இடுகைகளுக்குப் பதிவர் குறிச்சொல் (unique tag) தரும் வசதி
தற்போது இடுகைகளை தலைப்புகள்(துறைகள்) வாரியாக வகைபிரிக்கும் வசதியை தமிழ்மணம் அளிப்பதை பலரும் அறிவோம். இதன்மூலம் 16 வகையான தலைப்புகளின்கீழ் எந்த ஒரு இடுகையையும் அளிக்கவும், பிறகு தலைப்புகள்வாரியாகப் பிரித்து அறிய விரும்புபவர் அதை எளிதில் செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளதும் அறிந்திருப்போம்.
ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் எழுதப்படும் இன்றைய சூழலில், சில மணிகளே தமிழ்மணத்தின் முகப்பில் ஒரு இடுகை நிலைக்க முடிகிறது. அதற்குமேல் வாசிக்க, 'இன்று' என்ற பக்கத்தில், ஒரு செய்தித்தளத்தின் முகப்பைப் போல கடந்த 24 மணிநேரத்தில் எழுதப்பட்ட அனைத்து இடுகைகளும் தொகுக்கப்பட்டுக் கிடைக்கின்றனவே, அங்கு செல்லலாம். அல்லது 'சென்ற நாட்கள்' என்ற பக்கத்தில், கடந்த மாதங்களில் எந்த ஒரு நாளையும் தேர்ந்தெடுத்து அன்று எழுதப்பட்ட அனைத்து இடுகைகளையும் காணலாம். இங்கு விருப்பப்பட்ட தலைப்புகளை ம்ட்டும் தேர்ந்தெடுத்து அவற்றின்கீழ் வரும் இடுகைகளை வாசிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
சில நாட்கள் தொடர்ந்தாற்போல ஒரு குறிப்பிட்ட பொருளை மையமாக வைத்து பலரும் எழுதுவதைப் பார்க்கிறோம். உதாரணமாக, புத்தக மீமீ, நாலுநாலு, தேர்தல் அலசல், இட ஒதுக்கீடு, மதுமிதாவின் புத்தகம், தேர்தல் 2060 கதை, என்பனவற்றைச் சொல்லலாம். இவற்றை நிலையான 16 தலைப்புகளுக்குள் அடக்கிவிட்டாலும், குறிப்பிட்ட பொருளின்மேல் எழுதப்பட்ட சுட்டிகளை மட்டும் தேடி எடுப்பது கடினம். 'இடுகைகளில் தேட' என்ற பக்கம் ஓரளவுக்கே இந்தத் தருணத்தில் உதவமுடியும். இத்தகைய நிலையில் உதவ, பதிவர்களே உருவாக்கும் குறிச்சொற்கள் தர தமிழ்மணத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல், வலைப்பதிவர் தங்கள் இடுகையை தமிழ்மணத்தில் சேர்க்கும்போது, வகைபிரித்தலுடன், கூடவே ஒரு குறிச்சொல் இடும் பெட்டியும் இருக்கும். ஏற்கனவே நடப்பில் உள்ளசொற்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது புது சொல்லை நேரடியாக உள்ளிடலாம். இது ஒருவகையில் டெக்னோரட்டி டேக் (Technorati tag) போலத்தான். ஆனால் இதில் பெரிதாக எந்த வேலையும் செய்யாமல் எளிதில் உங்கள் இடுகைக்கு நீங்கள் டேக் இடுகிறீர்கள். ஒரு குறிச்சொல்லின் 'பிரபலம்' குறிப்பிட்ட காலத்தில் (இப்போது கடந்த 7 நாட்கள்) எத்தனை இடுகைகள் அதே குறிச்சொல்லைப் பயன்படுத்துகின்றன என்பதையும், எத்தனை முறை ஒரு சாதாரணப் பயனர் அந்த குறிச்சொல்லின் கீழ் உள்ள இடுகைகள் பட்டியலைப் பார்வையிடுகிறார் என்ற இரண்டையும் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் இந்த குறிச்சொற்கள் தனிக்கட்டத்தில் சுட்டிகளாகக் காட்டப்படுகின்றன. மேற்சொன்ன 'பிரபல'த்தைப் பொறுத்து அவற்றின் எழுத்து உயரங்கள் தானாகத் தீர்மானிக்கப்படுகின்றன.
இது சோதனை முறையில் இன்று முதல் வேலை செய்யத் தொடங்கும். சில நாள் பயனுக்குப் பின் தேவைப்படும் மாறுதல்கள் செய்யப்படும். இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்திப் பார்க்க அனைத்து வலைப்பதிவர்கள் மற்றும் பயனர்களை அழைக்கிறேன்.

16 Comments:
காசி, நன்றி. தமிழ்மணத்தின் சேவையினை அன்போடும் நன்றியோடும் நினைவுகூர இப்பின்னூட்டத்தினை இடுகிறேன்.
-/.
By Anonymous, At May 29, 2006 11:23 AM
தேர்தல் 2060 கதை??
By Anonymous, At May 29, 2006 11:50 AM
//
ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் எழுதப்படும் இன்றைய சூழலில், சில மணிகளே தமிழ்மணத்தின் முகப்பில் ஒரு இடுகை நிலைக்க முடிகிறது. அதற்குமேல் வாசிக்க, 'இன்று' என்ற பக்கத்தில், ஒரு செய்தித்தளத்தின் முகப்பைப் போல கடந்த 24 மணிநேரத்தில் எழுதப்பட்ட அனைத்து இடுகைகளும் தொகுக்கப்பட்டுக் கிடைக்கின்றனவே, அங்கு செல்லலாம்.//
காசி, ஒரு சிறு ஆலோசனை. விரும்பினால் நடைமுறைப்படுத்துங்கள்.
நீங்கள் கூறும் "இன்று" இற்கான கவன ஈர்ப்பு போதாமலிருப்பதை உணர்கிறேன்.
"இடுகைகள்" என்ற தலைப்பில் அது இருக்கிறது.
நட்சத்திரப்பதிவரின் இடுகைகள் கவன ஈர்ப்பை பெறுவது போல, இன்றைய அத்தனை இடுகைகளையும் பார்ப்பதற்கான பக்கம், முகப்பில் கவ ஈர்ப்பினை இலகுவாக பெறக்கூடியவண்ணம் காண்பிக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
நட்சத்திர பதிவரின் இடுகையை காட்டும் பெட்டிக்கு மேலாக, அல்லது கீழாக, இன்றைய இடுகைகள் அனைத்தையும்படிக்க" என்பது போன்ற கவர்ச்சிகரமான தலைப்புடன் சிறு பொத்தான் அல்லது பெட்டி இடலாம்.
தமிழ் மணம் தொழிநுட்ப ரீதியாக மேம்படுவது பற்றி மிகுந்த மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.
By மு. மயூரன், At May 29, 2006 11:52 AM
வணக்கம் காசி!
நல்ல வகைப்படுத்தும் முயற்சி.மேலும் தொடரட்டும்!
By வவ்வால், At May 29, 2006 12:01 PM
Thanks, Kasi !
By enRenRum-anbudan.BALA, At May 29, 2006 12:46 PM
நன்றி காசி.
நல்லா இருங்க.
By துளசி கோபால், At May 29, 2006 5:01 PM
காசி,
நல்ல பல சேவைகளைச் செய்கிறீர்கள். மிக்க நன்றி!
அத்துடன் "சமீபத்தில் மறுமொழியிடப்பட்டவை" முதல் பக்கத்தில் தெரியப்படுத்தும் வசதியை சிலர் துஷ்ப்பிரயோகம் செய்து தங்கள் பதிவு தொடர்ந்து முதல் பக்கத்தில் தக்க வைத்துக் கொள்கிறார்கள். அதாவது,
1) நன்றி A அவர்களே,
2) வருகைக்கு நன்றி B அவர்களே,
இப்படியாக ஒவ்வொரு பின்னூட்டமாக சிறிது இடவெளியில் இட்டு பின்னூட்ட ஊழல் செய்கிறார்கள்.(Please Don't Do like this
இதற்கும் ஏதாவது செய்து ஊழலற்ற பின்னூட்டங்கள் பெறும் பதிவுகள் மட்டும் தெரிய ஏதும் செய்ய முடியுமா?
By அதிரைக்காரன், At May 29, 2006 5:31 PM
நல்லதொரு விடயம். நன்றி காசி.
By இளங்கோ-டிசே, At May 29, 2006 11:51 PM
நன்றி காசி.
By `மழை` ஷ்ரேயா(Shreya), At May 30, 2006 12:01 AM
Really Good one! Great!
By Vaa.Manikandan, At May 30, 2006 12:20 AM
சிறப்பான முயற்சி காசி. நன்றி
By மானஸாஜென், At May 30, 2006 9:43 AM
மேம்படுத்துவதில் எடுத்துள்ள அடுத்த படிக்கு நன்றியும், வாழ்த்தும்.
By தருமி, At May 30, 2006 10:29 AM
நன்றி!!
By SnackDragon, At May 30, 2006 1:16 PM
நல்ல முயற்சி. நன்றி.
இன்னொரு சிக்கல்.
வலைப்பதிவர் பட்டியலில் பதிவர்களின் பெயர்களின் முதலெழுத்துப் படி முற்றாக ஒழுங்கு படுத்தப்படவில்லை. காட்டாக 'அ' வை அழுத்தினால் 'அ'வில் தொடங்கும் பெயர்களையுடைய பதிவர்களைக் காட்டவேண்டும். ஆனால் அப்படிக் காட்டப்படுவதில்லை. அவற்றையும் சரிசெய்தால் வசதியாக இருக்கும். ஒழுங்குபடுத்தப்பட்ட ஏனைய எழுத்துக்களில்கூட அகரவரிசை கவனிக்கப்படவில்லை.
By வசந்தன்(Vasanthan), At June 02, 2006 9:12 PM
பதிவர் குறிச்சொல் என்னும் வசதி சிறப்பானது. தேவையானதும்கூட.
ஆனால் அதைப்பயன்படுத்தும் வலைப்பதிவர்களில் சிலர் தங்கள் பெயர்களை (காண்க மாயவரத்தான், குமரன்...) குறிச்சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். இது ஒருவகையில் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்தும் செயலாகத் தோன்றுகிறது. மதுமிதாவின் பெயர் ஒருகுறிப்பிட்ட தேவைக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதுபோன்று சும்மா பயன்படுத்தும் போது உண்மையான குறிச்சொற்கள் கவனம் இழக்கின்றன. தங்கள் பதிவுகள் அனைத்தும் முகப்பில் இடம்பெற வேண்டும் என்று ஒவ்வொருவரும் இப்படிச்செய்ய ஆரம்பித்தால் தமிழ்மணம் திணறித்தான் போகும். இதற்கு சரியான விதிமுறை வகுக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
மேலும் வசந்தன் கூறியுள்ளது போல தமிழ்மணத்தின் வலைப்பதிவர் பட்டியல் எந்த விதத்திலும் சரியானதாக இல்லை. முதற்பக்கம் எந்த அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது என்பது புரியவில்லை. அகர, ஆகார வரிசைகளில் வரும் பட்டியலுக்கும் வரிசைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குறிப்பாக ஞான வெட்டியானின் பதிவுகள் முதற்பக்கஙகளிலும் அகரவரிசையிலும் எப்படி வரும் என்பது தெரியவில்லை. பிற பக்கங்களும் முறையான அகரவரிசையில் இல்லை.
பழைய தமிழ்மணத்தில் இவை மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அதில் நாடுவாரியாக ,காலவரிசையில், அகரவரிசையில் சரியாக காணமுடிந்தது!!!
By வலைஞன், At June 18, 2006 1:38 AM
இன்று கோவி.கண்ணன்..................
By வலைஞன், At June 19, 2006 9:24 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home