal illai.

    vaazka vazamudan

    By Blogger Unknown, At April 15, 2006 2:22 AM  

  • ஆயிரம் பேர் சேர்ந்திழுத்தாலும் தமிழ் வலம் வர தேர் உருவாக்கிய உங்களுக்கும் தமிழ்மண மற்ற நிர்வாகிகளுக்கும் சொல்லொணா நன்றிகள்!!

    இது தமிழ் புத்தாண்டுப் பரிசு. மேன்மேலும் பதிவர்கள் வளர்ந்து, பரிசுகளும் வளர இறைவனை வேண்டுகிறேன்.

    By Blogger மணியன், At April 15, 2006 2:35 AM  

  • Traffic Rank for muthamilmantram.com: 1,634,349

    See here:- www.alexa.com/data/details/main=3fq=3d&url=3dmuthamilmantram.com

    By
    Mani.

    By Anonymous Anonymous, At April 15, 2006 2:46 AM  

  • இனிய காசி,

    இப்போதுதான் பார்த்தேன்.

    உங்கள் உழைப்புக்கும்,விடாமுயற்சிக்கும், ஆர்வத்திற்கும் கிடைத்த வெற்றி இது.மற்ற விஷயங்கள் இவைகளுக்கு பின்னரே.

    போற்றுவார் போற்றினும், தூற்றுவார் தூற்றினும் கருத்தில் கொள்ளாது சாதனை தொடரட்டும்.

    என்றென்றும் அன்புடன்
    மூக்கு சுந்தர்

    By Blogger Mookku Sundar, At April 15, 2006 2:48 AM  

  • Fantastic. Congrats!!

    By Blogger டிபிஆர்.ஜோசப், At April 15, 2006 4:31 AM  

  • வாழ்த்துக்கள் காசி, தங்கள் உழைப்புக்கும், ஆர்வத்திற்கும் நன்றிகள் பல !
    என்றென்றும் அன்புடன்
    பாலா

    By Blogger enRenRum-anbudan.BALA, At April 15, 2006 6:19 AM  

  • சாதனை படைத்தமைக்கு வாழ்த்துகள்.

    உங்கள் சேவைக்கு நன்றிகள்.

    By Blogger பரஞ்சோதி, At April 15, 2006 1:29 PM  

  • ஐயா சதயம்,

    நீங்க என்ன ஆதிசங்கரர் சிஷ்யரா?மாயாவாதம்,அத்வைதம்ங்கற லெவலுக்கு போயிட்டிங்க?

    அடேங்கப்பா...கலக்கறீங்க போங்க

    போலி டோண்டு மாய பிம்பமா???

    அப்ப அம்மா,அப்பா,ஆத்தான்னு..ன்னு திட்டி அந்த மாயபிம்பத்து கிட்டருந்து கடுதாசி வருதே அதுவும் உண்மையா மாய பிம்பமா?

    சிகரத்துக்கு போறதுன்னா எது?அப்பன் ஆத்தாளை வையறதை கேட்டு சிரிச்சிட்டு இருக்கறதா சிகரத்துக்கு போறது?

    நாங்க எல்லாம் மானம் கவுரவத்தோட பொழைக்கறவங்க.

    அப்பன் ஆத்தாளை திட்டறதை கேட்டு சகிச்சுட்டு நிக்குற அளவுக்கு எருமைத்தோல் கிடையாது எங்களுக்கு.

    வந்துட்டாரு கருத்து சொதந்திர காவலரு கொடிய புடிச்சுட்டு....

    hate speech உலகத்துல எந்த நாட்டுலயும் குத்தம் தான்.

    இப்படிக்கு
    பேரா முக்கியம்?கருத்து சொதந்திரம் தானே முக்கியம்

    By Anonymous Anonymous, At April 15, 2006 9:59 PM  

  • 'ஆரோக்கியமான முரன் கருத்தாளர்களை வளர்த்தெடுக்க தமிழ்மணம் என்ன செய்துள்ளது என்பதை சிந்திக்க வேண்டுகிறேன்'

    போலிடோண்டு ஆரோக்கியமான முரண் கருத்தாளரா?

    ஐயோ மயக்கமே வருதே....

    சதயம் நீங்க எங்கியோ போயிட்டீங்க போங்க.

    எப்படி சார் இப்படி தொடர்ந்து கலக்குறீங்க?இதெல்லாம் உங்களால மட்டும் தான் முடியும்.

    தொடர்ந்து கலக்குங்க.

    இப்படிக்கு
    ஆரோக்கியமான முரண் கருத்தாளன்

    By Anonymous Anonymous, At April 15, 2006 11:08 PM  

  • congrats!
    best wishes for further acievements

    By Blogger siva gnanamji(#18100882083107547329), At April 15, 2006 11:45 PM  

  • வாழ்த்துக்கள்!

    By Blogger Pot"tea" kadai, At April 16, 2006 12:26 AM  

  • காசி அவர்களுக்கு வாழ்த்துக்கள் (ஊருடன் ஒத்து)

    நீங்கள் எல்லாரும் நினைப்பது போல் "அலெக்சா" மிகத்துல்லியமாக அளந்து பட்டியலிடுகிறது என்று கூறிவிடமுடியாது.

    ஏனெனில் எமது தளத்தை சில மாதங்களுக்கு முன்னர் 50000 இற்குள் காட்டியது. இப்ப 81910 காட்டுகிறது.ஆனால் எமது தனிப்பட்ட வாசகர் வருகை புள்ளிவிபரத்தில் இதற்கு மாறாக உள்ளது, அதாவது வாசகர் வருகை கூடியுள்ளது.

    இரண்டாவது விண்டோஸ் அடிப்படையை சார்ந்த பக்கங்களை,வலைத்தளங்களை முன்னிலைப்படுத்துகிறது. மற்றைய தளங்களை (php & other base) அதன்பின்னர்தான் எடுத்துக் காட்டுகிறது.

    மூன்றாவதாக நீங்கள் இன்னமும் info.txt ஐ இணைக்கவில்லை.இதுவும் உஙக்ளுடைய "அலெக்சா" பட்டியல் முன்னேற்றத்திற்கு தடங்கல் என்று நினைக்கிறேன்.

    இறுதியாக ஒரு தளத்திற்கு வரும் வாசகர்களில் "அலெக்சா" ரூல்பார் வைத்திருக்கும் வாசகர்கள் எத்தனைபேர் என்பதும் முக்கிய காரணமாகும்.

    நீங்கள் செய்யும் தமிழ்ச் சேவை அளப்பரியது என்பது எல்லா நல்ல உள்ளங் கொண்ட இணையத் தமிழர்களுக்கும் தெரியும், ஏற்றுக்கொண்ட ஒன்று.

    இந்நிலையில் "அலெக்சா" வை நீங்கள் துணைக்கு அழைக்கத்தேவையில்லை என்பது எமது மிகவும் தாழ்மையான கருத்து.

    என்ன புதிதாக வந்திருக்கும் தமிழ் வலைப்பதிவு திரட்டியைவிட 10 மடங்கு முன்னால் நிற்கிறீர்கள் என்று மகிழ்ந்து கொள்ளலாம் அவ்வளவுதான்.

    இவையாவும் எமது தனிப்பட்ட கருத்து.

    வாழ்த்துக்களுடன்,
    து.குமரேசன்

    By Blogger விருபா - Viruba, At April 16, 2006 1:20 AM  

  • வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. (தனித்தனியே பெயர் சொன்னால் பட்டியல் பெரிதாகிவிடும், மன்னிக்க).

    சதயம் இன்னும் கொஞ்சம் நீங்கள் விழியைத்திறந்து பாருங்கள். //இன்று தமிழ்மணத்தில் மாற்றுக் கருத்துக்கள் அல்லது முரன் கருத்துக்களுக்கு உரிய மரியாதையோ அங்கீகாரமோ இல்லை என்பது உண்மையான உண்மை.// இது எப்படி உண்மையான உண்மை என்று விளக்குவீர்களா? கருத்துக்களை நாங்கள் மட்டுறுத்தினால் கூட தணிக்கை எனலாம், இங்கே பதிவர்களெல்லாரும் அல்லவா மட்டுறுத்துகிறார்கள்? ஹும்... ஒன்றும் சொல்வதற்கில்லை.

    குமரேசன், தகவல்களுக்கு நன்றி,. நீங்கள் சொன்னபடியே அலெக்சா வரிசைஎண் அத்தனை துல்லியமானதல்லதான்.

    By Blogger Kasi Arumugam, At April 16, 2006 2:28 AM  

  • அமேசானிலும் 'தமிழ்மண'க்கச் செய்கிறீர்கள்.வாழ்த்துக்கள் சகோதரா!

    By Blogger இப்னு ஹம்துன், At April 16, 2006 3:33 AM  

  • நல்லா இருங்க அண்ணாச்சி!!
    'தமிழ் மணம்' மேலும் வளர்ந்தோங்க வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்!

    சாத்தான்குளத்தான்

    By Anonymous Anonymous, At April 16, 2006 4:20 AM  

  • உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்,உங்களால் பல வலைபதிவர்களின் கருத்துக்கள் தமிழ் வாசகர் வட்டத்தை எளிதாக சென்று சேர்கிறது.

    By Blogger Sami, At April 16, 2006 6:13 AM  

  • காசி சாருக்கு வணக்கம்.

    மகிழ்ச்சியான செய்தி ஐயா! இந்த வலைப்பூ வழி தமிழ்மணத்தில் அடியேனும் சேர்ந்துள்ளேன் என்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

    தங்களின் அளப்பறிய சேவை தொடர
    நல்வாழ்த்துக்கள், காசி சார்.

    அன்புடன்,
    எல்.ஏ.வாசுதேவன்,
    மலேசியா

    By Blogger Vasudevan Letchumanan, At April 16, 2006 6:59 AM  

  • காசி சாருக்கு வணக்கம்.

    மகிழ்ச்சியான செய்தி ஐயா! இந்த வலைப்பூ வழி தமிழ்மணத்தில் அடியேனும் சேர்ந்துள்ளேன் என்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

    தங்களின் அளப்பறிய சேவை தொடர
    நல்வாழ்த்துக்கள், காசி சார்.

    அன்புடன்,
    எல்.ஏ.வாசுதேவன்,
    மலேசியா

    By Blogger Vasudevan Letchumanan, At April 16, 2006 7:00 AM  

  • சந்தோஷமாக இருக்கிறது.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    By Blogger தருமி, At April 16, 2006 8:46 AM  

  • வாழ்த்துக்கள் காசி.. மேலும் பல வைரங்கள் உங்கள் மகுடத்தில் பதிக்கப்படட்டும்!

    By Blogger ஜென்ராம், At April 16, 2006 10:05 AM  

  • சந்தோசமான செய்தி. நன்றி.
    நானும் தமிழ்மணத்தோடு இணைந்திருக்கும் ஒரு வலைப்பதிவாளர் என்ற நிலையில்,
    தமிழ்மணத்தின் இந்த சாதனையில் பெருமையடைகிறேன்.

    By Blogger கடல் கடந்த தமுமுக, At April 16, 2006 10:21 AM  

  • சதயம், வாதத்தில் வென்றது நீங்களாகவே இருக்கட்டும். இதுபற்றி உங்களிடம் விவாதிக்க எனக்கு நேரமும் விருப்பமும் இல்லை.

    By Blogger Kasi Arumugam, At April 16, 2006 9:43 PM  

  • வாழ்த்துகள்!
    வளர்க!

    By Blogger VSK, At April 16, 2006 10:08 PM  

  • ஆகா! என்னே ஒர் நற்செய்தி. நாமெல்லாம் ஒன்று சேர்ந்து இன்னும் நிறைய சாதிக்கவேண்டும் என்பதை இப்பொன்னான தருனத்தில் நினைவூடுகிறேன்.

    (செ, தேர்தல் ஜூரம் நம்மளையும் புடிச்சுதே...)

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

    By Blogger நந்தன் | Nandhan, At April 16, 2006 10:13 PM  

  • எல்லோரையும் மிரட்டி கட்டாய மட்டுறுத்தல் செய்யச் சொல்லிவிட்டு இப்போது எழுத்துச் சுதந்திரமென காசி பினாத்துவது ஜனநாயகக் கேலிக்கூத்து.

    போலி திட்டியது தவறாக இருக்கலாம். ஆனால் அவன் எல்லோரையும் ஏன் திட்டுவதில்லை என மற்றவர்களும் சிந்திக்க வேண்டும்!

    உண்மையை சொன்னால் சதயம் அவர்களும்கூட போலியால் திட்டப்பட்டார் என்பதுதான் உண்மை. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்திய கதைதான்.

    தேன்கூடு மாதிரி சுதந்திரமாக வரும்போதுதான் தமிழ்மணம் நன்றாக இருக்கும். இதில் போட்டிகளில் பங்கேற்பது வென்றுவிட்டோம் என வெற்று மார்த்தட்டிக் கொள்வது சிறப்பாக எனக்குத் தெரியவில்லை.

    ஒரு சாராரிடம் நல்ல பெயரும் மறு சாராரிடம் கெட்ட பெயர் எடுப்பதுதான் காசியின் எண்ணம் என்றால் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

    By Anonymous Anonymous, At April 16, 2006 11:18 PM  

  • காசி,
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    குறை சொல்வதற்கு எப்போதும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும் .அதை தாண்டி சாதனைகள் படைப்போம்.

    By Blogger ஜோ/Joe, At April 16, 2006 11:55 PM  

  • //போலி திட்டியது தவறாக இருக்கலாம். ஆனால் அவன் எல்லோரையும் ஏன் திட்டுவதில்லை என மற்றவர்களும் சிந்திக்க வேண்டும்!//
    போலி ஒரு பெரிய மகான்.அவரின் லீலா வினோதங்களின் பின்னிருக்கும் மகத்தான ரகசியங்களை அனைவரும் சிந்தித்து தெரிந்து கொள்ள வேண்டுமாக்கும்?

    By Anonymous Anonymous, At April 16, 2006 11:57 PM  

  • 'அப்புறம் திரு.போலி டோண்டு அவர்களை ஆரோக்கியமான முரன் கருத்தாளன் என நான் எப்போதும் சொன்னதில்லை...அவர் பாணியில் அவரது கருத்துக்களை வலியுறுத்துகிறார் என்று வேண்டுமானால் சொல்லியிறுக்கிறேன்'

    "திரு போலி டோண்டு அவர்கள்.."

    என்ன மரியாதை.என்ன பணிவு.

    உள்ளம் உருகுதய்யா,சதயம் உன்மொழி கேட்கையிலே

    பெரு மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க ராஜ கம்பீர வீர தீர பராக்கிரம போலி டோண்டு அவர்கள் என்று அடுத்த மடலில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    அப்புறம் அதென்ன 'அவர் பாணி?"

    அதை கொஞ்சம் விளக்கமா சொல்லலாமே?

    ஹிட்லரும் யூதர்களை 'அவர் பாணியில் கவனித்துக்கொண்டார்' என்று சொல்லலாம்.அப்படித்தான் நாஜிக்களும் பிரச்சாரம் செய்தார்கள்.நீங்களும் அதை தான் இங்கு செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    By Anonymous Anonymous, At April 17, 2006 12:37 AM  

  • சாம்பார் என்பவர் எழுதிய மறுமொழி (ஆட்சேபத்துக்குரியவை காசியால் மாற்றப்பட்டுள்ளன)
    ---------------------------------------
    ஆமாம் அறிவுகெட்ட **** அபிமானி அனானி அவர்களே.

    போலி என்ன எல்லோரையுமா திட்டுகிறார்? உன்போன்ற முரட்டு வெறிபிடித்த நாய்களை மட்டும்தானே திட்டுகிறார். எனவே எங்களுக்கு அவர் குலவிளக்குதான். நாங்கள் அவரின் ரசிகர்கள்தான். இதனைச் சொல்ல எங்களுக்கு வெட்கமாக இல்லை. காரணம் நாங்கள் சொல்ல நினைப்பதை அவர் சொல்கிறார். காசியும் பார்ப்பனர்களோடு சேர்ந்து கூத்தடிக்கலாம். ஆனால் நீதி என்றைக்குமே தோற்காது.

    **** ஜாதியை இந்த தமிழ் இணைய உலகில் வளர்ப்பதுதான் ****களின் யுத்தி என்றால் அதனை அடியோடு வெறுத்து தகுந்த பதிலடி கொடுப்பதுதான் எங்களீன் முழு வேலையும்.

    உன்னால் முடிந்ததைப் பார், அறிவு கெட்ட *****!
    --------------------------------------

    By Blogger Kasi Arumugam, At April 18, 2006 3:37 AM  

  • போலி என்ன எல்லோரையுமா திட்டுகிறார்? உன்போன்ற முரட்டு வெறிபிடித்த நாய்களை மட்டும்தானே திட்டுகிறார்/

    தீவிரவாதி என்ன எல்லோரையுமா கொல்கிறான்?அவனுக்கு பிடிக்காதவர்களை தானே கொல்கிறான்?

    எனவே எங்களுக்கு அவர் குலவிளக்குதான்/

    குலம் விளங்கின மாதிரிதான்

    நாங்கள் அவரின் ரசிகர்கள்தான். இதனைச் சொல்ல எங்களுக்கு வெட்கமாக இல்லை./

    போலி வெட்கம் கெட்டவன் என்பது ஊருக்கே தெரியுமே?

    காரணம் நாங்கள் சொல்ல நினைப்பதை அவர் சொல்கிறார்./

    சொல்ல நினைப்பவரும் சொல்பவரும் ஒருவரே

    ஆனால் நீதி என்றைக்குமே தோற்காது./

    சாத்தான் வேதம் ஓதக்கூடாது


    அதனை அடியோடு வெறுத்து தகுந்த பதிலடி கொடுப்பதுதான் எங்களீன் முழு வேலையும்./


    ஐயோ பாவம் வேறு வேலை இல்லை போலிருக்கிறது.

    ஓய்வு நேரத்தில்
    கம்பி எண்ண, களி திண்ண பழகிக்கொள்வது நல்லது.பின்னாளில் உபயோகப்படும்.

    By Anonymous Anonymous, At April 19, 2006 8:27 PM  

  • அன்பின் சகோதரருக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    எல்லாம் வல்ல அல்லாவின் இறைப்பார்வை எப்போதும் தங்கள்மீதும் தங்கள் குடும்பத்தின்மீதும் செய்தொழிலின்மீது எப்போதும் நிறைந்து இருக்கட்டும்.

    மதம் என்பது என்னைப் பொருத்தவரையில் இறைவனைச் சென்றடையும் மார்க்கம். அவரவர்களுக்குப் பிடித்த மார்க்கத்தினில் இறைவனைச் சென்றடைகிறார்கள். இந்துவும் இஸ்லாமும் கிறிஸ்துவர்களும் மற்ற மதத்தினரும் தமக்குப் பிடித்த வழிகளில் தத்தமது இறைவனிடம் செல்கின்றனர். நமக்குப் பிடித்த வழிகளில் நாம் இறைவனிடம் செல்வது தவறு ஆகாது. நம் மதம் குறித்த நல்ல கருத்துக்களை பரப்புவதில்கூட தவறு இல்லை. ஆனால் மற்ற மதங்களைக் கேவலமாக சித்தரித்தல் ஒருபோதும் கூடாது. இதுதான் மிகவும் தவறான செயல். நமக்குப் பிடிக்காதது மற்றவர்களுக்குப் பிடித்து இருக்கலாம். நம் பார்வையில் தவறு என்று நினைப்பது அடுத்தவர் பார்வையில் சரியாக இருக்க வாய்ப்புண்டு. எல்லோர் பார்வையிலும் சரியாகாவே எல்லாமும் தெரிந்தால் பின்னர் நீதிமன்றம் என்ற ஒன்று எதற்காக? எனவே நாம் சொல்ல வந்த கருத்தினை மிகவும் நல்ல வழியில் யார் மனதும் புண்படாதவாரு சொல்ல வேண்டும்.

    நான் எழுதிய சில கருத்துக்களால் சிலர் புண்பட்டது உண்மை. அவ்வாறு புண்பட்டவர்கள் ஜாதியை வளர்த்த பிராமணர்கள். எந்த இஸ்லாமியராவது என்னால் பாதிக்கப் பட்டாரா? எந்த கிறிஸ்துவராவது என்மேல் கோபம் கொண்டிருப்பதாக உங்களால் சொல்ல முடியுமா? எந்த புத்த மதத்தினராவது என்னால் பாதிப்புக் குள்ளானார்களா? பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் பிராமனர்கள்.

    எனது ஜாதி மட்டுமே இந்த உலகத்தில் பெரிய ஜாதி என்று மார்தட்டியவர்கள். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது விஞ்ஞான யுகம். 21ம் நூற்றாண்டு. நிலவிலும் சந்திரனிலும் செவ்வாயிலும் காலடி எடுத்து வைத்து வீடு கட்டலாமா, காலிமனை விற்பனை செய்யலாமா என ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது நான் அய்யங்கார் என்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் நான் பூணூல், குடுமி வைத்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்றும் டோண்டு சொன்னதும் அதற்கு பல பார்ப்பனர்களின் ஆதரவு பின்னூட்டமும் எங்களை சினம் கொள்ள வைத்தது. பல முறை நாங்களும் சொல்லிப் பார்த்தோம். சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளின் கடைசி முயற்சியாகத்தன் எங்கள் தாக்குதல் தீவிரமானதே தவிர எடுத்தவுடன் கவிழ்ப்பதற்கு நாங்கள் ஒன்றும் சிறு குழந்தை அல்ல!

    இஸ்லாத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் தனித்தனியாக பிரியாமல் அனைவரும் ஒன்றாக இருந்து இஸ்லாமியம் பேணுகின்றனர். ஜியா என்றும் சன்னி என்றும் நமது நட்டைப் பொருத்தவரையில் சண்டை ஏற்பட்டதில்லை. அதேபோல கிறிஸ்துவர்களுக்குள்ளும் கத்தோலிக் என்றும் ப்ராட்டஸ்டண்டு எனவும் பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் அடித்துக் கொண்டு நான் பார்த்தது இல்லை.

    ஆனால் இந்த இந்து மதத்தில் மட்டும் பார்ப்பனர்கள் மற்ற எல்லோரையும் தீண்டத்தகாதவர்கள் என்றும் பிறப்பால் நீ தாழ்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். பிறக்கும் குழந்தை தெய்வத்திற்கு சமமானது. எல்லாக் குழந்தையும் தெய்வ. அப்படி இருக்கும்போது தலித் வீட்டில் பிறக்கும் குழந்தையும் அய்யங்கார் வீட்டில் பிறக்கும் குழந்தையும் ஒன்றேதான். ஜாதியை அரசர்கள் காலத்தில் முதலில் அறிமுகப்படுத்தி தண்ணீர் ஊற்றி வளர்த்தது ஆரியர்களாக வந்த பார்ப்பனர்கள்தான். இதனை பலரும் எழுதி உள்ளனர். வரலாற்றில் தகுந்த சான்றுகள் உண்டு. ஜாதியை வளர்த்தவர்கள் தலித்தோ தாழ்த்தப்பட்டவரோ இல்லை.

    இங்கே டோண்டு என்ற பெயரில் எழுதும் கிழ மிருகத்துக்கு சோ என்ற பார்ப்பன பத்திரிக்கையாளனைப் பிடிக்குமாம். சோ பற்றி முத்து(தமிழினி) முதல் தங்கமணி, கறுப்பு வரை எழுதி இருக்கின்றனர். டோண்டுவுக்கு ராஜாஜியை ரொம்பப் பிடிக்குமாம். ராஜாஜியின் குலக்கல்விமுறை பெரும் கண்டனத்துக்கு உள்ளானதை பல தோழர்களும் அறிவீர்கள்.

    டோண்டுவுக்கு இஸ்ரேல் பிடிக்குமாம். அதனால் பாலஸ்தீனத்தை வெறுக்கிறாராம். ஏன் இஸ்ரேலைப் பிடிக்கிறது என்று கேட்பவர்களுக்கு தகுந்த பதில் இல்லை. பாலஸ்தீனம் இஸ்லாமிய நாடு என்ற ஒரே ஒரு விஷயத்தினால் மட்டுமே டோண்டுவுக்கு இஸ்ரேலைப் பிடித்து இருக்கிறது! தவிர டோண்டு போன்ற பல பார்ப்பனர்களுக்கும் அமெரிக்காவைப் பிடித்து இருப்பதும் ஒரு காரணம். இஸ்ரேல் அமெரிக்காவின் நண்பன் என்பதால் இவருக்கு இஸ்ரேலைப் பிடித்து இருக்கிறது.

    இந்திய நாட்டில் படித்து தேறி அமெரிக்காவில் பணிபுரிந்து காசை மூட்டை கட்டுவது என்பது பல பார்ப்பனர்களின் வாடிக்கை. சோறு போடும் நாடு என்பதால் அவர்களுக்கு இந்தியாவைவிட அமெரிக்காவைப் பிடித்து இருக்கிறது. இனிமேல் அவர்கள் அமெரிக்கா என் தாய்நாடு என்று சொல்லிக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! வந்தேறிகுடிகளான ஆரியர்கள் காசுக்காக எதையும் செய்யும் மிருகங்கள். அமெரிக்காவில் வேலை, வசதி என்றால் தம் தாய்நாட்டுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதுதான் உண்மை.

    By Anonymous Anonymous, At April 19, 2006 9:32 PM  

  • காசிக்கு பாராட்டுகள். அதே வேளையில், சதயம் சொல்வதை வழிமொழிகிறேன்.

    //இன்று தமிழ்மணத்தில் மாற்றுக் கருத்துக்கள் அல்லது முரன் கருத்துக்களுக்கு உரிய மரியாதையோ அங்கீகாரமோ இல்லை என்பது உண்மையான உண்மை.ஆரோக்கியமான முரன் கருத்தாளர்களை வளர்த்தெடுக்க தமிழ்மணம் என்ன செய்துள்ளது என்பதை சிந்திக்க வேண்டுகிறேன்.//

    ஏனெனில் போலி டோ ண்டு மட்டுமே இங்கு தடை செய்யப்படவில்லை. காசிக்கும் காசியின் நண்பர்களுக்கும் முரண்பட்ட எந்த கருத்தும் தமிழ்மணத்தில் வருவதில்லை. அது எனக்கு எந்த வித பிரச்னையில் இல்லை என்றாலும், போலி டோண்டு மட்டுமே மட்டுறுத்தப்படுகிறார் என்ற பிம்பம் இங்கு அமைக்கப்படுகிறது. அது பொய் என்பதற்காகவே இந்த பதில்.

    ஆரோக்கியம்

    http://ennamopo.blogsome.com
    Those who forget the past are condemned to repeat it.

    By Blogger மாமன்னன், At April 19, 2006 10:06 PM  

  • வாழ்த்துக்கள் திரு. காசி
    மகிழ்ச்சி

    By Blogger ENNAR, At April 19, 2006 10:45 PM  

  • அன்புள்ள காசி,

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    சாம்

    By Blogger Sam, At April 19, 2006 11:01 PM  

  • Tharaniyengum " தமிழ் மணம் " Parava Ulam Kanintha வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    துபாய் ராஜா.

    By Anonymous Anonymous, At May 09, 2006 11:52 PM  

  • வாழ்த்துகள் காசி மிக தாமதமாக பின்னூட்டம் இடக் காரணம் பதிவை இப்பொழுதுதான் கண்டதால். தமிழ் மொழிக்காக இது போன்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டு வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    By Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்), At May 10, 2006 12:31 AM  

  • காசி ஐயா, வாழ்த்துகள்
    தாமதமாக பின்னூட்டம் இடக் காரணம் இப்பொதுதான் அறிவிப்பை பார்த்தேன்.

    வாழ்த்துகள்.

    By Blogger சிவமுருகன், At May 10, 2006 6:37 AM  

  • வாழ்த்துக்கள் காசி அவர்களே. எதேச்சையாக இன்றுதான் இப்பதிவையே பார்த்தேன். தாமதமாக இங்கு வந்ததற்கு மன்னிக்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    By Blogger dondu(#11168674346665545885), At May 31, 2006 10:49 AM  

  • சந்தோஷமாக இருக்கிறது.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    suvanappiriyan

    By Blogger suvanappiriyan, At June 03, 2006 6:47 AM  

  • மென்மேலும் வளர்ந்து இன்னும் சிகரங்களைத் தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்

    By Blogger Unknown, At June 03, 2006 6:58 AM  

  • வாழ்த்துக்கள்.

    By Blogger Radha N, At June 03, 2006 10:07 AM  

  • தமிழ்மண வாசகன்; ரசிகன் எனும் வகையில்; உங்கள் சேவைக்குத் தலைவணங்குகிறேன்.
    பல கருத்துக்களையும்; நண்பர்களையும் தந்து,;என் கருத்துப் பரிமாற்றத்துக்கும் இடம் தந்த சேவை இது.
    தொடர்ந்து வெற்றி நடை போடட்டும்.
    யோகன் -பாரிஸ்

    By Anonymous Anonymous, At June 03, 2006 11:14 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home