தமிழ்மணம் அறிவிப்புகள்

Thursday, March 03, 2005

புதிய மாற்றங்கள் - சில விளக்கங்கள்

தமிழ்மணம் தளத்தில் சென்ற வாரத்தில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. அதன் ஒரு மிக வெளிப்படையான அம்சம், 'உள்ளங்கையில் உலகம்' என்ற அடைமொழியோடு இருக்கும் இலகுவான முகப்புப்பக்கம். முதலில் இதன் சாதகங்களைப் பார்ப்போம், பிறகு பாதகங்களுக்கு வரலாம்.

  1. மிகவும் இலகுவானது, டயல்-அப் இணைப்பிலேயே இறங்குவதற்கு 10 நொடிக்கு மேல் ஆகாது. எனவே வழங்கிக்கும், வாங்கிக்கும் (வழங்குபவருக்கும் வாங்குபவருக்கும் என்றும் கொள்ளலாம்;-)) பளு குறைகிறது.
  2. ஒருமுறை இறங்கியதுமே ஐந்து முக்கியப் பகுதிகளையும் கொண்டிருக்கும்.

    முகப்பில் தெரியும் இவை அனைத்துமே, சொடுக்குப் போட்டதும் காட்டப்படும். வழமையான தமிழ்மணம் தளத்தின் அடுக்குகள் சொடுக்கின பின்னரே பதிவிறக்கம் செய்யப்பட்டுக் காட்டப்படுவதை நினைவில் கொள்ளலாம்.
  3. தானாக 20 நிமிடத்துக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளும். சில இணைய சூழல்களில் இது நடவாமற்போகலாம். அதற்குக் காரணங்கள் வேறு.

சரி, இதன் பாதகங்கள் (அல்லது பாதகங்களாக பல நண்பர்கள் ஐயுறுவன)?

அதற்குமுன் ஐயுறுபவர்கள் எல்லாரும் இந்த ஐந்து பகுதியிலும் கடைசி வரை கீழே வந்து பார்த்துவிட்டார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

அப்படி வந்திருந்தால் காணப்படக்கூடிய தொடுப்புகள்:




ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் தொடர்புடைய வழமையான மற்றும் முழுமையான பக்கங்களுக்குப் போகத் தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ளதன் நோக்கமே இதுவரை இருந்துவந்த எந்த வசதியும் விடுபட்டுவிடக்கூடாதென்பதே.

அப்படியானால் எதற்கு இந்தப் புதிய பக்கம்?

ஒரு நாளில் தமிழ்மணம் வழங்கியின் போக்குவரத்தில் ஒரு பெரும் பகுதி வாசகர் பக்கத்தை 20 நிமிடத்துக்கு ஒருமுறை 'போட்டுத்தாக்கு'பவர்களால் நடப்பது. அங்குள்ள தகவல்களில் இவர்கள் சென்ற முறை பார்த்தற்கும் இந்த முறை பார்த்ததற்கும் இடையே மாறியவை ஒரு 5 சதவீதம் கூட இருக்காது. ஆனாலும் வழங்கிக்கும், தரவுத்தளத்துக்கும் வீண் பளு இந்த ஆர்வலர்களால் நேருகிறது. இதைக் குறைக்கவே இந்த இடைமுகம்.

ஒருநாளைக்கு ஒருமுறையோ, இருமுறையோ, அல்லது சில நாட்களுக்கு ஒருமுறையோ தமிழ்மணம் தளத்துக்கு உலா வரும் எந்த வாசகருக்கும், இதனால் எந்த இழப்பும் இல்லை. மேலும் தேதிவாரியாக, இன்று உள்பட கடந்த ஒரு மாதத்தில் எழுதப்பட்டவற்றை வாசிக்கவும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. (இது இன்னும் முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை, எனவே சில குறைகள் உள்ளன என்பதை அறிவேன்)

முழுத் தளத்தின் கட்டமைப்பும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டே வரும். இந்தச் சுற்று மாற்றங்கள் சற்று வீச்சு அதிகம் உள்ளவை எனவே தாக்கம் அதிகமாக இருக்கிறது. மாற்றங்கள் நியதியாகிப்போன காலத்திலே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நண்பர்களே. மாற்றத்தால் வசதிக்குறைவு இல்லாமல், செய்நேர்த்தி, சிக்கனம், மேம்பட்ட சேவை கிடைத்தால் அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளத்தானே செய்வோம். என்ன சொல்கிறீர்கள்?

இன்னும் பல செய்திகள் இருக்கின்றன. மேலும் வருவேன்.

மேலே சொன்னவற்றில் கேள்விகள் இருப்பின் மறுமொழியில் எழுதுங்கள், கூடிய அளவில் என்னால் சொல்ல முடிந்ததை சொல்கிறேன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home