தமிழ்மணம் அறிவிப்புகள்

Friday, April 01, 2005

நினைவூட்டல் (நன்கொடை)

இனியும் சமாளிக்கமுடியாது. நானும் முடிந்த அளவு தாங்கிப்பாத்துட்டேன். எத்தனையைத் தான் ஒருத்தனாலே சமாளிக்கமுடியும். 'பத்துப்பேருக்குப் பல்லுக்குச்சி, ஒருத்தனுக்குத் தலைச்சுமை' கேட்டிருக்கோமில்லயா? அதனால இனி உங்க நன்கொடை இல்லாம தமிழ்மணம் தளம் நடத்த என்னால் முடியாது. ஆகவே உங்க நன்கொடைகளை கீழ்க்கண்ட விதங்களில் அளிக்கலாம்.

  1. ஒரு கேள்வி கேட்கும் முன் கொஞ்சம் ஆழமாக படித்து, நாம் எதையாவது விட்டிருப்போமோ என்று ஒரு முறைக்கு இருமுறை சோதித்து, பின் கேட்கலாம்.
  2. அப்படியே கேட்டாலும் பொதுவில் கேட்பதால் இதே கேள்வி மனதில் இருக்கும், அல்லது ஏற்கனவே கேட்டுவிட்ட, பலருக்கும் பதில் கிட்டுமே, என்று பொதுவில் கேட்கலாம்.
  3. $50 000 0000 பெறுமதியுள்ள கூகிள் அளிக்கும் ப்ளாக்கர்.காம் சேவையின் ஓட்டைகள் எத்தனை? அந்த ஓட்டைகள் ஒவ்வொன்றுக்கும் கூகிளுக்கு எழுதிவிட்டு, கையோடு தமிழ்மணம் ஓட்டைகளை எனக்கு எழுதலாம்.
  4. அதி உன்னதமான ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் தமிழ் ஒழுங்காகத் தெரிய வைக்கச் செய்ய மென்பொருள் வல்லமை இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் வல்லமை உள்ளவர்களைக் கெஞ்சி வேலை வாங்க ஒரு பத்து ஓட்டு போட்டுவிட்டு, பிறகு வாசகர் பரிந்துரையில் 'கள்ள ஓட்டு நொள்ள ஓட்டு' கதை பேசலாம்.
  5. மிகவும் அடிப்படையான, இங்கே 100 பேருக்காவது பதில் தெரிய வாய்ப்புள்ள கேள்விகளை 'மன்றம்' என்ற பெயரில் 'தண்ட'மாக நிற்கும் மேடையிலே கேட்கலாம்.
  6. மன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நானே பதில் சொல்லணும் என்று எதிர்பார்க்காமல், பதில் சொல்வது என் ஒருவனின் பிறப்புரிமை என்றில்லாமல், தெரிந்தவர்கள் தங்கள் பொன்னான நேரத்தில் சிறு துளியை ஒதுக்கி, பதிலிறுக்கலாம்.
  7. இன்னும் முதிர்ச்சியடையாத xml தொழில்நுட்பத்தில் இயங்கிவரும் வலைப்பதிவு/திரட்டு போன்றவற்றால் சில சமயம் பிழையான சேவை கிடைக்க வாய்ப்பிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். தமிழ்மணம் தளத்தின் முதல் வாடிக்கையாளர் நான். எனவே இந்தக் குறைகளைக் களைய இயன்ற விரைவில் முயன்றுகொண்டே இருக்கிறேன். எனவே ஓரிரு முறை அவதானித்த பின், குறை பெரியதாக இருந்தால் மட்டும், தொடர்ந்து நிகழ்வதாக இருந்தால் மட்டும் சுட்டிக் காட்டலாம். அதையும் பொதுவில் வைக்கலாம். தமிழ்மணம் நடவடிக்கையில் எதுவுமே திரை மறைவில் இல்லை.
இந்த நன்கொடைகளை அளித்தால் மட்டுமே தொடர்ந்து என்னால் சேவை அளிக்க முடியும் என்பது கசப்பான உண்மை.

நம்பிக்கையுடன்,
-காசி

24 Comments:

  • //'மன்றம்' என்ற பெயரில் 'தண்ட'மாக நிற்கும் மேடையிலே// :( வலைப்பதிவர்கள் இங்கும் அவ்வப்போது எட்டிப்பார்த்தால் நல்லது!

    மேற்கண்ட நன்கொடைகளுடன், வலைப்பதிவர்கள் தமிழ்மணம் பக்கங்களில் ஆங்காங்கே தெரியும் கூகிள் விளம்பரச் சுட்டிகளையும் தோன்றுகிறபோது சொடுக்கிவிடலாம். :)

    By Blogger இராதாகிருஷ்ணன், At March 04, 2005 10:28 AM  

  • இதை கேக்கக் கூடாதுதான்.
    இருந்தாலும் கேட்டல்தானே எல்லோருக்கும் தெரியும்.

    நன்கொடை என்ன கொடுக்க வேண்டும்?
    எப்படி கொடுக்கவேண்டும்? ஒரு குத்துமதிப்பா சொன்னால் கொஞ்சம் உதவியாயிருக்கும்.

    ஒருவருஷத்து என்ன நன்கொடைன்னு சொன்னா வசதியாய் இருக்குமா உங்களுக்கு?

    என்னை சேர்த்துக்கோங்க, நன் கொடை லிஸ்டுல...[எல்லாம் பெரிசா கேக்க மாடீங்கங்குற நம்பிக்கைதான்.. ]

    By Blogger SnackDragon, At March 04, 2005 10:51 AM  

  • போச்சு, என்னோட காலை அஞ்சல் இந்தளவுக்கு உங்களை ஆக்கிருச்சா?:( நான் மன்றத்துலயும் கேட்டுட்டதால கொஞ்சம் ஆதரவா இருக்கு. உதவத் தெரியலன்னாலும் உபத்திரவம் தராம இருக்கதுன்னு முடிவு பண்ணிட்டேன்!

    By Blogger சுந்தரவடிவேல், At March 04, 2005 11:02 AM  

  • //ஆதரவா// slip of the fingers!
    ஆறுதலா

    By Blogger சுந்தரவடிவேல், At March 04, 2005 11:03 AM  

  • ஆஹா... சறுக்கிட்டியேடா சிங்காரம்...
    காசி மன்னிக்கவும், உண்மையிலேயே ஏதோ பணம் கேக்கிறீங்களோன்னு(எக்குத்தப்பா) தோனிடுச்சு..

    இந்த நன்கொடைகள்தானே , செய்கிறேன்.

    By Blogger SnackDragon, At March 04, 2005 12:00 PM  

  • ஸ்லிப் ஆப் eyes .. (reading)

    By Blogger SnackDragon, At March 04, 2005 12:01 PM  

  • மக்களே , எல்லோரும் மன்னிக்கனும்,
    இதுவரை யாமளித்த மறுமொழிகளிலே இது போல்
    எங்கணும் காணோம்,

    2005 - பெஸ்ட் சொதப்பல் மறூமொழியாக என்னுடையதை அறிவிக்கிறேன்.

    By Blogger SnackDragon, At March 04, 2005 12:04 PM  

  • நியாயமான நன்கொடைகள்!

    By Blogger Thangamani, At March 04, 2005 1:01 PM  

  • வசூலித்த பணத்தை கூகிள் திருப்பிக் கொடுக்கிறது. தமிழ்மணமும் நட்சத்திரங்களைப் 'பார்த்து போட்டு' கொடுக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க ஆரம்பிச்சுடுவோம்...

    http://www.iht.com/bin/print_ipub.php?file=/articles/2005/03/03/business/clickfraud.html

    By Blogger Boston Bala, At March 04, 2005 1:35 PM  

  • நன்கொடை பங்களிப்பில், ஊருக்கு ஒத்தது எனக்கும்!

    By Blogger அபூ முஹை, At March 04, 2005 1:45 PM  

  • //அதி உன்னதமான ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் தமிழ் ஒழுங்காகத் தெரிய வைக்கச் செய்ய மென்பொருள் வல்லமை இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் வல்லமை உள்ளவர்களைக் கெஞ்சி வேலை வாங்க ஒரு பத்து ஓட்டு போட்டுவிட்டு, பிறகு வாசகர் பரிந்துரையில் 'கள்ள ஓட்டு நொள்ள ஓட்டு' கதை பேசலாம்.//

    ஹ்ம்ம் யாரை சொல்றிங்கன்னு தெரியலை. இருந்தாலும், கள்ள ஓட்டு பிரச்சனையை பொதுவில் சொன்னதற்கு மாப்பு.

    By Blogger Unknown, At March 05, 2005 5:30 AM  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger Kasi Arumugam, At March 05, 2005 9:28 AM  

  • கார்த்திக்கு, கார்த்திக்கு :-}

    நீங்க எழுதுவதைத்தான் ஒழுங்கா ஃப்ரூப் பார்ப்பதில்லைன்னு தெரியும், அதுக்காக மறுமொழியும் பதிவையாவது படித்துப் பார்த்து... என்னவோ போங்க, முதல் பாயிண்ட்டே உங்களை மாதிரி ஆளுக்குத்தான்:P

    சு.வ., KVR,
    யாரையும் தனியாகக் குறிப்பிட்டு நான் எழுதவில்லை. ஆனால் மொத்தமாகப் பார்க்கும்போது தோன்றுவதே நான் எழுதியது.

    ராதா, ஜெயஸ்ரீ,

    Hosting செலவுகள் இப்போதெல்லாம் மிக சொற்பம் ஆகிவிட்டது. இரண்டு பேர் ஒரு வேளை பீஸா சாப்பிடும் செலவை விட ஒரு மாதச் செலவு குறைச்சல். கூகிள் விளம்பரங்கள் பயனர்களுக்கு சம்பந்தமில்லாமலேயே பலதும் வருகின்றன. எனவே அவற்றைச் சொடுக்கச் சொல்லுவது சரியாகப் படவில்லை. உண்மையிலேயே கவனத்தைக் கவரும் விளம்பரங்களை சொடுக்கிப் பாருங்க. எனக்காக செய்ய வேண்டியதில்லை.

    பாபா,

    சொல்ல வருவது புரியலை:-(

    மூர்த்தி,

    நம் மக்களுக்குக் கூட்டம் கொஞ்சம் அதிகமாகிவிட்டாலே, அவர் செய்வார் என்று இவரும், இவர் செய்வார் என்று அவரும் விட்டுவிடுவது வாடிக்கை. 'எல்லாரும் பால் ஊத்தும்போது, நான் மட்டும் தண்ணி ஊத்தினாத் தெரியவா போகுது?' கதை தெரியுமில்லையா? ஆனாலும் இணையத்தில் கேள்வி கேட்பது வானத்தைப் பார்த்துக் கூவுவதைப் போல. நண்பனுக்கு எழுதும் கடிதம் போன்றது அல்ல அது. 'ஏண்டா பதில் போடலை?' என்று யாரையும் பிடித்து உலுக்க முடியாது;-)

    மறுமொழிந்த அனைவருக்கும் நன்றி. மறுமொழியோடு செயலிலும் காண்பித்தால் நன்றியுடைவனாவேன்:-D

    By Blogger Kasi Arumugam, At March 05, 2005 9:31 AM  

  • காசி, மதி! ஏனோ கண்ணன் சாரின் பதிவைப் பார்த்ததும் என்னை சொல்வதாய் தோன்றியதால், என்னால் ஏற்பட்ட அனைத்து குளறுபடிகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கண்ணன் சார், நீங்க தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் பிளாக்கர் அக்கவுண்ட் இல்லாததால் இங்கு இடுகிறேன். பிளாக்கர் அக்கவுண்ட் யூசர் நேமில் எந்த பெயரைப் போட்டாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இவ்வளவு ஆர்வமாய் செயல் படும் உங்கள் செயலில் நொட்டை, நொள்ளை கண்டுப்பிடிப்பது என் எண்ணமில்லை என்பதை நீங்கள் நம்புவீர்கள் என்று நம்புகிறேன்.
    மன்னிப்பீர்கள் என்ற எண்ணத்துடன்,
    உஷா

    By Anonymous Anonymous, At March 05, 2005 1:16 PM  

  • வேறு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் கரும்புச்சாறு தேனும் பாலும் ஆறுமாக ஓடிகிறது என்று சொல்லத்தோன்றி இருக்கும். இது அப்படியெல்லாம் கடிக்க உகந்த நேரமில்லை.

    மதியின் ஊக்கத்தினால் வலைப்பதிவாளர்கள் தமிழில் (ஆரம்பகாலங்களில்) வளர்ந்ததை மறக்க முடியாது. (பிறகு பாராவால் நான் வலைப்பதிவு ஆரம்பித்ததையும் மறக்க முடியாது.)

    ஆனால் தமிழ்வலைப்பதிவுகள் எல்லாம் பெருங்கடலில் கரைந்து பலதில் ஒன்றாகி கவனிக்கப்பெறாமல் ஆகிவிடும் என்றே நினைத்திருந்தேன். ஏதோ, அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்தவர்களின் பதிவுகள் மட்டுமே குழுக்குழுவாக வாசிக்கப்படும் என்றே தோன்றியது.

    ஆனால் எல்லாம் நல்லபடியாவே நடக்கும், கணினியில் மட்டும் இல்ல, காலத்திலும் தமிழ் நிலைச்சு நிற்கும்ங்கற நம்பிக்கை வரவழைச்சது "தமிழ்மணம்."

    தமிழ் வளர்ச்சி வரலாற்றில் நிச்சயம் காசிக்கு ஒரு folder உண்டு... மன்னிக்கவும், இடம் உண்டு.

    இவ்வளவு சொல்லிட்டு, அப்பறம் நானும் எதுக்காவது மன்னிப்பு கேட்டாதான் என் ஆத்மா சாந்தி (எந்தப் பெண்ணின் பெயரும் இல்லை) அடையும்.

    எனவே, உங்களை "ஓசி" என்று அழைத்ததற்கு மன்னிக்கவும்.

    மன்னிப்பால் மனசெல்லாம் மத்தாப்புடன்,
    க்ருபா

    By Anonymous Anonymous, At March 05, 2005 2:12 PM  

  • ஜெ, கூகிள் விளம்பரங்கள நம்ம வலைப்பக்கத்துல போட்டோம்னா, அதிகாரபூர்வமா மக்கள அதக் க்ளிக் பண்ணுங்கண்ணு நிர்வாகிகள் கேட்க முடியாது. இது தமிழ்மணத்துக்கு மட்டுமல்ல, எந்தத் தளமானாலும் அப்படித் தான் (அவங்க டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்ல இருக்குன்னு நினைக்கிறேன்).

    இது பத்தியெல்லாம் சொல்லாம வெளிப்படையா மனதுக்குப் பட்டதத் தான் காசி நேர்மையாகச் சொல்லியிருக்கார். (இதிலேயும் அசத்துறார்!). இதுக்காக அவர் சங்கடப்பட்டிருப்பதாக நீங்க நினைக்க வேண்டாம்.

    இதுக்க பதிலா நீங்க கேட்டத ஆமோதிச்சு வெளிப்படையா எல்லோரும் கூகிள் வி.பட்டியில குத்துங்கன்னு சொல்லியிருந்தாத் தான் சங்கடத்துக்கு ஆளாயிருப்பார்.

    தமிழ்மணத்துல கொஞ்சூண்டு சம்பந்தம் இருப்பதால் நானும் இது பத்தி எதுவும் சொல்லலைன்னு தெளிவாச் சொல்லிக்கிறேன்.

    By Blogger இரா. செல்வராசு (R.Selvaraj), At March 05, 2005 6:05 PM  

  • அது எப்படி? அதெல்லாம் கடயாது.

    அவங்க இங்க்லீஷ்லதான் போட்டு இருக்காங்க. அப்போ நாமளும் இங்க்லீஷுலதான் கேக்கக்கூடாது. தமிழ்ல கேக்கக்கூடாதுன்னு சொல்லலையே!

    அறிவுக் கொழுந்து,
    க்ருபா

    By Blogger க்ருபா, At March 05, 2005 6:13 PM  

  • இக்கு ரூபா, நீங்க வக்கீலுக்குப் படிச்சிருக்கீங்களா? :-)

    By Blogger இரா. செல்வராசு (R.Selvaraj), At March 05, 2005 6:26 PM  

  • @ காசி,

    //Hosting செலவுகள் இப்போதெல்லாம் மிக சொற்பம் ஆகிவிட்டது.//

    ஆனால் bandwidth usage-க்கு காசு வைக்க வேண்டுமே!
    என் பஞ்சு மிட்டாய் வெப்சைட் ஒன்றில், அழையா விருந்தினர்களான சுப்பர்-டூப்பர், ஆன்லைன் போகர் என்று எரிதங்களிலேயே என் bandwidth முழுக்கப் போய்விட்டது

    ஆனால் இவ்வளவு ஹிட் வாங்கும் உங்கள் சைட்டூக்கு எவ்வளவு bandwidth செலவாகும்! ஆகையால், தயவு செய்து Paypal அக்கவுண்ட் ஒன்று ஓபன் செய்து அங்கே இட்டு விடுங்கள்.

    நான் முதல் micro-patron ஆகிவிடுகிறேன்!

    புத்தகங்களுக்கு ஒரு wish list தயார் செய்து தனி மடலில் அனுப்ப வேண்டுகிறேன்

    நன்றியுடன்

    எஸ்.கே
    http://www.cyberbrahma.com/

    By Blogger Mahamaya, At March 06, 2005 12:54 AM  

  • வக்கீலுக்கு எல்லாம் படிக்கலை செல்வராஜ், ஆனா நான் BLதான். Bachelor of Lunacy. ;-)

    By Anonymous Anonymous, At March 07, 2005 10:13 AM  

  • ஐயா! காசி
    நன்கொடையை, நன்கொடைன்னே புரிஞ்சிகிட்டேன். அதான் எல்லாருக்கும் உள்ளது எனக்கும்னு சொன்னேன். தொழில் நுட்ப நன்கொடைன்னு லேட்டாத்தான் புரிஞ்சிது.

    By Blogger அபூ முஹை, At March 07, 2005 10:53 AM  

  • ஆஹா...அபூ முஹை. மறுபடியும் சொதப்பிட்டீங்களே! :-))

    By Anonymous Anonymous, At March 07, 2005 3:50 PM  

  • க்ருபா, ஒன்னுமே புரியலே போங்க!

    By Blogger அபூ முஹை, At March 08, 2005 1:11 AM  

  • நல்லது நானும் என்னால் முடிந்ததை செய்கிறேன். சிலர் என்ன பேசுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    என்னார்

    By Blogger ENNAR, At July 22, 2005 12:31 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home