தமிழ்மணம் அறிவிப்புகள்

Sunday, April 17, 2005

வலைப்பதிவர் மன்றத்தில் நேரடியாகத் தமிழில் உள்ளிட வசதி

இதுவரை வலைப்பதிவர் மன்றத்தில் ஊடாடும்போது எ-கலப்பை போன்ற கருவிகளோ, பொங்குதமிழ் போன்ற வலைப்பக்கங்களில் அமைந்த கருவிகளோ இல்லாமல் தமிழில் எழுத முடியாமல் இருந்தது. தமிழ் எழுத்துப்பெயர்ப்பு/குறியெண்பெயர்ப்புக் கருவிகளில் முன்னோடியான சுரதா யாரும் கேட்காமலேயே தானாக முன்வந்து இதற்கும் ஒரு கருவி செய்து கொடுத்திருக்கிறார். அதை இப்போது சேர்த்திருப்பதால் இனி எந்த கூடுதல் கருவியும் இன்றி நேரடியாக தமிழில் உள்ளிடலாம். அவருக்கு நம் எலலார் சார்பிலும் மனப்பூர்வமான நன்றி.இன்றுடன் எந்த வலைப்பதிவு நுட்பமானாலும், தமிழ்மணம் சேவைகளானாலும் மன்றத்தில் மட்டுமே கேட்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது. இவை சம்பந்தமாக எனக்குத் தனிமடலில் யார் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் வராது என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன். அனைவரது ஒத்துழைப்பையும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

2 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]<< Home