ஏன் ஏன் ஏன்?
அன்புள்ள தமிழ்மணம் பயனாளர்களுக்கும் வலைப்பதிவர்களுக்கும் வணக்கம்.
காலையிலிருந்து ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது, 'தமிழ்மணம்.காம் தளம் விறபனைக்கு' என்று. உண்மைதான், விளையாட்டல்ல. என் தொழில் நிமித்தமாக நான் முழு ஈடுபாட்டுடன் வேறு சில பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஒரு நண்பர் ஒரு முறை சொன்னதுபோல 'தொழில்நுட்பமும், மொழியார்வமுமே' தமிழ்மணத்தில் என்னைச் செலுத்தியது. இன்று தமிழ்மணம் தளத்தை மேற்கொண்டு நடத்த இந்த இரண்டையும் விட பல கூடுதல் தேவைகள் இருக்கின்றன. என்னை இவ்வழியில் செலுத்தி இந்தத் தளத்தை உருவாக்கவும், மேம்படுத்தவும் நடத்தவும் என்னைப் பணித்த என் நம்பிக்கைகளே இன்று என்னை வேறு வழியில் செல்லவும் பணிக்கின்றன. என் நம்பிக்கைகள் மட்டுமே எனக்கு ஆசான். அவை என்றும் நிலையானவையல்ல என்ற போதும்!
இந்த உத்தேசக் கைமாற்றத்தால் ஒரு வலைப்பதிவருக்கு என்ன பயன், அல்லது இழப்பு? எதுவுமில்லை. என்னால் இயன்றவரையில் இந்தத் தளத்தை இதே வகையில் தொடர்ந்து நடத்த முன்வரும் அமைப்பு/தனியாள் ஒருவரிடமே நான் இதைக் கொடுப்பேன். எனவே தமிழ்மணப் பயனாளிகளுக்கு உடனடியாக எந்த அதிர்வும் இருக்காது என்று உறுதி கூறுகிறேன்.
ஏன்? என்ற கேள்விக்கு விடையளிப்பது சாத்தியமில்லை. இந்த விடைகள் தொடங்கப்போகும் வினாக்கள்... அந்தச் சுழலில் விழ நான் தயாரில்லை.
உங்களில் ஒருவரோ, அல்லது பலர் சேர்ந்த அமைப்போ முன்வந்தால் மிக்க மகிழ்ச்சியே. ஏற்கனவே சிலர் இந்த ஆர்வத்தை என்னிடம் வெளியிட்டிருக்கிறார்கள். அதுவே கூட நடக்கலாம். மேலும் ஆர்வமுள்ளவர்கள் முன்வந்தாலும் பரிசீலிப்பேன். எல்லாரையும் எல்லாப் பொழுதுகளிலும் திருப்திப்படுத்த முடியாது என்பதால், இதை மட்டும் சொல்லி நிற்கிறேன். என்னோடு நட்புடன் இதுநாள்வரை ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. நல்லதே நடக்கும். நம்புவோம்.
காலையிலிருந்து ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது, 'தமிழ்மணம்.காம் தளம் விறபனைக்கு' என்று. உண்மைதான், விளையாட்டல்ல. என் தொழில் நிமித்தமாக நான் முழு ஈடுபாட்டுடன் வேறு சில பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஒரு நண்பர் ஒரு முறை சொன்னதுபோல 'தொழில்நுட்பமும், மொழியார்வமுமே' தமிழ்மணத்தில் என்னைச் செலுத்தியது. இன்று தமிழ்மணம் தளத்தை மேற்கொண்டு நடத்த இந்த இரண்டையும் விட பல கூடுதல் தேவைகள் இருக்கின்றன. என்னை இவ்வழியில் செலுத்தி இந்தத் தளத்தை உருவாக்கவும், மேம்படுத்தவும் நடத்தவும் என்னைப் பணித்த என் நம்பிக்கைகளே இன்று என்னை வேறு வழியில் செல்லவும் பணிக்கின்றன. என் நம்பிக்கைகள் மட்டுமே எனக்கு ஆசான். அவை என்றும் நிலையானவையல்ல என்ற போதும்!
இந்த உத்தேசக் கைமாற்றத்தால் ஒரு வலைப்பதிவருக்கு என்ன பயன், அல்லது இழப்பு? எதுவுமில்லை. என்னால் இயன்றவரையில் இந்தத் தளத்தை இதே வகையில் தொடர்ந்து நடத்த முன்வரும் அமைப்பு/தனியாள் ஒருவரிடமே நான் இதைக் கொடுப்பேன். எனவே தமிழ்மணப் பயனாளிகளுக்கு உடனடியாக எந்த அதிர்வும் இருக்காது என்று உறுதி கூறுகிறேன்.
ஏன்? என்ற கேள்விக்கு விடையளிப்பது சாத்தியமில்லை. இந்த விடைகள் தொடங்கப்போகும் வினாக்கள்... அந்தச் சுழலில் விழ நான் தயாரில்லை.
உங்களில் ஒருவரோ, அல்லது பலர் சேர்ந்த அமைப்போ முன்வந்தால் மிக்க மகிழ்ச்சியே. ஏற்கனவே சிலர் இந்த ஆர்வத்தை என்னிடம் வெளியிட்டிருக்கிறார்கள். அதுவே கூட நடக்கலாம். மேலும் ஆர்வமுள்ளவர்கள் முன்வந்தாலும் பரிசீலிப்பேன். எல்லாரையும் எல்லாப் பொழுதுகளிலும் திருப்திப்படுத்த முடியாது என்பதால், இதை மட்டும் சொல்லி நிற்கிறேன். என்னோடு நட்புடன் இதுநாள்வரை ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. நல்லதே நடக்கும். நம்புவோம்.
84 Comments:
//ஏன்? என்ற கேள்விக்கு விடையளிப்பது சாத்தியமில்லை. இந்த விடைகள் தொடங்கப்போகும் வினாக்கள்... அந்தச் சுழலில் விழ நான் தயாரில்லை//
மிக சரி, கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தால் முடிவே இராது.
காசி, மனதிற்கு சரி என்று தோன்றுவதை செய்யுங்கள். நடப்பது நல்லதாக இருக்கும், இருக்கட்டும்.
By ramachandranusha(உஷா), At June 19, 2006 11:02 AM
//எல்லாரையும் எல்லாப் பொழுதுகளிலும் திருப்திப்படுத்த முடியாது என்பதால், இதை மட்டும் சொல்லி நிற்கிறேன்.
//
உண்மை தான்,
//என்னோடு நட்புடன் இதுநாள்வரை ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. நல்லதே நடக்கும். நம்புவோம்.
//
நன்றி காசி...
By குழலி / Kuzhali, At June 19, 2006 11:12 AM
காசி,
இதுவரை நீங்கள் அளித்துக் கொண்டிருக்கும் சேவைக்கு மிக்க நன்றி.
உங்களின் புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.
By வானம்பாடி, At June 19, 2006 11:14 AM
உங்களின் புதிய பணியில் பெரு வெற்றி பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
By மாயவரத்தான், At June 19, 2006 11:17 AM
All the best Kaasi.There will be
some sound reason for your decision. I am sure that although
you might sell TamizhManam , for us
it will always remind you, irrespective of who owns it.
a well wisher cum tamil blogger
By Anonymous, At June 19, 2006 11:28 AM
சதயம் சொல்வது போல் முதலிலேயே இந்த அறிவிப்பு வந்திருக்கலாம் என்று தோன்றினாலும், உங்களின் புதிய முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்.
இதுவரை தொடர்ந்த உங்களின் சேவைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
By பொன்ஸ்~~Poorna, At June 19, 2006 11:33 AM
காசி அண்ணா,
தங்களின் தமிழ்ப்பணியால் பலனடைந்தவர்களில் நானும் ஒருவன். அதற்காக நான் உங்களுக்கு மிகவும் நன்றிக்கடமைப்பட்டுள்ளேன். தங்களின் சூழ்நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களின் புதிய முயற்சிகள் வெற்றியளிக்க என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
நன்றி
அன்புடன்
வெற்றி
By வெற்றி, At June 19, 2006 11:34 AM
வணக்கம் காசி!
நடைமுறை சிக்கல்களினாலோ ,அல்லது தங்கள் புதிய அலுவல் நிமித்தமாகவோ தமிழ்மணத்திலிருந்து விடைப்பெற விரும்புகிறீர்கள்(இது அதிர்சியினை உண்டாக்கினாலும் ஏன் என்ற கேள்விக்கு அப்பாற்பட்டது). எது எப்படி இருப்பினும் இது நாள் ஒரு சிறப்பான சேவையை தாங்கள் வழங்கியமைக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம். தங்களது சேவைக்கு மிக்க நன்றி.மேலும் புதிய முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துகள்.
By வவ்வால், At June 19, 2006 11:41 AM
//ஏன்? என்ற கேள்விக்கு விடையளிப்பது சாத்தியமில்லை. இந்த விடைகள் தொடங்கப்போகும் வினாக்கள்... //
அதற்கு முடிவே கிடையாது.
இதுவரை செய்த பணிகளுக்கு நன்றி.
புதிய முயற்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
By நாகை சிவா, At June 19, 2006 12:17 PM
காசி,
All the best for your future endeavors!
By ஸ்ரீராம், At June 19, 2006 12:23 PM
எண்ணித் துணிக கருமம் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். துணிந்தது சரியானால் துணிந்த பின் எண்ணவும் வேண்டாம். எல்லோருக்கும் நல்லபிள்ளை என்பது நடக்கக்கூடியது அல்ல. அப்படி இருக்கத் தேவையுமில்லை. உங்கள் எண்ணம் போல் அமைய வாழ்த்துகள். இதுவரையில் எங்களுக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.
By G.Ragavan, At June 19, 2006 12:24 PM
அதிக விலை தருபவருக்கு விற்பேன் என்று சொல்லாமல் "இந்தத் தளத்தை இதே வகையில் தொடர்ந்து நடத்த முன்வரும் அமைப்பு/தனியாள் ஒருவரிடமே நான் இதைக் கொடுப்பேன்" என சொல்லி உயர்ந்து நிற்கிறீர்கள் காசி.
உங்கள் பணியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.பணிச்சுமைகளுக்கு நடுவே காசி என்ற படைப்பாளியை மறந்துவிடாதீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.
By Unknown, At June 19, 2006 12:28 PM
அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே விரிவான விளக்கமும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
தங்களின் புது முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.
By VSK, At June 19, 2006 12:34 PM
காசி,
ஏன் என்ற கேள்வியைக் கேட்க வேண்டாம் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தாலும் மனது ஆயிரம் ஏன்களைக் கேட்கிறது. வலைப்பதிவுலகில் தமிழ்மணம் ஒரு முக்கிய கேந்திரம். அதன் பயனாளிகளில் நானும் ஒருவன். உங்களது சேவைக்கு மிக்க நன்றி. உங்கள் முடிவுகளுக்கு என் ஒத்துழைப்பும் ஆதரவும் உண்டு.
இருந்தாலும் மறுபரிசீலனை செய்ய ஒரு புள்ளியளவாவது இடமிருந்தால் செய்யவும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
By Sundar Padmanaban, At June 19, 2006 12:47 PM
i am not that good to understand the intricacies and the possible reason for this decision.ஆனாலும் மனசுக்கு என்னவோ கஷ்டமாயிருக்கு. ஏன் என்பதற்கு என்றேனும் விடை கிடைக்காதா என்ன?
இந்த முடிவுக்கு நீங்கள் 'தள்ளப் பட்டிருந்தால்' உங்களை அதுபோல் தள்ளிய அந்த force நிச்சயம் ஒரு நல்ல force என்று என்னால் நினைக்க முடியவில்லை.
வேறு வழி ஏதும் உண்டா? மெரினா கடற்கரையில் அன்று பேசியது போல் செலவீனங்களை நாம் எல்லோருமே பொறுப்பேற்று...
ஒண்ணும் புரியலைங்க...இனம் தெரியாத வருத்தம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. இப்படி ஆக வேண்டும் என்று நினைத்து அதற்காக "பாடுபட்ட" நல்ல உள்ளங்களுக்கு நன்றி!!
By தருமி, At June 19, 2006 1:16 PM
காசி உங்கள் நிலையை விளக்கிய பதிவுக்கு நன்றி.
By SnackDragon, At June 19, 2006 1:18 PM
//'தொழில்நுட்பமும், மொழியார்வமுமே' தமிழ்மணத்தில் என்னைச் செலுத்தியது. இன்று தமிழ்மணம் தளத்தை மேற்கொண்டு நடத்த இந்த இரண்டையும் விட பல கூடுதல் தேவைகள் இருக்கின்றன. //
உண்மை. நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
//உங்களில் ஒருவரோ, அல்லது பலர் சேர்ந்த அமைப்போ முன்வந்தால் மிக்க மகிழ்ச்சியே. //
எனக்கும் ஆவலிருந்தது. ஆனால் அழுத்தம் இன்னும் அதிகமாகிவிடும் என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.
//எல்லாரையும் எல்லாப் பொழுதுகளிலும் திருப்திப்படுத்த முடியாது என்பதால், இதை மட்டும் சொல்லி நிற்கிறேன். //
சரியான நிலை எடுத்திருக்கிறீர்கள்.
உங்கள் புது முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
By நிலா, At June 19, 2006 1:38 PM
திருமணத்திற்குவராமல் ஏமாற்றினீர் இன்று இப்படி.எனினும் நன்றி அன்பரே வாழ்க!
chiththan
By Anonymous, At June 19, 2006 1:41 PM
Kasi Sir,
உங்கள் புது முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
By Sivabalan, At June 19, 2006 1:46 PM
தங்களின் புதிய முயற்சிக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
ராம்.கே
By Ram.K, At June 19, 2006 2:24 PM
All the best Kaasi sir!
May God's blessings be ever with you for all your noble deeds.
Endrum Anbudan...
By ஜெ. ராம்கி, At June 19, 2006 2:57 PM
All the best Kaasi sir!
May God's blessings be ever with you for all your noble deeds.
Endrum Anbudan...
By ஜெ. ராம்கி, At June 19, 2006 2:58 PM
செய்தியை படித்தவுடன் சற்று திக்கென்று இருந்தாலும் உங்கள் நிலையினை உணர விரும்புவதால் உங்கள் முடிவினை ஆதரிக்கிறேன். தொடர்ந்து உங்கள் வலைப்பூவில் எழுதி வாருங்கள். வாழ்த்துகள்.
By குமரன் (Kumaran), At June 19, 2006 3:50 PM
காசி அவர்கட்கு,வணக்கம்!
தங்களின் இதுநாள்வரையான சகல உதவிகளுக்கும் நன்றி.
புதிய பாதையில் சிரமமின்றி நடக்க எமது வாழ்த்துக்கள் என்றுமுண்டு.
By Sri Rangan, At June 19, 2006 4:07 PM
Dear Kasi,
I am so sorry to hear that. தாங்களின் தனி மன முடிவே இருதியானது. என்றேனும் ஒரு நாள் தாங்கள், எதனை முன் நிறுத்தி இந்த முடிவுக்கு தள்ளப் பட்டிருப்பீர்கள் என்பது தெரிய வைப்பீர்கள் என நம்புகிறேன். பொது வாழ்கையில் ஈடுபடும் யாவருக்கும் சோதனை மட்டுமே rewards.
Best of luck in your new ventures...
TheKa.
By Thekkikattan|தெகா, At June 19, 2006 5:40 PM
நிறைய வாசனை அனுபவம்; கிட்டியது; சகலருக்கும் அவர்கள் வசதியும்;விருப்பமும்!!வாழ்தலுமே!!முக்கியம்; ஆனால் இது உலக முடிவில்லை.
உங்கள் புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
யோகன் பாரிஸ்
By Anonymous, At June 19, 2006 7:01 PM
மாறுதல் மட்டுமே நிலையான இந்த உலகில் காசி நினைக்கு மாற்றமும் இயற்கையானதே. ஏற்றுக்கொள்வதும் ஏற்க இயலாததும் அவரவர் நிலை. மாறுதல் நடந்துகொண்டே இருக்கும். காசிக்கு வாழ்த்துக்கள்.
By கிவியன், At June 19, 2006 7:08 PM
அன்புள்ள காசி,
தங்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.
உங்க நல்ல மனசுக்கு ஒரு குறையும் இல்லாம எல்லாம் நல்லாவே நடக்கும் காசி.
நல்லா இருங்க.
By துளசி கோபால், At June 19, 2006 7:28 PM
நல்லவேளை, நீங்கள் அறிவித்ததுபோலவே இருக்கட்டும் - வேறேதும் மனத்தாங்கலான காரணத்தால் இந்த முடிவுக்கு வராமல் இருந்தால் நல்லது. இந்த பொறுப்பில் நீங்கள் சுமந்த சுமையில் உங்களுக்கு ஏதேனும் வகையில் உதவியாய் இருந்திருந்தால் பெருமை கொள்வோம். எல்லா இடர்களையும் கடந்து தமிழ்மணத்தை உங்களுடன் கொண்டு சென்றதுபோலவே, இனி வரும் முயற்சிகளிலும் இறைவன் துணை இருப்பான், வாழ்த்துக்கள்!
-ஜீவா
By jeevagv, At June 19, 2006 8:14 PM
தமிழ்மணத்தைவிட்டு பலர் பல்வேறு காரணங்களுக்காக வெளியேறியதுண்டு. ஆனால் அவை தமிழ்மணத்தில் இணைந்திருந்த வலைப்பதிவுகள் மட்டுமே! ஆனால் காசியே தமிழ்மணத்தை விட்டு....நினைத்துப்பார்க்க முடியவில்லை.
ஆனால் வாழ்வின் இயக்கம் ஒரே சக்கரத்தை என்றும் சுழல அனுமதிப்பதில்லை. காலம் நமக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பொறுப்பை ஒவ்வொரு மனநிலையை ஒவ்வொரு காலச்சூழலை உருவாக்கித் தருகிறது.
அதன்வழி நடந்தேற வேண்டிய கட்டாயத்தில் தான் நாமெல்லாரும் இருக்கிறோம்.
By வலைஞன், At June 19, 2006 8:58 PM
ஏதோ ஒரு படத்தில் அர்ஜூனுக்கு மணிவண்ணன் 'தமிழ் நண்டு'னு ஒரு கதை சொல்வார். அதுதான் நிதர்சனம். இருந்தாலும் பிரச்சனைகளினால் மட்டும் நீங்கள் இந்த முடிவுக்கு வரவில்லையென்ற நம்பிக்கையில், தமிழ்மணம் நல்லதொரு நிர்வாகத்திடம் சென்றுசேரவேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் 'வலைப்பதிவு முன்னேற்றக்கழக தலைவர் காசி அவர்களே' என்று அழைத்து செப்டம்பர் 2004ல் எழுதிய இந்த பதிவு ஏனோ நினைவுக்கு வருகிறது.
By Unknown, At June 19, 2006 9:06 PM
மிகவும் வருத்தமளிக்கும் முடிவு .எனினும் வேறு வழியில்லை என்று நீங்கள் நினைக்கும் போது தவிர்க்க முடியாததாகிறது .நீங்கள் ஆற்றிய பணி மகத்தானது .தன்னலமற்றது .நன்றிகள்.
By ஜோ/Joe, At June 19, 2006 9:09 PM
சொல்ல மறந்துட்டேன். நுட்பம் டெக்னாலஜீஸ் முயற்சிகளில் பெருவெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.
By Unknown, At June 19, 2006 9:16 PM
முகமூடி போட்டு திட்டி வந்த கும்பலில் திருமலையாக குரைப்பவர்களுக்கு எல்லாம் பயந்து ஓடினால் நாம் தமிழர்கள் என்று சொல்வது சரியாகாது. எதிர்த்து நின்று சமாளிப்பதே நல்ல தமிழருக்கு அழகு!
By Anonymous, At June 19, 2006 9:19 PM
காசி.நான் இந்தப் பதிவு வலைப்பூவில் சேர்ந்து 6 மாதங்கள் ஆகின்றன.உங்களிடம் நேருக்கு நேர் எழுத்து ஒன்றும் கிடையாது.அனாலும் தமிழ்மணம் மூலமாக எனக்கு அறிமுகம் ஆன அன்பு விலை மதிக்க முடியாதது.உங்களை சந்தித்த மகிழ்ச்சியாவது(இந்தப் பின்னூட்டம் வழியாக)கிடைத்தது. மிகுந்த(மிகும்)நன்றி.
By வல்லிசிம்ஹன், At June 19, 2006 10:10 PM
//என் நம்பிக்கைகள் மட்டுமே எனக்கு ஆசான். அவை என்றும் நிலையானவையல்ல என்ற போதும்!//
உண்மை தான்..
//என்னை இவ்வழியில் செலுத்தி இந்தத் தளத்தை உருவாக்கவும், மேம்படுத்தவும் நடத்தவும் என்னைப் பணித்த என் நம்பிக்கைகளே இன்று என்னை வேறு வழியில் செல்லவும் பணிக்கின்றன.//
நல்லது.. வாழ்த்துக்கள்..
ஆனால் இயங்குதலை விட்டு விடாமல் இருங்கள் அது போதும்..
தமிழ்வலைப் பதிவு வரலாற்றில் உங்கள் பெயர் பொறிக்கப் பட்டு விட்டது..
By - யெஸ்.பாலபாரதி, At June 19, 2006 10:18 PM
காசி,
இதுவரை முன் நின்று நடத்திய காரியங்களுக்கு நன்றி.
இனி செயல்படுத்த விழையும் காரியங்களுக்கு வாழ்த்துக்கள்.
By கார்திக்வேலு, At June 19, 2006 10:29 PM
திரு காசி அவர்களே,
நான் தமிழ்மனத்தை வெகு சில நாட்களாகத்தான் உபயோகித்து வருகிறேன். இது ஒரு அமைப்பால் நடத்தப் படுவதாகத்தான் முதலில் நினைத்தேன்.. ஒரு தனி மனிதர் இதை செய்வது ஆச்சரியமான அதிர்ச்சி...இவ்வளவு அழகாக, உலகத்தின் பலப்பல இடங்களில் உள்ள தமிழர்கள் ஒன்று கூடி கருத்து பரிமாற்றம் செய்ய வழி வகுத்து இவ்வளவு காலம் நடத்தி வந்தது ஒரு பெரும் சாதனை..-இப்பொழுது நீங்கள் எடுத்து இருக்கும் முடிவு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் தவிர்க்க இயலாததாக இருப்பதாக நீங்கள் கருதுவதாக புரிகிறது..
//ஏன்? என்ற கேள்விக்கு விடையளிப்பது சாத்தியமில்லை. இந்த விடைகள் தொடங்கப்போகும் வினாக்கள்... அந்தச் சுழலில் விழ நான் தயாரில்லை//
மிகச் சரி..
இதுநாள் வரை நீங்கள் அளித்து வந்த சேவைக்கு மிக்க நன்றி.
உங்களின் புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.
By மனதின் ஓசை, At June 19, 2006 10:34 PM
உங்களின் சோகத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். நீங்கள் தமிழ்மணம் விட்டு விலகுவது எதிர்(ரி)க் கோஷ்டியினருக்கு புத்துணர்வை அளிக்காதா? கடைசிவரை நீடித்து நிலைத்து நின்று அவர்களின் எதிர்ப்பை தகர்க்குமாறு வேண்டுகிறோம். உதவிகள் தேவைப்பட்டால் எங்கள் தலைவரை தொடர்பு கொள்ளவும்.
க.சுப்பிரமணியன் எம்.காம்,
கணக்குப் பிரிவு,
போலியார் தலைமைக் கழகம்,
23ஏ,சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.
By Anonymous, At June 19, 2006 10:52 PM
காசி,
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தையும் மன அமைதியையும் வழங்கட்டும் என விரும்புகிறேன்.
By Unknown, At June 19, 2006 11:06 PM
continue the journey!!
By Anonymous, At June 19, 2006 11:42 PM
//முகமூடி போட்டு திட்டி வந்த கும்பலில் திருமலையாக குரைப்பவர்களுக்கு எல்லாம் பயந்து ஓடினால் நாம் தமிழர்கள் என்று சொல்வது சரியாகாது. எதிர்த்து நின்று சமாளிப்பதே நல்ல தமிழருக்கு அழகு!
Anonymous June 20, 2006 6:49 AMமணிக்கு, எழுதியவர்: //
comment moderation அமலில் இருக்கும் போதே மேற்படி பின்னூட்டம் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே உங்களின் 'நோக்கம்' நன்கு புலனாகிறது காசி.
ஒரு பதிவிலேயே இப்படி ஒரு ஓட்டத்தை நீங்கள் எடுக்க காரணம் கற்பிக்க முயலுகிறார்களே. போலியன் ஒரவனால் எத்தனை எத்தனை பேர் வலை பதிவதிலிருந்து ஓடினார்கள். அப்போதெல்லாம் எங்கே போயிருந்தார்கள் இந்த முதுகு சொறிபவர்கள்?
பரவாயில்லை காசி. உங்கள் முயற்சியின் மூலம், ஒரு தலைபட்சமான பல முடிவுகளின் மூலம் ஒரு போலியை தமிழ் உலகுக்கு வளர்த்து விட்டு தான் செல்கிறீர்கள். பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
தமிழ்மணத்தை விட்டு சென்ற பிறகு ஒருநாள் ஆழ்ந்து சிந்தியுங்கள். எல்லாமேபுரியும். மற்றபடி நீங்கள் தமிழ்மணத்தை 'விற்று' விட்டு செல்வதன் மூலம் நல்ல ஒரு வியாபாரி என்பதை புரிய வைத்து விட்டீர்கள்.
'தமிழ் வளர' இவ்வளவு நாள் பாடுபட்டது உண்மையானால், எந்த ஒரு பிரதிபலனும் பாராமல் இலவசமாக இதை கொடுத்து விட்டு செல்ல தயாரா? அதே போல அடுத்த இரண்டு வருடங்களுக்கு இதே போன்றதொரு வலைப்பூ தொகுப்பு வலை தளத்தை தயாரிக்கவோ/ பின்னணியில் இருந்து இயக்கவோ மாட்டேன் என்றும் உறுதி கூற தயாரா?
எப்போது காசுக்கு இதை விற்க முடிவெடுத்துவிட்டீர்களோ, அப்போதே 'இவ்வளவு நாள் தமிழுக்காக இவ்வளவு செலவழித்தேன்.அவ்வளவு செலவழித்தேன்' என்றெல்லாம் கூறியது 'இதற்காகத்தான்' என்பது புரிகிறது.
இதை குறையாக சொல்லவில்லை. ஆனால் 'தியாகி'யாக உங்களை ஆக்க முயலுவதும், அதற்காக நீங்களும் காலரை தூக்கி விட்டுக் கொள்வதும் சரியல்ல.
இதை ஒரு பிரிவு உபசார விழாவாக நினைத்துக் கொள்ளுங்கள். என்ன தான் தப்பு செய்தாலும் யாரும் அந்த விழாவில் பெரிய ஆளாக தான் தூக்கிப் பேசுவார்கள்.
வாழ்க்கையில் 'உண்மையிலேயே' பல சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துக்கள்.
- பேரா முக்கியம்.
By Anonymous, At June 20, 2006 12:38 AM
என்ன சொல்ல??
இதுவரை உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள் !!!
By Suresh, At June 20, 2006 3:26 AM
சகோதரர் காசிக்கு,
சகமனிதனுக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான்!
தங்களின் முயற்சியில் உருவான தமிழ்மணம் திரட்டியால் பயன் அடைந்தவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் தனிப்பட்ட முறையிலும் இஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறுகளுக்கும் பதில் கொடுக்கும் முகமாக தங்கள் திரட்டி மூலம் வாய்ப்பளித்தமைக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் அடுத்தடுத்த முயற்சிகள் மென்மேலும் வெற்றி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
By நல்லடியார், At June 20, 2006 3:26 AM
காசி, ஆசை ஆசையாக ஒவ்வொரு செங்கல்லையும் தேர்ந்தெடுத்துக் கட்டிய வீட்டை விற்க காரணம் நுட்பமும் வாழ்க்கைப் பயணமுமாக இருந்தால் புதுப் பயணத்தில் வெற்றிகள் பல கண்டிட வாழ்த்துகிறேன். அது மனம் சம்பந்தப்பட்டிருந்தால், உங்கள் மனதை விட எங்கள் மனம் மிக வலிக்கிறது. பத்திருவது பேர் எழுதிக் கொண்டிருந்த தமிழ்பதிவர் ஆயிரத்தை எட்டிட நீங்கள் ஆற்றிய பணிக்கு நன்றி சொல்லி அதன் மதிப்பைக் குறைக்க விரும்பவில்லை.
மீண்டும் புது முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள். இனி அடிக்கடி உங்கள் ஆக்கங்களை தமிழ்மணத்தில் தொடர்ந்து காணுவோம்.
By மணியன், At June 20, 2006 3:30 AM
நண்பர் காசி அவர்களே!
உங்கள் சேவையை ஒரு போதும் நாங்க மறக்க மாட்டோம்.
இனி நீங்க ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றியடைய வாழ்த்துகள்.
- பரஞ்சோதி
By பரஞ்சோதி, At June 20, 2006 4:04 AM
அன்பின் காசி,
சில தினங்கள் முன்பே தமிழ் வலைப்பூ எழுத ஆரம்ப்பித்தேன்.உங்கள் இந்த தமிழ்மணம் சேவை மிகவும் நன்றாக இதுவரை இருந்தது.உங்களின் புதிய முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள் அதுவும் இதைமாதிரியான செயல் ஆக்கமாக இருக்கும் என நம்பிக்கையுடன்....
ராம்
By இராம்/Raam, At June 20, 2006 4:23 AM
///'தமிழ் வளர' இவ்வளவு நாள் பாடுபட்டது உண்மையானால், எந்த ஒரு பிரதிபலனும் பாராமல் இலவசமாக இதை கொடுத்து விட்டு செல்ல தயாரா?///
யாரிடம்? உனக்கே முகமில்லை உன்னிடமா?
/// அதே போல அடுத்த இரண்டு வருடங்களுக்கு இதே போன்றதொரு வலைப்பூ தொகுப்பு வலை தளத்தை தயாரிக்கவோ/ பின்னணியில் இருந்து இயக்கவோ மாட்டேன் என்றும் உறுதி கூற தயாரா?/// ஏன் அப்படி இரண்டு வருடத்துக்குள் அவர் இன்னொரு தளத்துக்கு உதவினால் தமிழ் வளர்ச்சிக்கு அது எதிராகுமா? முதல்ல நீங்க வளருங்கப்பா, தமிழ் தானா வளரும்:-)
By Anonymous, At June 20, 2006 4:25 AM
காசி,
மிக்க நன்றி.
எழுத தயங்கிய/யோசித்த பலரை எழுத தூண்டியது தமிழ்மணம். இதன் மூலம் பயன் பெற்றவர் ஏராளம்.
கருத்துக்கு எதிர் கருத்து இல்லா கயவர்கள் வேண்டுமானால் இதன் மூலம் மனம் மகிழலாம். அந்த ஒரு சில ஓ-நாய்களை தவிர அனைவருக்கும் இந்த அறிவிப்பு வருத்தமான ஒன்று.
உங்களின் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
By அருண்மொழி, At June 20, 2006 4:37 AM
அன்புடை காசி,
மூட்டைப் பூச்சிகளுக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது போல இருக்கிறது உங்கள் செயல்.
வறட்டு வாதம் பேசி யாங்கே
மிரட்டும் கும்பலின் பொய்யும்
புரட்டும் எத்தனை நாளைக்கு?
வரட்டும் பார்க்கலாம் அஞ்சாதீர்!
By கருப்பு, At June 20, 2006 4:46 AM
//comment moderation அமலில் இருக்கும் போதே மேற்படி பின்னூட்டம் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே உங்களின் 'நோக்கம்' நன்கு புலனாகிறது காசி.//
உன் பின்னூட்டத்தையும் தான் அனுமதித்துள்ளார்.ஏன் அவர் நினைத்திருந்தால் உன் பின்னூட்டத்தை நிறுத்தியிருக்கக்கூடாதா? வளருங்கடா டேய்...
By Anonymous, At June 20, 2006 4:52 AM
தமிழ்மணம் காசி அவர்களே, வாழ்த்துக்கள்...
By ரவி, At June 20, 2006 4:52 AM
Thiru காசி,
இதுவரை முன் நின்று நடத்திய காரியங்களுக்கு நன்றி.
இனி செயல்படுத்த விழையும் காரியங்களுக்கு வாழ்த்துக்கள்.
Anbudan
Suvanappiriyan
By suvanappiriyan, At June 20, 2006 6:22 AM
அன்புள்ள காசி,
இந்த முடிவுக்கு ஏன் வந்தீர்கள் என்பதைப்பற்றி நீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் நீங்கள் விளக்கி கூற விரும்பாவிடினும் முக்கியமானவை.
நான் வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை.பல அனுபவங்கள். எனக்கு தெரிந்து மிகவும் நடுநிலைமையோடு இதை நீங்கள் செய்தீர்கள். உங்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பெருமை யார் தடுத்தாலும் உங்களுக்கு கிடைத்தே தீரும்.தமிழ் வலைப்பதிவுலகில் உங்களுக்கான இடம் எழுதப்பட்டுவிட்டது.
இதே அளவும் அல்லது முடிந்தால் இதற்கு அதிகமாகவும் கருத்து சுதந்தரத்தை பேணும் ஒரு அமைப்பிடம்தான் நீங்கள் தமிழ்மணத்தை தரவேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.
By Muthu, At June 20, 2006 9:45 AM
வணக்கம் திரு. காசி,
தமிழ்மணத்தினால் பயன் பெற்ற பல வலைபதிவாளர்களில் நானும் ஒருவன். உங்களிடம் அறிமுகம் இல்லாவிடினும், தங்களின் இந்த படைப்பை கண்டு எவ்வளவோ வியந்தது உண்டு, பேச்சு மட்டுமின்றி செயலிலும் தமிழை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்ல தங்களின் பங்கு மிகவும் பாராட்டுக்குறியது...
படிக்கும், கேட்கும் செய்திகளின் பல பரிணாமங்களையும், பரந்த பார்வையும் அளிக்க தமிழ்மணம் உதவியது என்றால் அது மிகையில்லை..
ஒரு புதிய நட்பு வட்டத்தையும், பலருடைய அதிகம் வெளிப்பட்டிராத திறமைகளையும் வெளிபடுத்த வாய்ப்பையும் அளித்தீர்கள்..
நன்றி என்ற ஒரு சொல் அதனை வெளிப்படுத்த முடியாது..
எதிர்காலத்தில் முன்னேற தாங்கள் செல்லும் பாதையிலும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்..
-
செந்தில்
By யாத்ரீகன், At June 20, 2006 10:14 AM
Å¡º¸¢Â¡¸ ¿¢¨È ÀÂý ¦ÀüÈ¢Õ츢§Èý. ¦¾¡¼Õõ À½ò¾¢üÌ Å¡úòиû. ¿¢îºÂÁ¡¸ ÅÕò¾õ ¾Õõ ´Õ ÓÊ×
By Anonymous, At June 20, 2006 10:17 AM
வரலாறு உங்களைப் போற்றற்றும்!
தமிழ்மணம் தலைமை நிர்வாகி காசி அவர்களின் முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நான் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்த நாட்களில் போலியின் போலிப் பின்னூட்டதால் காசி அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறேன்.
அதற்காகப் பல நேரங்களில் பல இடங்களில் மிகவும் வருந்தியிருக்கிறேன். பின்னர் டோண்டு அவர்களின் முயற்சியால் அதற்காக ஒரு முறை மன்னிப்புக் கேட்டிருக்கிறென்.
என்போன்ற பலருக்கும் தமிழ்மணம் மூலமாக உலகத்தில் உள்ள பல தமிழ் அன்பர்களை/நண்பர்களை உருவாக்கிக் கொள்ள உதவி செய்த பெருமை காசி அவர்களையே சேரும்.
இன்று அவர் தமிழ்மணத்தை விட்டு விலகிச் சென்றாலும் ஒரு புதிய செய்தி ஊடகத்தை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்திய பெருமை காசி அவர்களையே சேரும்.
பிற்காலத்தில் நம் மாணவர்கள் தமிழ் வலைப்பதிவுலகத்தின் தந்தை யார்? என்ற கேள்விக்கு விடையாக திரு.காசி என்று பதில் எழுதும் போது வரலாறு உங்களைப் போற்றும்.
தாங்கள் எடுத்துக் கொண்டுள்ள புதிய பணியில் சிறப்புற்று விளங்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
By மகேஸ், At June 20, 2006 10:38 AM
//comment moderation அமலில் இருக்கும் போதே மேற்படி பின்னூட்டம் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே உங்களின் 'நோக்கம்' நன்கு புலனாகிறது காசி.//
ஏண்ணே, அந்தப் பின்னூட்டத்தையும் போட்டது நீங்கதானே? எப்படி ஓய் இப்படி உங்க கிரிமினல் புத்தி வேலை செய்யுது? நைசா போலி மாதிரி ஒரு பின்னூட்டம் போட்டுட்டு 'எப்படி இதை அனுமதிக்கலாம், உன் உள்நோக்கம் தெரியுது பார்'னு சலம்பலை ஆரம்பிச்சிரவேண்டியது. அசல் போலி போட்டிருந்தா கமெண்ட் மாடரேசன்ல அனுமதிக்கற மாதிரியா இருந்திருக்கும்? போலிக்குப் போலிங்கறதால நீருதான் அசல்னு உங்க ஊருல யாராவது டுபாகூர் கணக்குப்பாடம் சொல்லிக்குடுத்தாங்களா என்ன? திருந்துங்கப்பா வாழ்க்கையில, வயசாவுதில்ல?
By Anonymous, At June 20, 2006 10:47 AM
வாழ்த்துக்கள்...காசி.
By ALIF AHAMED, At June 20, 2006 4:40 PM
உங்களின் சேவை சாதாரணமானது அல்ல. அதற்கு வாழ்த்துக்கள். உங்களின் புதிய முயற்சியில் வெற்றி பெற கடவுள் துணை இருப்பார்.
By Gyanadevan, At June 20, 2006 5:59 PM
பேரா முக்கியம்னு கேட்ட அனானி ,
இத்தன நல்லா பேச தெரிஞ்ச உனக்கு என்ன ஒரு வலைப்பதிவு கணக்கு கூட இல்லாமலா போச்சு. அந்த வலைப்பதிவ என்கிட்டே கொடு நான் உன் கொள்கையா எழுதி பரப்புரேன்(கொள்கைனு எதாவது இருந்தா) சும்மா ஓசி ல கிடைச்ச வலைப்பதிவ கூட கொடுக்க மனசு வராதேப்பா உனக்கு,அப்புறம் என்ன அடுத்தவங்களா நக்கல் அடிக்குறது.
நான் இத யாருக்காகவும் பரிந்து பேச வரவில்லை. ஒரு மனிதர் இத்தனை நாள் இலவச சேவையாக ஒரு வலைதிரட்டி நடத்திட்டு விடைப்பெறுகிறேன் என்று சொல்கிறார் அதற்காகவாது கண்ணியம் காக்க வேண்டாமா? ஏன் விக்க வேண்டும்னா , போட்ட முதலுக்கு மோசம் வராம உழைப்புக்கு ஒரு விலை வைத்து ஊதியமாக கேட்கிறார் அதைக்கேட்க அவருக்கு உரிமை உண்டு.
அதை எல்லாம் நீ ஏன் கேட்கிற . கேட்க கூடாது தப்பு ..தப்பு ..தப்பு செல்லம்.
நான் இது வரைக்கும் வம்பு சண்டைக்குலாம் போனது இல்லை ஆனா உன்னைப்போல சி(ல்)லரை சவட்டி எடுத்த கூட தப்பில்லைனு தான் தோணுது.
By வவ்வால், At June 20, 2006 8:05 PM
//என்னை இவ்வழியில் செலுத்தி இந்தத் தளத்தை உருவாக்கவும், மேம்படுத்தவும் நடத்தவும் என்னைப் பணித்த என் நம்பிக்கைகளே இன்று என்னை வேறு வழியில் செல்லவும் பணிக்கின்றன. என் நம்பிக்கைகள் மட்டுமே எனக்கு ஆசான். அவை என்றும் நிலையானவையல்ல என்ற போதும்!//
தமிழ்மணம் பிரச்சினைகள் உள் அரசியல் சார்ந்து பெரிதாக ஒன்றும் விளங்காதபோதும் குறிப்பிட்ட அரசியலின் அல்லது ஜாதியின் பெரும்பான்மை பக்கங்களை மட்டுமே அனுமதிக்கிற எமது ஊடகங்களிலிருந்த விலகி - மாற்று ஊடகங்களில் - புரட்சிகரமானதொரு பாதையில் சுதந்திரத்தை 'அனுமதித்த' வலைப்பதிவுகளின் வருகையும் -தமிழில அவை- தமிழ் மணம் போன்ற ஒரு திரட்டியூடாக பலதரப்பட்ட வாசகர்களை சென்றடைந்ததும் மிக முக்கியாமன நிகழ்வுகள். அத்தகைய திரட்டியை -இலவசமாக- வழங்கிய உங்களது பங்களிப்பு விலைமதிப்பற்றது.
தமிழ்மணத்தின் ஊடாகவே சில நண்பர்களை அறிமுகமாகவும் உரையாடவும் விவாதிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்கும் பிற எல்லாவற்றுக்கும் ஒரு வலைப்பதிவாளராக இச் சந்தர்ப்பதில் உங்களிற்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.
உங்களது பிற செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்கள். நன்றி!
By ஒரு பொடிச்சி, At June 20, 2006 10:25 PM
சம்பிரதாயமான வார்த்தைகளில் விடை கொடுக்க மனம் வரவில்லை. மனதில் எழும் உணர்வுகளை பாராட்டாக நாலு வார்த்தை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலும் அதை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு வலு இருக்காது பாதி கூட உணர்வைச் சொல்லாது. எனவே, நன்றி. காசி. அனைத்துக்கும்.
By Anonymous, At June 21, 2006 12:50 PM
தமிழில் ஒரு பரபரப்பான இனைய உலகை அறிமுகம்செய்வித்த தமிழ்மணத்திற்கும் அதன் நிர்வாகி காசிக்கும் நன்றிகளை உரித்தாக்க்குகிறேன் . தமிழ் இனைய வரலாற்றில் தமிழ்மனத்திற்கும் அதன் முதல் நிர்வாகியான காசிக்கும் ஒரு நிரந்தர இடம் எப்பொதும் இருக்கும் .
தமிழ்மனத்தில் எந்த ஒரு வலைப்பூவையும் பதிவு செய்துகொள்ளாத ( அதற்கு தகுதி பெறாத ) எனக்கே உங்கள் முடிவு கொஞ்சம் வருத்தமளிக்கிறது என்றால் , இந்த சேவையில் பயனடைந்த , புகழடைந்த ,மதிப்பறிந்த எத்தனையோ தமிழ் நெஞ்சங்களின் என்னம் எவ்வாறிருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது .
தமிழ்மனம் மற்றொரு புதிய அவதாரமெடுக்க காலம் வகை செய்யட்டும் .
நன்றி காசி அவர்களே.
நன்றி
By NoMad, At June 21, 2006 1:39 PM
//உங்கள் முயற்சியின் மூலம், ஒரு தலைபட்சமான பல முடிவுகளின் மூலம் ஒரு போலியை தமிழ் உலகுக்கு வளர்த்து விட்டு தான் செல்கிறீர்கள். //
பேரா முக்கியம் ஐயா, இந்தக் குற்றச்சாட்டு பொய் என்பதற்கு இன்றைய தினம் தமிழ்மணத்தில் வந்த புதுப் பதிவுகளே சாட்சி. ஒரு நாளைக்கு சராசரியா ரெண்டு பதிவு போடுங்கைய்யா போலியைப் பத்தி!! அதுலயும், லட்சியம் செய்யாதீங்கன்னு வேற எழுதுவீங்க.. இதெல்லாம் செஞ்சிட்டு அடுத்தவன் மேல பழி போடுறதுக்கு, பேரா முக்கியம்? நடத்துங்க..
By பொன்ஸ்~~Poorna, At June 22, 2006 3:15 PM
காசி,
போய்ட்டு வாங்க! கண்டிப்பா திரும்ப வருவீங்க!!
ஒருவன் எல்லோருக்கும் நல்லவனா இருக்க முடியாது. அதனால உங்க மேல வர்ற விமரிசணத்தையெல்லாம் ச்சும்மா தூசா தட்டி விட்டுடுங்க.
"உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீ தான் நீதிபதி;
மனிதன் எதையோ பேசட்டுமே, உன் மனசை பார்த்துக்கோ நல்லபடி!"
அம்புட்டுதேன்!!!
By சீனு, At June 22, 2006 4:51 PM
இந்தாப்பா யார் அங்கே, அந்த காசியை புடிச்சி கட்டுங்கள். விட்டா சும்மா அந்த ஆள் பாட்டுக்கு பேசி கிட்டே போகுதே...
ரொம்ப கஷ்டமா இருக்குங்க காசி...
வீரத்திலகமிட்டு இவருக்கு விடையளிக்கிறோம். வெற்றி உமக்கே. போய்வாருங்கள்...
By SHIVAS, At June 22, 2006 5:10 PM
ஆயிரம்தான் சொல்லுங்கள்.
ஒரே ஒரு தீவிரவாத பார்ப்பனக் கும்பலுக்கு பயந்து நீங்கள் விலகுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
By Anonymous, At June 22, 2006 10:44 PM
All the very best Kasi!!
By Anonymous, At June 23, 2006 7:08 AM
வாழ்த்துகள் kasi
சிரில் அலெக்ஸ் பதிவில் பார்த்தேன் பாஷா இந்தியாவின் சிறந்த தமிழ் வலைப்பதிவு(technical) என தேர்வு பெற்றதை.மேலும் பல சாதிக்க வாழ்த்துகள்!
By வவ்வால், At June 23, 2006 3:13 PM
என்ன சொல்வதென்று தெரியவில்லை காசி, பொடிச்சி சொல்லியிருப்பதை வழிமொழிவதைத் தவிர.
By செல்வநாயகி, At June 23, 2006 6:10 PM
தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு தமிழ்மணம் மூலம் நீங்கள் செய்த சேவை அளப்பரியது. வருங்காலத்தில் தமிழ் வலைப்பதிவு பற்றி பேசினால்/எழுதினால் தமிழ்மணத்தையும் அதை உருவாக்கிய காசியை பற்றி குறிப்பிடாமல் இருக்கமுடியாது.
விற்பனைக்கு என்று படித்ததும் வருத்தமானேன் இந்த உணர்ச்சியே பலருக்கு இருந்திருக்கும் இதுக்கு பேர் தான் நெருங்கிய உறவு என்பதோ?
உங்கள் புதிய முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
By Machi, At June 23, 2006 7:37 PM
தமிழ்மணம் ஒரு மிக சீரிய முயற்சி. இதனை தொடங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் மனம் வெறுத்து செல்லும் படியாக சூழ்நிலை இருந்தால் அதற்காக வருந்துகிறேன். உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள முடியுமா என்று பரிசீலனை செய்து பாருங்கள்.
You have started a legacy with thamizmanam all the best for all your future endeavors.
By senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்), At June 26, 2006 9:20 AM
பெயரா முக்கியம் அனானி நீங்களும் ஒரு போலிதான் போலி போல் கேவலமானவன் தான். போலி உருவானது காசியால் அல்ல உன் போன்றவர்களால்தான்.
By senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்), At June 26, 2006 9:28 AM
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் தனியே பதில் சொல்ல இயலாமைக்கு வருந்துகிறேன். நன்றி.
'தளம் விற்பனைக்கு' என்ற அறிவிப்பு இரு வாரங்கள் வெளியானதில் பல நண்பர்கள், அமைப்புகள் ஆர்வம் தெரிவித்து மடல் அனுப்பியுள்ளார்கள். அவர்களுக்குள் என் மனதுக்கு நம்பிக்கையான சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மேலும் பேசிக்கொண்டுள்ளேன். எனவே 'விற்பனைக்கு' அறிவிப்பு இனி தேவையில்லை என்று விலக்கப்படுகிறது.
By Kasi Arumugam, At July 03, 2006 8:21 AM
காசி அவர்களே, நான் வலைப்பூ உலகிற்குப் புதியவன். நீங்கள் இந்நாள் வரை செய்திருக்கும் சேவை அளப்பரியது. நான் GCT பழைய மாணவன். எ.எ.பாலா பதிவிலிருந்து நீங்களும் GCT என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன்.
உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
By ஓகை, At July 03, 2006 12:42 PM
வருத்தமான முடிவு காசி. ஆனால் பிரச்னையின் வேர் ஆரம்பித்தது அமெரிக்காவில் இருந்து! ராக், ரெடி ஆகியோரோடு சேர்ந்து உங்கள் உற்ற நண்பரும் நடுநிலைவாதி என சொல்லிக் கொள்பவருமான மில்க்மேனும் அந்தக் கூட்டத்தில் ஒருவர்.
By வால்டர், At July 03, 2006 10:24 PM
கோயிஞ்சாமி அவர்கள் சொல்வது கொஞ்சம் தவறு. பிரச்னையின் ஆரம்பம் Red kumar அவர்கள். அவர் தூண்டிவிட்டு கத்தச் சொன்னது Sree Mountain அவர்களை. Milkji அவர்கள் நடுநிலைவாதிதான் என்றாலும் ஜாதி சம்பந்தமாகப் பார்க்கும்போது அவரும் சாய்ந்துதானே ஆகவேண்டும்.
அதன் பின்னர் அவர்கள் எல்லாம் சேர்ந்து ஆரிய Honeyகூடு வளர பாடுபட்டனர். தமிழ்art காரர்களோடு கைகோர்க்க வைத்து தங்களின் விசுவாசத்தைக் காட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
By மரத் தடி, At July 04, 2006 9:46 PM
சகோதரர் காசி அவர்களே, உங்களின் எதிர்காலம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தமிழ்மணத்தை சிறந்த முறையில் நடத்திய உங்களுக்கு என்னுடைய நன்றி.
By அப்துல் குத்தூஸ், At July 19, 2006 2:24 AM
dear sir,
i am turn on moderant coment so please publish comments also
thanks
ieraiyadiyan
By இறையடியான், At September 12, 2006 7:19 AM
தங்களுடன் எனக்கு மானசீகத் தொடர்பு மட்டும்தான். 'யூனிகோடு என் கோடு, யூனிகோடு உன்கோடு' (யூனிகோடு நம்கோடு) என்ற தங்கள் பதினான்கு கட்டுரைகளை வாசித்தபின்புதான், என் 'இனிய வலை அனுபவம்' தொடங்கியது. என் மூன்று பதிவுகளையும் உங்கள் தமிழ்மணத்தில் முறையாகச் சேர்த்தேன். தமிழ் இணையம் பற்றிய என் சொற்பொழிவுகளில் எல்லாம் - குறிப்பாக முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கும் - பிற துறைப் பேராசிரியர்களுக்கும் ஆற்றியவற்றில் - தங்களின், 'வலைப்பதிவு திரட்டலில் ஒருங்குறி குறித்த சாதனை'யை வெளிப்படுத்தியுள்ளேன். அண்மையில், புதுச்சேரி பிரஞ்சு இன்ஸ்டிடூட் நிறுவனத்தில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கத்திலும் ஒருங்குறியிலேயே என் கட்டுரையைத் தயாரித்துத் தந்தேன். அவ்வாறே அச்சீடுகளையும் பேராளர்களுக்கு வழங்கினார், இந்தியவியல் ஆய்வாளர் திரு கண்ணன். இதுவரை, நான் தங்களுடன் நேரில் தொடர்பு கொள்ளவோ, தொ.பே. வழிப் பேசவோ முயன்றதில்லை.அதனால் என்ன? தங்களை நன்றாக உணர்வேன். தாங்கள் சரியான தீர்மானத்தையே எடுத்திருப்பீர்கள். இத்தகைய திடசித்தம், என்றும் நம்மை உரிய காலத்தில் உரிய முறையில் நடத்தும்.
அன்புடன்,
பேராசிரியர் அ. பசுபதி
(தேவமைந்தன்)
மேனாள் துறைத் தலைவர்,
தமிழ்த் துறை, தாகூர் அரசினர் கலைக் கல்லூரி, புதுச்சேரி-605 008.
By அ. பசுபதி (தேவமைந்தன்), At September 17, 2006 1:57 AM
தமிழ்மணம் திரட்டியின் பதிவர்கள்:
உங்கள் பதிவின் மறுமொழிகள் தாமாகவே திரட்டப்படும் வகையிலே மட்டுறுத்தல் வசதி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறதா என்பது முடிந்தவரை சரி பார்க்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கிறன. இன்னும் அவ்வாறு இயங்காத பதிவுகள் இருந்தால் அறியத்தாருங்கள்.
புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
By தமிழ்மணம், At September 18, 2006 10:15 AM
வணக்கம்.
என் புதிய வலைப்பதிவான kadalganesan.blogspot.com-ல் ஐந்து பதிவுகள் எழுதியபின் தமிழ்மணத்தில் சேர்க்க முயற்சித்தேன்.. இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து 'குறைந்தது மூன்று பதிவுகள் எழுதியபின் சேர்க்க முயற்சிக்கவும்' என்று என் பதிவை ஏற்க மறுக்கிறது.. ஐந்து பதிவு எழுதியபின்னும் அப்படி பதில் கிடைப்பதால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என உதவினால் நன்றாக இருக்கும். நன்றி.
By கடல்கணேசன், At September 18, 2006 11:19 AM
என்னுடைய பதிவில் இருக்கும் பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் aggregate ஆகவில்லை.
can you check? I have comments moderation turned on.
thanks,
By BadNewsIndia, At October 22, 2006 11:27 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home