தமிழ்மணம் அறிவிப்புகள்

Monday, August 21, 2006

ஒவ்வாத பதிவுகளை நீக்குதல்

தமிழ்மணத்தின் நோக்கு தமிழ்ப்பதிவுகளிலே சிறந்தும் நற்போக்கிலுமுள்ள கூறுகளைத் திரட்டுவதாகும். ஆனால், எவ்வகையிலும் தமிழ்மணத்திலே தோன்றும் தனியாள் பதிவுகளின் உள்ளடக்கம், தொனியினைக் கட்டுப்படுத்தும் வல்லமையோ, பண்பாட்டுக்காவலராய்ச் செயல்படும் நோக்கமோ அற்றது. அதனால், தமிழ்மணத்திலே பதிவு செய்யப்பட்ட பதிவுகளைத் திரட்டுவது தவிர, தமிழ்மணம் எவ்வகையிலும் பதிவாளர்களின் பதிவுகளுக்கோ அவற்றிலே வரும் பின்னூட்டங்களுக்கோ பொறுப்பாகமுடியாது.

பதிவுகள், பின்னூட்டங்களின் உள்ளடக்கங்களுக்கு அவற்றை எழுதுபவர்களின் நேர்மையையும் பொறுப்புணர்வும் மட்டுமே அடிப்படைகளாக இருக்கமுடியுமென தமிழ்மணம் நம்புகின்றது. ஆனால், திரட்டி என்ற அளவிலே, தமிழ்மணம் தான் சேர்த்துக்கொள்ளும் பதிவுகளிலே அடிப்படையாக சில கூறுகளை எதிர்பார்க்கின்றது. இது குறித்து தமிழ்மணம் பயனர்கள் கையேடு தெளிவாக வரையறுத்திருக்கின்றது.

"thamizmanam.com reserves the right to set out its own norms for acceptance including, but not limited to, nature of content, language and frequency of posting. A blog accepted for listing at the submission may be delisted anytime later based on such norms. In this regard, thamizmanam.com's decison is final. Bloggers whose contents are shown here as previews are requested not to post content that is slanderous, illegal, incisive of dangerous acts, stories inciting terror and violence, or in violation of copyright law."

அண்மையில் இரு பதிவர்களின் சில பதிவுகள் சக பதிவர்களைக் கண்ணியக்குறைவாகத் தாக்கியிருப்பதால் அவற்றினை நீக்கும்படி பதிவர்கள் இருவர் தமிழ்மணத்தின் முறையீட்டு வசதியைப் பயன்படுத்திக் கேட்டிருந்தனர். மேலே சுட்டியிருப்பதுபோல, தமிழ்மணத்திற்கு இப்பதிவுகள் பொருத்தமற்றவை என்று தோன்றினால் நீக்கும் உரிமை முற்றாக இருப்பினுங்கூட, முடிவெடுப்பதிலே தன் அங்கமான பதிவர்களின் கருத்துகளையும் உள் வாங்க தமிழ்மணம் விரும்புகிறது.

தமிழ்மணத்திலேயிருந்து ஒரு தனிப்பதிவை நீக்குவதா, தொடர்ந்து வைத்திருப்பதா என்பதிலே குறிப்பிட்ட பதிவினை இட்டவர், முறையிட்டவர் உட்பட தமிழ்மணத்திலே தம்மைப் பதிவு செய்த எந்தப்பதிவரும் தனது கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்க ஒரு மட்டுறுத்தப்பட்ட வசதியை ஏற்படுத்தும் சாத்தியத்தினைத் தமிழ்மணம் ஆராய்கிறது.

இவ்வசதி நடைமுறைக்கு வரும்போது, தொடர்ந்தும் தமிழ்மணத்தின் முடிவே இறுதிமுடிவானபோதுங்கூட, தமது தமிழ்மணத்துக்கு ஒவ்வாதது எனச் சுட்டப்படும் ஒரு பதிவினை நீக்குவதிலோ தொடர்ந்து இருக்கவைப்பதிலோ பதிவர்களும் பங்கெடுக்கமுடியும்.

இது தொடர்பான செயல்முறை இரு வாரங்களுக்குள்ளே விபரமாக இப்பதிவிலே வெளியிடப்படும்.

தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

9 Comments:

  • தகவலுக்கு நன்றிங்க.

    By Blogger துளசி கோபால், At August 21, 2006 8:05 PM  

  • இவ்வசதி நடைமுறைக்கு வரும்போது, தொடர்ந்தும் தமிழ்மணத்தின் முடிவே இறுதிமுடிவானபோதுங்கூட, தமது தமிழ்மணத்துக்கு ஒவ்வாதது எனச் சுட்டப்படும் ஒரு பதிவினை நீக்குவதிலோ தொடர்ந்து இருக்கவைப்பதிலோ பதிவர்களும் பங்கெடுக்கமுடியும்.//

    இது அரசியல் செய்வதில் தான் வந்து முடியும்.பதிவர்களுக்குள் பல குழுக்கள் உள்ளன.தம் குழுவை சேர்ந்தவர்களை யாரும் விட்டுத் தரப்போவதில்லை.கடைசியில் இதனால் பெருங் குழப்பமே மிஞ்சும்.

    இவ்விஷயத்தில் நடத்தை முறைகளை பதிவர்களை கலந்து பேசி உருவாக்குங்கள்.அதன்பின் அதை அமுல்படுத்துங்கள்.மூத்த வலைபதிவர்கள் ஓரிருவர் அடங்கிய குழு வேண்டுமெனில் அமைக்கபடலாம்.மெஜாரிட்டி அடிப்படையில் முடிவெடுப்பது என்று போனால் அதில் ஏகப்பட்ட அரசியல் புகுந்து விளையாடும்.

    By Blogger Unknown, At August 21, 2006 8:37 PM  

  • I welcome it

    By Blogger நல்லவன், At August 21, 2006 9:24 PM  

  • மேலும் விவரமறியக் காத்திருக்கிறேன்.

    By Blogger குமரன் (Kumaran), At August 21, 2006 10:26 PM  

  • I would also like to point out that my blog is in WordPress.com

    As you may know, WordPress.com doesn't allow any template modification or JavaScript insertion. So we were not able to fully utilize thamizmanam.

    Can you guys somehow find a way to include posts from the blogs of WordPress.com

    At least show new posts from blogs from WordPress.com

    By Blogger CAPitalZ, At August 21, 2006 10:52 PM  

  • கருத்து சுதந்திரம் தேவை தான். மாறாக அது தனிமனித தாக்குதல் என்று மாறும் போது தான்.. நாம் நெளிய வேண்டி இருக்கிறது.
    கொள்கையற்ற கோஷம் குப்பைக்குத் தான் போகும் - என்பார்கள். அப்படியானவற்றிற்கு இது அவசியமானதும் கூட...
    நல்ல முயற்சி!

    By Blogger - யெஸ்.பாலபாரதி, At August 21, 2006 10:57 PM  

  • சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குதல்/முறைப்படுத்துதல் தொடர்பான விஷயங்களில்
    பதிவர்களும் பங்கெடுக்கமுடியும் என்ற நடைமுறை ஆரோக்கியமானது என்பது என் கருத்து.

    இறுதி முடிவு தமிழ்மணத்திடம் இருந்தாலும் பலருடைய கருத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்வது (இதில் அனானிநாதர்களை விலக்கிவிடுவது முக்கியம்) கருத்து சுதந்திரத்திற்கு நல்லது.

    By Blogger Muthu, At August 22, 2006 3:16 AM  

  • ஒரு வலைப்பதிவர் கூறிய கருத்துக்களை அப்படியே மாற்றமின்றி மேற்கோள் காட்டி அதற்கு பதில் அளிப்பது தனிமனித தாக்குதல் வரிசையில் வருமா என்று அறிந்துகொள்ள ஆசையாக இருக்கிறேன்.

    By Blogger கருப்பு, At August 22, 2006 9:32 PM  

  • வேர்ட்பிரசில் இயங்கும் வலைப்பதிவுகளும் மறுமொழி நிலவரம் பெற ஒரு யோசனை
    இங்கே
    http://akaravalai.blogspot.com/2006/08/blog-post_28.html

    By Blogger வலைஞன், At August 29, 2006 1:16 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home