தமிழ்மணம் அறிவிப்புகள்

Sunday, December 18, 2005

வழங்கி மாற்றம் நிறைவுபெற்றது

தமிழ்மணம் தளம் இயங்கும வழங்கி (சர்வர்) இடம் பெயரும்போது சில தடங்கல்களை எதிர்பார்த்தோம். ஆனால் கிட்டத்தட்ட இடையூறு இல்லாமல் இந்த வழங்கி மாற்றம் நிறைவடைந்துவிட்டது. மறுமொழி நிலவரம் காட்டுவதில் சில குழப்பங்கள் நேர்ந்திருக்கலாம், மற்றபடி எதுவும் இழப்பில்லை. கடைசிநாளன்று அளிக்கப்பட்ட வாக்குகளும் கணக்கில் வராமல் போய்விட்டன. பொறுத்துக்கொள்ளுங்கள். கடைசியாக பட்டியலில் சேர்க்கப்பட்ட சில பதிவுகள் இப்போது இன்னும் சேர்க்கப்படாதவை போலத் தெரியும். அவற்றையும் கூடிய விரைவில் சரி செய்யப்படும். புதுப் பதிவுகளை பட்டியலில் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் சற்று பொறுத்தால் நல்லது. புத்தாண்டில் புது நடைமுறையில் சேர்க்கலாம்.

இந்த மாற்றத்தினால் விளைந்த ஒரு குறை: இப்போதைக்கு பதிவுகள் திரட்டப்பட 2 மணி நேரம் வரை ஆகலாம். மேலும் தங்கள் பதிவு விட்டுப்போனதாகக் கருதும் பதிவர்கள் தமிழ்மணம் கூகிள் குழுமத்திலோ, அல்லது தனி அஞ்சலிலோ தெரிவிக்க வேண்டுகிறேன். ஏற்கனவே எழுதியிருந்தாலும் இன்னொருமுறை எழுதி உதவுங்கள்.

நன்றி.

அடுத்து இம்மாத இறுதியில் ஒருமுறை தடங்கல் வர வாய்ப்பிருக்கிறது.

9 Comments:

 • காசி,

  தகவலுக்கு நன்றி!

  என்னுடைய கடைசி பதிவு 10/10 என்ற ஓட்டு நிலவரத்தில் இருந்தது. நேற்று திடீரென 0/0 என மாறிவிட்டது!! 10 (-) ஓட்டுகள் அன்பர்கள் குத்தியிருந்தாலும் 0/20 என்றல்லவா வரவேண்டும்!! இப்போ ஒரு + குத்துனேன். 1/1ன்னு காட்டுது!

  சர்வர் இடம்மாறுனதுல என் ஓட்டுகள் வழில காணாமப்போயிருச்சா என கேட்பது எனக்கே அதிகமாகப்பட்டாலும்...!?

  ஹிஹி...

  By Blogger இளவஞ்சி, At December 18, 2005 11:42 AM  

 • இளவஞ்சி. உங்க பதிவின் ஓட்டு மட்டுமில்ல. எல்லாப் பதிவுகளின் ஓட்டுகளும் காணாமப் போச்சுன்னு நெனைக்கிறேன். வியாழன் என்ன நிலவரத்துல ஓட்டுகள் இருந்ததோ அந்த நிலவரத்துல இப்ப எல்லா பதிவுகளின் ஓட்டுகளும் இருக்கு. அது ஒண்ணும் பெரிய இழப்பு இல்லைன்னு நினைக்கிறேன். :-)

  By Blogger குமரன் (Kumaran), At December 18, 2005 11:55 AM  

 • சிறப்பாக முடித்ததற்கு வாழ்த்துக்கள்.

  By Blogger Ram.K, At December 18, 2005 12:09 PM  

 • சிறப்பாக முடித்த தமிழ்மணம் காசி அண்டு குழுவினருக்கு அன்பான வாழ்த்துக்கள்.

  By Blogger துளசி கோபால், At December 18, 2005 1:38 PM  

 • இளவஞ்சி, குமரன் சொல்வது சரிதான். போகிற வழியில் சிந்தி விட்டது:-)) மேலேயும் மாற்றிவிட்டேன்.

  கமிலியான், துளசி, நன்றி.

  By Blogger காசி (Kasi), At December 18, 2005 9:47 PM  

 • வாழ்த்துக்கள்.

  By Blogger KARTHIKRAMAS, At December 18, 2005 10:04 PM  

 • thanks Mr.Kasi

  இளவஞ்சி சொன்ன மாதிரி என் பதிவுகளிலும் ஓட்டுக்கள் சிந்தி விட்டன.ஏதாவது கிரேஸ் மார்க்....ஹி ஹி

  By Blogger முத்து(தமிழினி), At December 18, 2005 11:42 PM  

 • காசி,
  வாழ்த்துக்களும் நன்றியும்..
  கொஞ்ச நாள் வராம இன்று திடீர்னு வந்தேன்.. மாற்றங்கள்.. நன்றி..

  By Blogger ராம்கி, At December 19, 2005 12:23 AM  

 • வாழ்த்துக்கள்.

  =இஸ்மாயில் கனி

  By Anonymous Anonymous, At December 19, 2005 12:29 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]<< Home