தமிழ்மணம் அறிவிப்புகள்

Wednesday, June 28, 2006

Template Improvement Tool

தமிழ்மணம் அளிக்கும் தமிழ் அடைப்பலகை மேம்படுத்தும் கருவி (Template Improvement Tool).

அழகான ஒரு அடைப்பலகை கிடைக்கிறது; அதைப் பயன்படுத்த ஆசை; ஆனால் 'யார் இனி இதை எடுத்து தமிழுக்குத் தக்கதாக்கி, சொற்களைத் தமிழாக்கி, பதிவு கருவிப்பட்டை நிரலைச் சேர்த்து, தொடுப்புகளைச் சேர்த்து....' என்று யோசிக்கிறீர்களா? அந்தக் கவலை இனி இல்லை.

1000வது வலைப்பதிவு தமிழ்மணத்தில் சேர்க்கப்படுவதை முன்னிட்டு தமிழ்மணம் வழங்கும் இந்தப் புதிய கருவி மூலம் எந்த ஆங்கில ப்ளாக்கர் அடைப்பலகையையும் தேவையான மாற்றங்கள் செய்து உடனடியாக புதிய அடைப்பலகை செய்யலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் மூல அடைப்பலகையின் நிரலை ஒத்தி எடுத்து ஒட்டவேண்டியது, தேவைப்படும் மாற்றங்களைத் தெரிவு செய்யவேண்டியது, அவ்வளவுதான் ஒற்றைச் சொடுக்கில் புதிய அடைப்பலகை தயார்.

இந்தக் கருவி செய்யும் மாற்றங்களால் கிடைக்கும் பலன்கள் கீழே தரப்பட்டுள்ளன. (நன்றி: காக்க-காக்க)
  1. View->Encoding-> Unicode (UTF-8) என்று மெனுவில் தேர்வுசெய்யாமலேயே எடுத்த உடனே வலைப்பூ தமிழில் தெரியும். பலர் வலைப்பதிவில் இந்தப் பிரச்னை இல்லை என்றாலும், இன்னும் சிலருடையது உடனே தெளிவாகத் தெரியாமல் பூச்சி காட்டும். இனி அந்தத் தொல்லை இல்லை.
  2. விண்டோஸ் 98 கணினியிலும் யுனிகோடு எழுத்துரு (உ.ம். லதா) இல்லாமலேயே தமிழில் தெரியும். இப்போது பலருடயது உலாவி மையங்களில் கட்டம் கட்டமாய்த் தெரிகிறது. இயங்கு எழுத்துரு நுட்பத்தால் (Dynamic Font technology) இது நடக்கிறது. (சகோதரர் உமருக்கு நன்றி)
  3. கிழமை, மாதம் போன்றவையும் தமிழில் தெரியும். இந்த ஜாவாஸ்க்ரிப்ட் எழுதினவருக்கு நன்றி. (யார் என்று சரியாகத் தெரியவில்லை)அது க்ருபாஷங்கரும் சுரதாவும் என்று ஒரு நண்பர் தகவல் அனுப்பியுள்ளார்.அவர்களுக்கு நன்றி.
  4. முக்கியமான தமிழ் வலைப்பதிவு/விக்கிப்பீடியா தளங்களுக்கு சுட்டியும் சேர்க்க வசதி.
  5. Links, Archives, About Me, Comments போன்ற முக்கியமான தலைப்புகள் தமிழில் இருக்கும். FireFox-ல் உடையாமல் தெரியும்
  6. மறுமொழிகள் (பின்னூட்டங்கள்) பகுதியில் ஒருத்தர் எழுதியதுக்கும் இன்னொருத்தர் எழுதியதுக்கும் இடையில் ஒரு கோடு வருமாறு ஏற்பாடு. பலசமயம் இந்தக் கோடு இல்லாத டெம்ப்ளேட்டுகளால் யார் என்ன எழுதினார் என்று குழப்பம்.
  7. தமிழ்மணம் அளிக்கும் மின்னூல் (pdf) வசதிக்கான குறிச்சொற்கள் (tags) சரியான இடத்தில் சேர்த்தல்.
  8. தமிழ்மணம் கருவிப்பட்டைக்கான நிரல்துண்டும் சரியாக சேர்க்கப்படுதல்.
  9. Comments பகுதியில் Homeக்கு சுட்டி இருக்கும், அதுவும் தமிழில் இருக்கும்

பயன்படுத்தி குறை-நிறை தெரிவியுங்கள்.

35 Comments:

  • 'முடிந்த' வரையில் நல்ல சேவைகளையே வழங்குறீர்கள் :)

    By Blogger கோவி.கண்ணன், At June 28, 2006 10:53 PM  

  • அட்டகாசம்..
    உங்கள் சேவையும் திறமையும் வியக்க வைக்கிறது.
    நன்றி..
    நன்றி..
    நன்றி...

    By Blogger பாரதி தம்பி, At June 28, 2006 10:53 PM  

  • நல்ல முயற்சி. நன்றியும் வாழ்த்தும்.

    எனது சோதனையில் உடன் தெரிந்த குறைகள்.

    1. முன்னைய பதிவுகள் காட்டும்போது தலைப்பை மட்டும் காட்டாது அதற்குரிய இணைப்பையும் காட்டுகிறது.
    http://temptest11.blogspot.com/2006/05/blog-post_27.html">அமைதி முயற்சிகள் முடக்கத்துக்கு மகிந்த அரசாங்கமே காரணம்
    2. அதேபோல் பெட்டகம் பகுதியிலும் இணைப்புடன் சேர்த்துக் காட்டுகிறது.
    http://temptest11.blogspot.com/2006_05_01_temptest11_archive.html">May 2006
    3. அதைப்போல் மேலும் பல விசயங்கள் அவற்றிற்குரிய இணைப்பு முகரியோடு காட்டப்படுகிறது.
    permanent link, மறுமொழிகள்

    By Blogger வசந்தன்(Vasanthan), At June 28, 2006 11:06 PM  

  • நன்றி காசி,

    எங்கள் வலைப்பதிவில் ஏதோ கோளாறு உள்ளது என்று நினைக்கிறேன்

    By Blogger விருபா - Viruba, At June 28, 2006 11:07 PM  

  • நன்றி காசி,

    எங்கள் வலைப்பதிவில் ஏதோ கோளாறு உள்ளது என்று நினைக்கிறேன்

    By Blogger விருபா - Viruba, At June 28, 2006 11:07 PM  

  • தமிழ் வலைப்பதிவுகளில் இம்முயற்சி இன்னொரு மைல்கல் என்று சொல்லலாம். இம்முயற்சி இன்னும் அனேகரை வலைப்பதியவும், இணைய மையங்களை பயன்படுத்துவோரை வாசிக்கவும் தூண்டும் விதத்தில் பயன்படும். 1000மாவது வலைப்பதிவு என்பது இது போன்ற முயற்சிகளாலேயே சாத்தியமாகி இருக்கிறது என்று எண்ணும் போது உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிக்கொள்கிறேன்.

    By Blogger Thangamani, At June 29, 2006 1:39 AM  

  • காசி,

    // 1000வது வலைப்பதிவு தமிழ்மணத்தில் //

    சாதனைக்கு வாழ்த்துக்கள்!

    கருவி அருமையாக வேலை செய்கிறது. வேண்டியதை உருவிக்கொள்கிறேன்! :)

    By Blogger ilavanji, At June 29, 2006 5:00 AM  

  • செயல்முறை இன்னும் சற்று கணினி புதுமுகங்களுக்கும் பிளாக்கர் அறிமுகங்களுக்கும் எளிதாகவும் விரிவாகவும் ஆக்கியிருக்கலாம். உ-ம்: எதை வெட்டி ஒட்ட வேண்டும்.. கிடைத்த அடைபலகையை என்ன செய்ய வேண்டும்

    சற்றே பிளாக்கரின் ஆங்கில சொற்களையும் உடன் கொடுத்திருக்கலாம்.

    உங்கள் முயற்சிகள் அனைவருக்கும் திருவினையாக்குகின்றன.நன்றி.

    By Blogger மணியன், At June 29, 2006 9:09 AM  

  • காசி, முன்பு blogger உபயோகித்தபோது, பழைய கணினிகளில் dropdown menuவில் உள்ள தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் கட்டம் கட்டமாகத் தெரியும் - பதிவின் பிற பகுதிகள் முழுதும் இயங்கு எழுத்துரு மூலம் சரியாகத் தெரிந்தால் கூட. என்னுடைய பதிவிலும், blogger வலைப்பதிவு வைத்திருந்து, archivesஐ dropdown menuவில் வைத்திருப்பவர்களின் பதிவுகளிலும் பழைய கணினிகளில் இந்தப் பிரச்னையைப் பார்த்திருக்கிறேன் - இது எவ்வளவு முக்கியமென்று தெரியவில்லை - இதற்கு ஏற்கனவே தீர்வு சொல்லப்பட்டிருந்து நான் தவறவிட்டிருக்கலாம் - அப்படியிருப்பின் சுட்டிக்காட்டவும். ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன்.

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    By Blogger சன்னாசி, At June 29, 2006 11:40 AM  

  • காசி அண்ணா,
    இனிப்பான செய்தியைத் தந்தமைக்கு மிக்க நன்றி. உங்களின் இவ் அரிய சேவைகளுக்கு எப்படிக் கைமாறு செய்வதென்று தெரியாது.

    தமிழ்மணத்தில் 1000 பதிவுகள்?

    Wow! இது ஒரு சாதனை மைல் கல். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    By Blogger வெற்றி, At June 29, 2006 12:31 PM  

  • Dear Kasi,
    Thanks, I will try and let you know !
    Congrats for reaching the magical mark of 1000 :)

    By Blogger enRenRum-anbudan.BALA, At June 29, 2006 12:38 PM  

  • கோவி. கண்ணன், ஆழியூரான்: நன்றி. 'முடிந்த'வரை தொடருவோம்:-)

    வசந்தன்: ப்ளாக்கர்.காம் தயாராக அளிக்கும் பல அடைப்பலகைகளை சோதித்ததில் பிழை தெரியவில்லை. நீங்கள் சுட்டியது புதிதாக இருக்கிறது.

    விருபா: சொல்லவருவது என்னவென்று விளங்கவில்லை.

    தங்கமணி://1000மாவது வலைப்பதிவு என்பது இது போன்ற முயற்சிகளாலேயே சாத்தியமாகி இருக்கிறது // பாராட்டுக்கு நன்றி. 'இது போன்ற முயற்சிகளாலும்' என்று கூறிக்கொள்ளவே விரும்புகிறேன்.

    இளவஞ்சி: நன்றி. //வேண்டியதை உருவிக்கொள்கிறேன்// உங்களுக்கு இல்லாததா :-)

    மணியன்: யோசனைக்கு நன்றி. இயன்றபோது நடைமுறைப்படுத்தப்படும்.

    சன்னாசி: நன்றி.
    நீங்கள் குறிப்பிட்ட குறைக்குத் தீர்வு அடைப்பலகையில் உள்ள இந்த வரிகளில் அடங்கியிருக்கிறது://

    a, p, body, ul, li, h1, h2, h3, h4, td, th, textarea, input, select, button, option {font-family: Latha, TSCu_InaiMathi, TheneeUniTx, TSCu_paranar, Verdana, Geneva, Arial, Helvetica, sans-serif;}

    //

    வெற்றி, பாலா: நன்றி.

    By Blogger Kasi Arumugam, At July 02, 2006 10:39 AM  

  • I have some problems.It does not work.

    By Blogger ரவி ஸ்ரீநிவாஸ், At July 02, 2006 10:58 AM  

  • வாழ்த்துக்கள்

    By Blogger மரத் தடி, At July 02, 2006 10:05 PM  

  • //http://robinhoot.blogspot.com//

    இந்த தளத்தில் மறுமொழிகள் இடுங்கள் ஆனால் பிரசுரிக்கப்படாது என ராபின்ஹூட் என்பவர் எழுதி இருக்கிறார். இவர் வேறு எந்த பதிவும் எழுதவில்லை. ஆனால் பொன்ஸ், நாமக்கல்சிபி, நாகைசிவா போன்ற சிலரின் பதிவுகளில் மட்டுமே பின்னூட்டம் இடுகிறார். இவர்களுக்கும் ராபின்ஹூட் என்ற இந்த ஆபாச பதிவருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. இது தவிர பலரின் வலைப்பதிவுகளிலும் தன் பெயர் போட்டே அநாகரீகமான அசிங்கமான பல பின்னூட்டங்களை எழுதுகிறார்.

    நிலைமை இப்படி இருக்க இவருடைய வலைப்பதிவை தமிழ்மணம் இணைத்தது சரியல்ல என்பது எனது கருத்து. தமிழ்மணம் இவரை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழ்நாற்றம் ஆகிவிடும்.

    கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    By Blogger வால்டர், At July 10, 2006 11:47 PM  

  • ஈழபாரதியின் வலைப்பதிவைப் பாருங்கள். அவர் நீங்கள் அளிக்கும் வதியைப் பாவித்துத்தான் தன் வலைப்பக்கத்தை வடிவமைத்துள்ளார் என்று நினைக்கிறேன். அவரின் பதிவில் நான் குறிப்பிட்டது போலவே தெரிகிறது.

    By Blogger வசந்தன்(Vasanthan), At July 11, 2006 10:43 PM  

  • Hi Thamizmanam administrators,I have enabled comments moderation in my blog.

    By Blogger மு.கார்த்திகேயன், At July 14, 2006 1:45 AM  

  • 1000 எண்ணிக்கையை எட்டியதற்காக வாழ்த்துக்கள். மேலும் இந்த சேவையை தந்தமைக்காக நன்றிகள்.

    http://www.thamizmanam.com/template.php

    நான் பதிவிடும் சமயம் இந்த இணைய முகவரி இல்லை என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது.

    By Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்), At July 18, 2006 12:38 AM  

  • நல்ல முயற்சி. நன்றியும் வாழ்த்தும்..

    By Blogger மு.கார்த்திகேயன், At July 18, 2006 1:07 AM  

  • //இந்த இணைய முகவரி இல்லை என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது.
    //

    எனக்கும் இதே போல்தான் வருகிறது.

    By Blogger நாமக்கல் சிபி, At July 23, 2006 2:04 PM  

  • சுட்டிக்காட்டிய சுமரனுக்கும் சிபிக்கும் நன்றி. சரி செய்யப்பட்டுவிட்டது.

    By Blogger Kasi Arumugam, At July 23, 2006 9:32 PM  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger புதுமை விரும்பி, At July 26, 2006 7:58 AM  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger Vaikunth, At August 03, 2006 12:22 AM  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger அழகான ராட்சசி, At August 07, 2006 7:21 PM  

  • Hi Thamizmanam administrators,I have enabled comments moderation in my blog

    By Blogger ச.சங்கர், At August 18, 2006 9:30 AM  

  • தங்களின் புதிய Template
    tool கொண்டு எனது வலைப்பூவை வடிவமைத்துள்ளேன். ஆனால் மறுபதிவு திரட்டப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம்?

    By Blogger திருவடியான், At August 21, 2006 10:11 PM  

  • I ve made Comment moderation in my Blog. Plz consider that.

    By Blogger ராம்குமார் அமுதன், At August 27, 2006 2:58 PM  

  • i have enabled comment moderation in my blog.
    http://anamika2345.blogspot.com
    thankss

    By Blogger k, At August 27, 2006 11:09 PM  

  • Hii..template improvement tool கொண்டு பதிவு' கருவிப்பட்டையை நிறுவ முடியவில்லை..plz help...

    By Blogger k, At September 13, 2006 11:23 PM  

  • எனது புகைப்படம் தமிழ்மண இடுகை முகப்பில் தெரிய என்ன செய்ய வேண்டும்?

    I have photo in my profile. But it does not get displayed in thamizmanam front page when i publish article.

    Do i need to change any thing in the template?
    I don't find this info in FAQ, if you put how to...? in FAQ that will be helpful to thamizmanam community.

    By Blogger Machi, At October 02, 2006 1:46 PM  

  • எனது புகைப்படம் தமிழ்மண இடுகை முகப்பில் தெரிய என்ன செய்ய வேண்டும்.
    I have a photo in my profile. This photo is not dispalyed in Thamizmanam front page when i publish article.

    Do i need to change any thing in template?

    By Blogger Machi, At October 02, 2006 1:50 PM  

  • I have Photo in my profile. But it does not come up in Thamizmanam front page when i publish new blog.

    Do i need to change anything in template to get my photo in Thamizmanam front page.

    I already posed one message regarding this issue but it didn't show up in comment section, so this is 2nd comment. Sorry for repeating.

    By Blogger Machi, At October 04, 2006 10:16 AM  

  • பீட்டா பிளாக்கர் டெம்ளேட்களும் இதில் பலம் அடையுமா?

    By Blogger - யெஸ்.பாலபாரதி, At February 01, 2007 1:33 AM  

  • நான் புது ப்ளாக்கருக்கு மாறிய பின்
    என்னுடைய பதிவில் பதிவு கருவிப்பட்டை தெரிவதில்லை. அடைப்பலகை மேம்படுத்தும் கருவி மூலமும் சரி செய்ய இயலவில்லை.

    By Blogger Unknown, At February 01, 2007 6:04 AM  

  • richmondtamilsangam.blogspot.com பதிவில் மறுமொழி மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்மணத்தில் வகைப்படுத்தும்போது, மறுமொழி மட்டுறுத்தல் செய்யவேண்டும் என்று வருகிறது. சரி பார்க்கவும்.

    By Blogger நாகு (Nagu), At March 11, 2007 11:18 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home