தமிழ்மணம் அறிவிப்புகள்

Tuesday, March 08, 2005

தொட்டால் பூ மலரும்...

வலையிலே பூத்த மலர்கள் மணம் பரப்ப நாம் ஒரு கூட்டமைப்பாக இயங்குகிறோம். இந்தக் கூட்டுக் குடும்பத்துக்கு நாம் செய்ய வேண்டிய பங்களிப்பும் ஒன்று இருக்கிறது. அதுதான் நம் தளத்துக்கு வரும் வாசகர்களை மற்ற வலைப்பதிவுகளுக்கும் செல்ல அழைப்பு விடுப்பது. பொதுவாக இடது/வலது பக்கத்தில் இதற்கென தொடுப்புகள் (Links) என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே வலைப்பதிவு சேவை/மென்கலன் அளிக்கும் நிறுவனங்களின் படக்குறியீட்டுடன் அமைந்த சுட்டிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக 'I Power Blogger' , 'Comments by Haloscan', 'BlogCMS' போன்றவை.

இன்று நூற்றுக்கணக்கில் வலைப்பதிவுகள் வந்துவிட்ட நிலையில் பொறுக்கியெடுத்து சிலவற்றுக்கு மட்டும் தொடுப்புக் கொடுப்பது சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால் நம் கூட்டமைப்பின் மையத் தளமான தமிழ்மணம் தளத்துக்குத் தொடுப்புக் கொடுப்பது நமக்கு இயலாமல் போகுமோ?

ஆமாம் என்கிறார்கள் மூன்றில் ஒரு பங்கு வலைப்பதிவர்கள்!

மொத்தம் உள்ள 400+ பதிவுகளில் பல நடப்பில் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் இன்னும் 100க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தமிழ்மணத்துக்குத் தொடுப்பு இல்லை என்பது நாம் எவ்வளவு தூரம் ஒருவருக்கொருவர் கொடுத்து/வாங்கும் அனுசரணையுடன் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

மேலும், தொடுப்புக் கொடுத்த சிலரும் எங்கேயோ ஒரு ஒரமாக சிலர் கீழ்க் கோடியில், இடது மூலையில் கூடப் போட்டிருக்கிறார்கள். கண்ணில் எண்ணெய் விட்டுத் தேடினால்தான் அது தெரியும். விருப்பமில்லாமல் அப்படிப் போட்டிருந்தால் எடுத்துவிடலாம். போடாவிட்டாலும் எதுவும் தவறில்லை. ஆனால் மறந்து போய் விட்டுவிட்டவர்களுக்கு நினைவூட்டவே இந்த வேண்டுகோள்.

  1. முடிந்த வரை தமிழ்மணம் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிரல் துண்டை பாவியுங்கள்.
  2. 'படம் வழியாக எந்தத் தொடுப்புமே கொடுப்பதில்லை' என்ற கொள்கை வைத்திருந்தால் தவறில்லை. அல்லாத போது, தயவுசெய்து தமிழ்மணம் அளிக்கும் படம் வழியாகவே கொடுங்கள்.
  3. படத்தை வண்ணம் மாற்றுவது, அளவு மாற்றுவது, என்று சிதைக்காதீர்கள்.
  4. தனியான ஆக்கங்களுக்கான பக்கங்களிலும் (post pages) தமிழ்மணம் படத்துடன் கூடிய தொடுப்பு, சரியான இடத்தில் இருக்குமாறு செய்யுங்கள்.
இதுவும் ஒரு நன்கொடைதான். உங்கள் சக வலைப்பதிவர்க்கு. வாசகர் பலரும் ஒரு வலைப்பதிவுக்கு தமிழ்மணம் தவிர்த்த பிற வழிகளிலும் வருவார்கள், அவர்கள் மற்ற பதிவுகள் பற்றியும் அறிந்துகொள்ள இதுவே ஒரே வழி. அந்தத் தொடுப்பைத் தொட்டாலே மேலும் பல பூ மலரும். (அப்பாடா, தமிழ்ப் படம் போல டைட்டிலுக்கு விளக்கம் கொடுத்தாச்சு:-D)

6 Comments:

  • இடது பக்கக்கீழ்மூலை என்று என்னைத்தானே சொன்னீர்கள்? ;-) தூக்கிவிட்டிருக்கிறேன் :-) இதைத் தனிமடலிலே சொல்லியிருக்கலாமேயென்று சொல்லித் தூக்கிவிடாதீர்கள் ;-)

    By Blogger -/பெயரிலி., At March 08, 2005 1:05 PM  

  • Text link கொடுத்திருந்தும் இப்படி பெஞ்சு மேலே ஏத்திட்டீங்களே அய்யா! இப்ப..இப்பவே சரி செஞ்சுடறேன். பாத்துக்குங்க..

    By Blogger Salahuddin, At March 08, 2005 10:39 PM  

  • காசி: உண்மையில் இப்படித் தொடுப்புக் கொடுப்பது நம்மை ஒரு embarassment-லிருந்து காக்கும். இனிமேல் தனித்தனியாக வலைப்பூக்களுக்கு தொடுப்பு கொடுக்க வேண்டாமே. இதற்காகவாவது தமிழ்மணம் தொடுப்பு கொடுக்க வேண்டும்.

    By Blogger Dr.N.Kannan, At March 09, 2005 2:12 AM  

  • தொட்டால் பூ மலரும். தொடாமல் வெடி வெடிக்கும்.

    By Blogger Vijayakumar, At March 09, 2005 5:20 AM  

  • இன்னொன்னு

    தொட்டால் பூ மலரும் தொடாவிட்டால் அடி கிடைக்கும்.....

    By Blogger Vijayakumar, At March 09, 2005 6:54 AM  

  • //Text link கொடுத்திருந்தும் இப்படி பெஞ்சு மேலே ஏத்திட்டீங்களே அய்யா! இப்ப..இப்பவே சரி செஞ்சுடறேன். பாத்துக்குங்க.. //

    நான் முன்னமே சொன்னமாதிரி *அந்தப்* பட்டியல் நிரல் பொறுக்கியது. படம் மட்டுமே தேடுவது எளிதாக இருந்தது. பொறுத்துக் கொள்ளுங்கள்.

    //இப்படித் தொடுப்புக் கொடுப்பது நம்மை ஒரு embarassment-லிருந்து காக்கும்.//

    ஆமாம் சரியாச் சொன்னீங்க கண்ணன்.

    விஜய், என்ன, குழந்தை வந்த நேரம் கவிதை மழையாப் பொழியுது:-D

    By Blogger Kasi Arumugam, At March 09, 2005 9:44 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home