தமிழ்மணம் அறிவிப்புகள்

Friday, June 02, 2006

ஆள்மாறாட்டப் பின்னூட்டங்கள் குறித்து

அண்மையில் தமிழ்வலைப்பதிவுகளில் சில ஆள்மாறாட்டப் பின்னூட்டங்கள்/மறுமொழிகள் வர ஆரம்பித்திருக்கின்றன. அறிந்தோ அறியாமலோ மட்டுறுத்தலைப் பாவிக்கும் பதிவர்கள் கூட இவற்றை அனுமதித்துவிடுகின்றனர். தனிமனிதர்களின் விழும்பத்தைப் (image) பாதிக்கவென்று அமையும் இந்த இழி செயலைத் தமிழ்மணம் ஆதரிக்காது.

மேற்சொன்ன ஆள்மாறாட்டப் பின்னூட்டங்களைச் சம்பந்தப்பட்டவரோ பிறரோ தெரிவித்த பிறகும் நீக்காமல் நீங்கள் வைத்திருந்தால் உங்கள் பதிவுக்கு 'மறுமொழி நிலவரச் சேவை' நீக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் முதலில் அப்பின்னூட்டங்கள் இருக்கும் வலைப்பதிவர்களுக்கு எழுதி அவற்றை நீக்கக் கேட்டுக் கொள்ளவேண்டும். போதிய கால அவகாசத்திற்குப் பிறகும் அவை நீக்கப்படாமல் இருக்குமானால், தமிழ்மணத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட பதிவின் 'மறுமொழி நிலவரச் சேவை' முடக்கப் படும்.

அவரவர் வலைப்பதிவின் பின்னூட்டங்களை வெளியிடுவதும் நீக்குவதும் அவரவர் உரிமையே என்பதில் தமிழ்மணத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை. இந்த அறிவிப்பு தமிழ்மணத்தின் ஒரு பொள்ளிகையைப் (policy) பற்றியும் அது வழங்கும் ஒரு சேவையைப் பற்றிய தெளிவுமே.

புரிந்துகொள்ளலுக்கு நன்றி.

45 Comments:

 • http://www.blogger.com/comment.g?blogID=29025225&postID=114905318233940083

  By Anonymous Anonymous, At June 02, 2006 10:33 PM  

 • //போதிய கால அவகாசத்திற்குப் பிறகும் அவை நீக்கப்படாமல் இருக்குமானால், தமிழ்மணத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட பதிவின் 'மறுமொழி நிலவரச் சேவை' முடக்கப் படும்.//

  அடேங்கப்பா.....:-))அப்படியே தமிழ்மணத்தில் அந்த வலைப்பதிவே பட்டியல் இடப்படாதுனும் சொல்லி இருக்கலாம் policy matter ஆச்சே:-))

  By Blogger வவ்வால், At June 03, 2006 12:54 AM  

 • அன்பின் செல்வராஜ் அண்ணா,
  நல்ல முடிவு.
  பாராட்டுக்கள்.

  நன்றிகள்.

  அன்புடன்
  வெற்றி

  By Blogger வெற்றி, At June 03, 2006 1:39 AM  

 • தீர்க்கமான முடிவு. நன்றி.

  By Blogger Boston Bala, At June 03, 2006 1:42 AM  

 • தவறான உபயோகத்துக்கு ஆளாகக் கூடிய அதர் ஆப்ஷனை எடுத்து விடுமாறு நான் பார்ப்பவர்களை எல்லாம் கேட்டு வருகிறேன். இங்கே வந்து பார்த்தால் இங்கேயே அது உள்ளது.

  "கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனா அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்" என்கிற மாதிரியில்லை இருக்கு!

  இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்ட அதன் நகலை என்னுடைய "முரட்டு வைத்தியம் - 4" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  By Blogger dondu(#11168674346665545885), At June 03, 2006 6:25 AM  

 • மிக நல்ல முடிவு. மிக்க நன்றி தமிழ்மண நிர்வாகிகளே.

  By Blogger குமரன் (Kumaran), At June 03, 2006 10:09 AM  

 • நிர்வாகி திரு செல்வராஜ் அவர்களுக்கு,

  இத்தகைய விரும்பத்தகாத செயல்களால் பாதிக்கப்பட்டவன் என்கிற முறையில் நான் இந்த பதிவை வரவேற்கிறேன். பல போலி பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  மிக்க நன்றி!

  அன்புடன்,
  ஜெயக்குமார்

  By Blogger ஜெயக்குமார், At June 03, 2006 2:09 PM  

 • நன்று சொன்னிர்கள் செல்வா. நன்றி.

  மேலும் மட்டுறுத்தலை எளிதாக்கவும், போலிகளை எளிதில் கன்டுபிடிக்கவும் ரமணியின் மென்பொருள் தீர்வான 'மட்டுறுத்தல் நண்பன்' நல்ல வழி. இதை அனைவரும் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன்.

  மேலதிகத் தகவல்களுக்கு:
  http://silandhivalai.blogspot.com/2006/05/blog-post_29.html

  By Blogger Kasi Arumugam, At June 04, 2006 2:19 AM  

 • "மேலும் மட்டுறுத்தலை எளிதாக்கவும், போலிகளை எளிதில் கன்டுபிடிக்கவும் ரமணியின் மென்பொருள் தீர்வான 'மட்டுறுத்தல் நண்பன்' நல்ல வழி. இதை அனைவரும் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன்."

  காசி அவர்களே, ரமணியின் மென்பொருள் வெற்றியடைய வேண்டுமானால் முதலில் அதர் ஆப்ஷனை தூக்கி விட வேண்டும் அல்லவா?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  By Blogger dondu(#11168674346665545885), At June 06, 2006 12:37 PM  

 • இந்த அதெர் ,அனானி ஆப்ஷனை தூக்கு என சொல்வதெல்லாம் எப்படி உள்ளது எனில் ஒரு வாரப் பத்திரிக்கை உ.ம் குமுதம் அதற்கு வாசகர் கடிதம் எழுதி அது பிரசுரமாக வேண்டுமானால் அந்த பத்திரிக்கைக்கு ஆண்டு சந்தா செலுத்தி இருக்க வேண்டும் என்பது போல் உள்ளது. அந்த ஆப்ஷன்களை நீக்கி விட்டால் பிளாக்கர் கணக்கு இல்லாத யாரும் பின்னூட்டம் இட முடியாது.பதிவர்களே படித்து பதிவர்களே ஆகா ஒகோ என்று சொல்லி கொள்ள கூடிய சூழல் தான் ஏற்படும்.

  இங்கு எழுதுவோரின் எத்தனை பேரின் படைப்புகள் சாதாரணமாக ஒரு பத்திரிக்கையில் வெளிவரும் தரத்தில் இருக்கிறது.பத்திரிகைகளுக்கு எழுதினால் ஆசிரியர் குழு படித்து தேர்வு செய்து புறக்கணிக்க படுகிறதே என தங்கள் கருத்தை சுதந்திரமாக வெளியிட ஒரு ஊடகம் தேவை என உருவானது தான் வலைபதிவுகள் அங்கே மீண்டும் இப்படி ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்றால் பழைய கதை தானே அரங்கேறுகிறது.

  போலி பின்னூட்டம் வந்தால் அதை படித்து பார்த்து நீக்க வேண்டியது அந்த வலைப்பதிவரின் வேலை அதை விடுத்து கதவை இழுத்து சார்த்து என புலம்பிகொண்டு இருப்பது எல்லாம் தேவை அற்றது!

  By Blogger வவ்வால், At June 07, 2006 10:33 AM  

 • என் பெயரிலேயே ஒரு போலி வந்து அசிங்கமாக மத்தவங்க வலைப்பதிவுல போய் பின்னூட்டம் போட்டாலும் மேலே சொன்னதே என் கருத்தாக இருக்கும். அப்படி செய்வது அந்த ஆள்மாறாட்டப் பின்னூட்டம் இடுபவரின் சுதந்திரம். அதனை தடுக்கும் உரிமை எனக்கே கிடையாது.

  By Anonymous Anonymous, At June 07, 2006 12:32 PM  

 • டோண்டு அவர்களே,

  வவ்வால் போல நிறைய பேர் அதர் ஆப்ஷனை வைத்துக்கொள்ள விரும்புவார்கள் என்பதால் மட்டுறுத்தல் நண்பன் அவற்றுடனும் ஒத்துப்போகுமாறு செய்துள்ளேன்.

  காசி அவர்கள் கொடுத்த சுட்டியில் இந்த கேள்வி-பதில் இருந்ததே பார்க்கவில்லையா?

  அனானிமஸ், அதர் ஆப்ஷன்களுடன் மட்டுறுத்தல் நண்பனை உபயோகிக்கலாமா?
  உபயோகிக்கலாம். அந்த பின்னூட்டங்கள் நீங்களே முடிவெடுக்கவேண்டிய பின்னூட்டங்களாக கருதப்படும். தன்னியக்க மட்டுறுத்தலை உபயோகித்தால் அவை பிரசுரிக்கப்படாமல் நிறுத்திவைக்கப்படும். ஆனால், அவற்றை அனுப்பியவரின் அடையாளத்தை நீங்களும் எளிதில் சோதனை செய்யமுடியாது என்பதால் இந்த ஆப்ஷன்களை நீக்குவது நல்லது.

  By Blogger Unknown, At June 07, 2006 1:31 PM  

 • நன்றி வெங்கட் ரமணி உங்கள் செயலி சிறப்பாக செயல் பட வாழ்த்துகள்!

  இங்கே ஏதோ நான் போலிகளுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து யாரோ எனக்கு போலிகளின் விளைவை எடுத்துக்காட்ட என் பெயரிலேயே ஒரு போலி பின்னுட்டம் இட்டுள்ளார்கள் :-))

  //என் பெயரிலேயே ஒரு போலி வந்து அசிங்கமாக மத்தவங்க வலைப்பதிவுல போய் பின்னூட்டம் போட்டாலும் மேலே சொன்னதே என் கருத்தாக இருக்கும். அப்படி செய்வது அந்த ஆள்மாறாட்டப் பின்னூட்டம் இடுபவரின் சுதந்திரம். அதனை தடுக்கும் உரிமை எனக்கே கிடையாது.

  வவ்வால் June 07, 2006 10:02 PMமணிக்கு, எழுதியவர்: //

  இதனை நீக்குங்கள் என கூட நான் சொல்ல போவதில்லை. போலி பதிவராக செயல் படுவது நேரத்தை கொலை செய்வதற்கு சமம் ,வேலை ஏதும் இன்றி நேரத்தை கடத்த இது போல செய்கிறார்கள்.காலம் பொன் போன்றது என கருதும் எவரும் போலியா வந்து நேரம் விரயம் செய்ய மாட்டார்கள்.போலிஅவர்களே நீங்கள் இது போல நிறைய போலி பின்னூட்டம் போட்டு வாழ்கையில் உருப்படாமல் போக வேண்டும் ,யார் கண்டது நீங்களே எனது தொழில் போட்டியாளராக கூட இருக்கலாம் இப்படி உங்கள் நேரத்தை வீணாக்குவதால் எனக்கு நிஜ வாழ்க்கையில் ஒரு போட்டியாளர் குறைந்து என் வாழ்கை எளிதாக இருக்கலாம் எனவே இன்னும் அதிகமாக போலி பதிவுகள் பின்னூட்டங்கள் இட்டு கெட்டு குட்டி சுவராக போனால் எனக்கு வசதியாக இருக்கும் :-))

  By Blogger வவ்வால், At June 08, 2006 3:38 AM  

 • நல்ல தீர்மானம். வரவேற்கின்றேன்.

  By Blogger மலைநாடான், At June 08, 2006 4:17 AM  

 • //அந்த ஆப்ஷன்களை நீக்கி விட்டால் பிளாக்கர் கணக்கு இல்லாத யாரும் பின்னூட்டம் இட முடியாது//

  இதற்காக நான் haloscan கமெண்ட்டிங் சிஸ்டத்தையும் இணைத்துள்ளேன். அதிலும் மட்டுறுத்தல் வசதி உண்டு. கூடுதல் பயன், பின்னூட்டம் தருபவரின் ஐ.பி. முகவரியைக் காட்டும் - பிராக்ஸி சர்வராக இருந்தாலும் கூட. பொதுவாக இப்போதெல்லாம் வலைப்பதிவில் பதிய வைத்துக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் இப்படி இரண்டு வசதிகளையும் பயன் படுத்திக் கொள்ளலாமே.

  By Blogger மாயவரத்தான், At June 08, 2006 10:27 AM  

 • எங்கும் தமிழ்மணம் பரவ நல் வாழ்த்துக்கள்

  By Blogger சந்தர், At June 16, 2006 8:50 AM  

 • comment moderation facility உபயோகப்படுத்தியும், தெரிந்தே அனுமதிக்கிறவர்களுக்கு மெயிலனுப்பி தெரியப்படுத்தி அதற்காக போதிய கால அவகாசம்' வெயிட் செய்து, அதற்குள் தமிழ்மண உபயோகிப்பளர்கள் பார்த்து விட்டு சென்று விடுவார்களே. அதன் பிறகு நீக்கி என்ன பயன்? இதற்கு பதிலாக மேற்படி பதிவினை தமிழ்மண பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தவுடனே அதை நீக்கி விடுவது தான் சிறந்த வழி. வேண்டுமானால் ஆபாசமில்லாத போலி பின்னூட்டங்களை அனுமதித்திருந்தால் அப்போது இந்த 'போதிய கால அவகாசம்' லாஜிக் சரியாக இருக்கலாம்.

  By Blogger மாயவரத்தான், At June 16, 2006 6:42 PM  

 • இந்த பதிவில் வஜ்ரா ஷங்கரின் பெயரில் அன்னை தெரசா பற்றி மிக மோசமான பின்னூட்டம் இடப்பட்டிருந்தும் அது போலி பின்னூட்டம் என பலர் தெரிவித்தும் செந்தழல் ரவி இன்னும் அதை விட்டு வைத்திருக்கிறார்.உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுகொள்கிறேன்

  http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_27.html

  By Anonymous Anonymous, At June 30, 2006 12:19 AM  

 • என் பெயரில் வெளிவந்த போலி பின்னூட்டத்தை திரு. செந்தழல் ரவி அவர்கள் நீக்காமல் வைத்திருப்பது பற்றி சீக்கிரமே நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

  செந்தழல் ரவி பதிவு

  இதைப் பற்றி நான் பதித்த விளக்கப் பதிவு.

  நன்றி.

  By Blogger வஜ்ரா, At June 30, 2006 9:51 AM  

 • செந்தழல் ரவி பதிவு மறுமொழி நிலவரச் சேவை நீக்கப்பட்டிருக்கிறது.

  By Blogger இரா. செல்வராசு (R.Selvaraj), At June 30, 2006 10:47 AM  

 • தமிழ்மண நிர்வாகக் குழுவுக்கும், திரு. செலவராஜ் அவர்களுக்கும் நன்றி.

  By Blogger வஜ்ரா, At June 30, 2006 12:49 PM  

 • செல்வராஜ் மற்றும் தமிழ்மண நிர்வாகிகளே,

  டோண்டு ஒரு பதிவு போடுவதும் அதற்கு அவரே 100 பின்னூட்டம் தனக்குத்தானே போட்டுக்கொள்வதும் நடக்கிறது. கேட்டால் நன்றி சொன்னேன் என்கிறார். அது மட்டும் அல்ல. மற்றவரின் பதிவுகளுக்கு பின்னூட்டம் செய்துவிட்டு அதனை தன் பதிவிலும் போட்டுக்கொள்கிறார். இதில் தலையிட தமிழ்மணத்தால் முடியாது. ஆனால் இது சமீபத்திய மறுமொழிகள் திரட்டியில் அடிக்கடி முன்னுக்குத் தெரிய அவர் செய்யும் முயற்சி. மனம் பிறழ்ந்த ஒரு மனோபாவம் என்று சொல்லலாம்.

  சமீபத்தில் வலைப்பதிவர் சந்திப்பு என்று போட்டு இது எப்போதும் முன்னுக்குத் தெரிய வேண்டும் என்பதால் இந்த பின்னூட்டம் என்று அவரே தன் எழுத்தில் எழுதி இருப்பதையும் கருத்தில் கொள்ளவும்.
  பார்க்க:http://dondu.blogspot.com/2006/06/blog-post_27.html

  இப்படிப்பட்ட ஒரு பதிவை சமீபத்திய மறுமொழிகள் திரட்டியில் இன்னும் நீங்கள் திரட்டத்தான் வேண்டுமா?

  By Blogger மரத் தடி, At July 02, 2006 10:03 PM  

 • ஆள்மாறாட்டப்பின்னூட்டம் சரி தலைவரே...சிலர் சொந்த பெயரிலேயே ரொம்ம்ப கேவலமாக பின்னூட்டமிடுகிறார்களே என்ன செய்யப்போறீங்க அதற்க்கு...

  http://vaithikasri.blogspot.com/2006/06/blog-post.html

  இதில் அன்பர் மியூஸ் அன்னை தெரசாவின் மீது தான் சேற்றை வாரி இறைக்கிறார் என்று பச்சை குழந்தைக்கு கூட தெரியும்...அதை நீக்கும்படி கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

  By Blogger ரவி, At July 03, 2006 1:05 AM  

 • செல்வா...மேலும் சில கேள்விகள்..

  நீங்கள் இந்த முடிவு எடுக்கும்முன் என்னை ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை...ஒரு மடல் அனுப்பி இருக்கலாமே...

  அந்த போலி பின்னூட்டத்தை வஜ்ரா போடவில்லை என்று நீங்கள் நம்புவதற்க்கு அழுத்தமான காரணம் உள்ளதா ? தயவுசெய்து தெரியப்படுத்தவும்..

  அதேபோல் அதை அவர்தான் போட்டார் என்று நான் ஏன் நம்பக்கூடாது...

  நீதிபதி என்பவர் இரு தரப்பு வாதங்களையும் கேட்கவேண்டும்..அப்போதுதான் உண்மை விளங்கும்...

  By Blogger ரவி, At July 03, 2006 1:08 AM  

 • தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு,

  டோண்டு தன்னுடைய கடந்த சந்திப்பு அழைப்பு பதிவில் Moona Koonaa என்பவரின் பின்னூட்டத்தை அனுமதித்து இருந்தார். அந்த மூனாகூனா என்ற நபரின் தளத்தினை அழுத்தி அங்கே சென்று பாருங்கள். அவன் அசிங்கமாக எழுதி இருக்கிறான். நீங்கள் சொல்லலாம், அவன் தனது பதிவில்தானே எழுதி இருக்கிறான், மறுமொழியில் இல்லையே என! இப்படி நீங்கள் சொல்வீர்கள் ஆனால் வெளியில் நல்ல பெயர் ஒன்றை வைத்துவிட்டு தளத்தில் அசிங்கமாக எழுதுபவரை ஊக்குவிப்பது போல் ஆகும். இதுபோல் எழுத திராவிடர்களாலும் முடியும் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவர்களும் இதே வழியைத் தேர்ந்தெடுத்தால் நிலைமை சீரியசாகும்!

  அடுத்து,

  சந்திப்பு பற்றிய விளக்க பதிவில் டோண்டு என்ற பதிவாளரே கீழ்க்கண்டதை தனது கைப்பட எழுதி இருக்கிறார்!

  //பேச்சு அதிகமாக போலியின் சகிக்கமுடியாத வேலைகளை சுற்றியே இருந்தது. அவன் யார், பின்னணி என்ன என்பதை நான் புதியவர்களிடம் விளக்கினேன். எல்லோருமே அவன் மெயில்களை அனுபவித்தவர்கள். பாலா அவனுடன் வெவ்வேறு பெயரில் சண்டையிட்டிருக்கிறார். ஆகவே நான் சொன்னதில் யாருக்கும் ஆச்சரியம் இல்லை.//

  அதாவது பாலா என்பவர் பல்வேறு புனைபெயர்களில் போலிகளைத் திட்டி எழுதினாராம். திறமையும் அறிவும் இருக்கும் பாலா அவர்கள் போலியை தனது சொந்த பெயரிலேயே தடுத்து நிறுத்தி இருக்கலாம். அல்லது ஆரோக்கியமான கேள்விகளைக் கேட்டு இருக்கலாம். ஆனால் பாலா அவர்கள் அசிங்கமாக போலிகளின் வழியிலேயே பேசி இருக்கிறார். அதற்கு சப்பைக்கட்டும் ஆதரவும் கொடுத்து டோண்டு பதிவு எழுதி இருக்கிறார்!

  தமிழ்மணம் நடுநிலையான திரட்டி என நினைக்கிறேன். அது உண்மையானால் ஆரியர்களுக்கோ அல்லது திராவிடர்களுக்கோ சப்போர்ட் செய்யாமல் நடுநிலையாக இருந்து டோண்டுவின் பதிவை திரட்டுவதை மறுபரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

  இப்படிக்கு,
  கோயிஞ்சாமி.

  By Blogger வால்டர், At July 03, 2006 10:19 PM  

 • இதை பண்ணுங்க சார் முதல்ல...

  தவறான உபயோகத்துக்கு ஆளாகக் கூடிய அதர் ஆப்ஷனை எடுத்து விடுமாறு நான் பார்ப்பவர்களை எல்லாம் கேட்டு வருகிறேன். இங்கே வந்து பார்த்தால் இங்கேயே அது உள்ளது.

  "கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனா அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்" என்கிற மாதிரியில்லை இருக்கு!

  By Blogger பாலசந்தர் கணேசன்., At July 03, 2006 11:14 PM  

 • மதிப்பிற்குரிய காசி அண்ணர், செல்வராஜ் அண்ணர் மற்றும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு,

  //செந்தழல் ரவி பதிவு மறுமொழி நிலவரச் சேவை நீக்கப்பட்டிருக்கிறது.//

  செந்தழல் ரவியின் மறுமொழி நிலவரச் சேவையை நீக்கியதை மறுபரிசீலனை செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். செந்தழல் ரவி அவர்கள் கூறியது போல், அவரின் மறுமொழி நிலவரச் சேவையை நீக்க முன்னர் நீங்கள் அவரிடம் விளக்கம் கேட்டு , அவருக்கு அக் குறிப்பிட்ட பின்னூட்டத்தை நீக்குவதற்கு கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான எண்ணம். அத்துடன், ஒருவரின் கருத்தை மட்டும் கேட்டு, நீங்கள் அவசரத்தில் ஒரு பக்கச் சார்பாக நடந்து கொண்டது போல் உள்ளது உங்களின் செயல்.

  செந்தழல் ரவி குறிப்பிட்டது போல், சில வலைப்பதிவர்கள், குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்கள், மற்றும் சில குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் வகையில் எழுதும் பதிவுகளை அனுமதித்துக் கொண்டு, செந்தழல் ரவியின் மறுமொழி நிலவரச் சேவையை மட்டும் நீக்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு ஒப்பான செயல். சில வலைப்பதிவர்கள் அன்னை திரேசா அவர்களைப் பற்றி இழிவாகச் சொல்லும் போது என் போன்ற சைவ சமயத்தவனுக்கே இரத்தம் கொதிக்கும் போது, கிறிஸ்தவ மதச் சகோதர சகோதரிகளுக்கு எப்படியிருக்குமென நீங்கள் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.எனவே தயவு செய்து செந்தழல் ரவியின் பதிவின் மறுமொழிச் சேவையை மீண்டும் இயங்கச் செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி.

  பணிவன்புடன்
  வெற்றி

  By Blogger வெற்றி, At July 03, 2006 11:38 PM  

 • புரிந்துணர்வுக்கு நன்றி வெற்றி..

  By Blogger ரவி, At July 03, 2006 11:50 PM  

 • Dear Kasi,

  Thanks for drawing my attention to the comment in question. It was really careless of me to have allowed that comment. Fact was, I have been very busy at a translation job as this comment came in and as apparently this comment seemed to be a sort of joke, I replied in the same vein and forgot about it.

  I have removed that comment as well as my response to the same without any trace. I am sorry that it happened and give word that it will not happen again.

  பாலா அவனுடன் வெவ்வேறு பெயரில் சண்டையிட்டிருக்கிறார். ஆகவே நான் சொன்னதில் யாருக்கும் ஆச்சரியம் இல்லை.//

  அதாவது பாலா என்பவர் பல்வேறு புனைபெயர்களில் போலிகளைத் திட்டி எழுதினாராம்.

  He only fought with him. It does not mean that he abused him in filthy language. That is Poli Dondu's style and not Bala's, who is a very respectable person.

  As for Poli Dondu, he deserves no other description. It is quite rich on the part of Goinchami to talk of decency here.

  Hope my explanation and apology are acceptable to you.

  Regards,
  Dondu N.Raghavan

  By Blogger dondu(#11168674346665545885), At July 04, 2006 5:15 AM  

 • மரத் தடி, பிற பதிவுகளில் தாம் விடும் பின்னூட்டங்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதற்காகப் பல பதிவர்கள் தனியாக வலைப்பதிவு வைத்திருப்பதை அறிவோம். அவை மறுமொழிப் பட்டியலில் திரட்டப்படுவதில்லை.

  அவை விடுத்துத் தம்முடைய முதன்மைப் பதிவில் பின்னூட்டங்களைச் சேகரிப்பதையும் அதனால் மறுமொழிப் பட்டியலில் எப்போதும் முன்னால் வந்து கொண்டிருப்பதையும் தவிர்க்கும் பொருட்டு அந்த இடுகையை/பதிவை மறுமொழிப் பட்டியலில் காட்டாமல் முன்னர் வைத்திருந்தோம். (முந்தைய வடிவில்). அதுபோல் இருந்தால் மீண்டும் அதனை அமுல்படுத்துவது பற்றி யோசிக்க நிர்வாகக் குழுவுக்கு முன்வரிக்கிறேன். சுட்டிக் காட்டலுக்கு நன்றி.

  By Blogger இரா. செல்வராசு (R.Selvaraj), At July 04, 2006 8:35 AM  

 • ரவி, வெற்றி, ஆள்மாறாட்டம் செய்து பிறர் பெயரில் பின்னூட்டம் இட்டதையும் அதனைத் தெரிவித்துப் பலர் கூறிய பிறகும் நீக்காது வைத்திருந்ததாலும் மட்டுமே செந்தழல் ரவியின் மறுமொழிச் சேவை நீக்கப்பட்டது. இதுவே கருத்துச் சொன்னவர் சொந்தப் பெயரிலோ புனைப்பெயரிலோ பெயரில்லாமலோ வெளியிட்டிருந்தால் நீக்கப்பட்டிருக்காது.

  பதிவுகளில் வெளியாகும் பின்னூட்டங்களுக்குத் தமிழ்மணம் பொறுப்பாக முடியாது. அவை மனதைப் புண்படுத்தும் கேவலமான கருத்துக்கள் என்று தோன்றினால் பதிவர்களே அனுமதிக்காமல் விட்டுவிடுவது தானே?

  By Blogger இரா. செல்வராசு (R.Selvaraj), At July 04, 2006 8:47 AM  

 • /// பலர் கூறிய பிறகும் ///

  ???

  By Blogger ரவி, At July 04, 2006 9:24 AM  

 • செல்வா..

  நீங்கள் ஏன் என்னிடம் கேட்கவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லையே..

  யாரோ எழுதிய கருத்துக்கு ஏன் என்னை பொறுப்பாளி ஆக்குகிறீர்..

  அன்புடன்,
  செந்தழல் ரவி

  By Blogger ரவி, At July 04, 2006 9:27 AM  

 • மதிப்பிற்குரிய செல்வராஜ் அண்ணர் அவர்கட்கு,

  எத்தனையோ பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி என் பின்னூட்டத்திற்குப் பதிலளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

  //
  ஆள்மாறாட்டம் செய்து பிறர் பெயரில் பின்னூட்டம் இட்டதையும் அதனைத் தெரிவித்துப் பலர் கூறிய பிறகும் நீக்காது வைத்திருந்ததாலும் மட்டுமே செந்தழல் ரவியின் மறுமொழிச் சேவை நீக்கப்பட்டது. இதுவே கருத்துச் சொன்னவர் சொந்தப் பெயரிலோ புனைப்பெயரிலோ பெயரில்லாமலோ வெளியிட்டிருந்தால் நீக்கப்பட்டிருக்காது.//

  செல்வராஜ் அண்ணா, தங்களின் இக் கருத்துடன் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. உங்களின் கருத்தோடு நான் முழுமையாக உடன்படுகிறேன். சில வலைப்பதிவாளர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்களின் பெயரில் வரும் போலிப் பின்னூட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது மட்டுமல்ல, இந்த அநாகரீகமான செயல் கண்டிக்கப்பட வேண்டியதும் கூட.

  அதே நேரம், செந்தழல் ரவி இப்போது தான் முதற் தடவையாக இத் தவறை அறிந்தோ அறியாமலோ செய்துள்ளார். நிச்சயமாக இது அவருக்கு ஓர் படிப்பினையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
  ஒருவர் ஒரு தடவை தவறு செய்தால், அத் தவறை உணர்ந்து அத் தவறை மீண்டும் செய்யாது இருக்கலாம் அல்லவா? இச் சம்பவத்தை ரவிக்கு ஓர் எச்சரிக்கையாக விடுத்து, மீண்டும் அவரின் மறுமொழி நிலவரச் சேவையை இயங்க வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
  நன்னயம் செய்து விடல்" என வள்ளுவன் வழி நின்று, நீங்கள் கற்றறிந்த சான்றோன், சிறியவர் விடும் பிழைகளை பெரிய மனதுடன் மன்னித்து, மீண்டும் செந்தழல் ரவியின் மறுமொழி நிலவரச் சேவையை இயங்க வைப்பீர்கள் என நம்புகிறேன்.

  மிக்க நன்றி.

  பணிவன்புடன்
  வெற்றி

  By Blogger வெற்றி, At July 04, 2006 11:36 AM  

 • நிர்வாகத்துக்கு வணக்கம்,

  விரைந்து வந்து பதில் தந்தமைக்கு எனது நன்றி செல்வராஜ் அவர்களே. திரட்டிகள் உலகில் தமிழ்மணம் ஒரு மைல் கல் என்றால் அது உண்மை.

  ஜோதி என்ற பெயரில் முன்னர் ஒருவர் டோண்டு பதிவில் பின்னூட்ட அடுத்த நாளே அவர் அதனை கிளிக் செய்து பார்க்க... அங்கே அசிங்க பதிவாக இருக்க அவரின் கமெண்டினை அழித்தவர் டோண்டு. இது பாராட்டப்பட வேண்டிய செயல். அதையே கோயிஞ்சாமி சுட்டிக்காட்டிய மூனாகூனா என்ற மறுமொழிக்கும் அவர் செயல்படுத்தி இருக்கலாம். அதனை அழிக்காமல் அழகு பார்த்ததில் அவருக்கு அப்படி என்ன ஆசையோ... தெரியவில்லை.

  எங்காவது ஒரு பின்னூட்டி அதனை தனது சிறப்பு பின்னூட்ட வலைப்பதிவில் பதியவில்லை டோண்டு. பின்னூட்டத்திற்கென தனியாக பதிவு வைத்துக் கொள்ளவில்லை டோண்டு. தமிழ்மணம் திரட்டும் வலைப்பதிவிலேயே ஏதாவது ஒரு பதிவிலேயே அதனை இட்டுக் கொள்கிறார். செல்லும் இடங்களில் எல்லாம் ஏதாவது ஒரு கருத்தை எழுதிவிட்டு அதன்கீழ்

  "இதனை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு அடையாளமாக எனது .....****####@@@@%%%%^^^&&&*** பதிவிலும் சேமிக்கிறேன். பார்க்க:-http://dondu.blogspot.com/2006.42.html

  என்பதுபோல பதிக்கிறார். அவர் சொன்னதுபோலவே தனது பதிவிலும் இதனை சம்பந்தா சம்பந்தமில்லாமல் பதித்துக் கொள்ள அவரின் அந்த குறிப்பிட்ட பதிவு உடனே மேல் கிளம்புகிறது. அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளின் கீழ் வருகிறது. அடிக்கடி தனது பதிவு முன்பக்கம் தெரிய அவர் செய்யும் ஜெகஜாலக் கில்லாடி வேலைகள் இவை. பிறந்த குழந்தைகூட சொல்லும் அவரின் பின்னூட்டப் பைத்தியக்காரத் தனத்தை!

  பரிசீலிப்பதாக சொன்ன செல்வராஜ் அவர்களுக்கும் காசி மற்றும் மதி போன்ற நிர்வாகக் குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லக் கடமைப் பட்டு இருக்கிறேன்.

  தமிழ்மணம் நிர்வாகி அவர்களைக் கடுமையாகச் சாடிய முகமூடி என்பவரின் வலைப்பதிவைத் திரட்டுவதையும் மறுபரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

  நன்றி.

  By Blogger மரத் தடி, At July 04, 2006 9:40 PM  

 • தமிழ்மணம் நிர்வாகிக்கு...

  என் மறுமொழி நிலவர சேவை நீக்கி உள்ளீர்கள் - என்னை கலந்து ஆலோசிக்காமல். ஆகவே எனது விளக்க கடிதம் இதனுடன் அனுப்புகிறேன்.

  அன்னை தெரசா பற்றி ஒரு தூஷன பின்னூட்டம் வந்தது எனது இந்த பதிவில்.

  http://tvpravi.blogspot.com/2006/06/blog-post_27.html

  என் மறுமொழி சேவை நீக்கியதாக தெரிவித்தது இந்த பதிவு

  http://thamizmanam.blogspot.com/2006/06/blog-post.html

  ஆரம்பத்தில் இருந்து வஜ்ரா மீது ஒரு சந்தேகம் எனக்கு...காரணம் அவர் பின்னூட்டம் இட்டு சில வினாடிகளில் சர்ச்சைக்குரிய பின்னூட்டம் வந்தது...

  பிறகு அவர் தனிமடலில் கூறினார்..குமரன் மடல் செய்தார்..அது அவராக இருக்க முடியாது, அப்படிப்பட்ட ஆள் அல்ல என்று...ஆகவே சந்தேகம் தீர்ந்தது..

  இது நடந்தது வெள்ளி அன்று..

  அடுத்த இரு நாட்களும் விடுமுறை எனக்கு...

  நான் அந்த பின்னூட்டத்தை அப்படியே வைத்திருக்க வேறொரு காரணமும் உண்டு..வெளியிடத்தேவை இல்லை என்று நினைத்தேன்..இப்போது வெளியிடுகிறேன்...

  ஒரு போலியாரின் போர்வையில் ஒளிந்துகொண்டு பல போலிகள் இங்கே...அனைத்து பதிவுகளிலும் கைவரிசையை காட்டிக்கொண்டு இருக்கின்றனர்...காலியிலும் போலிபின்னூட்டம், இரவிலும் போலி பின்னூட்டம், அதிகாலையிலும் போலி பின்னூட்டம்...

  போலியாருக்கு வேறு வேலையே கிடையாதா...போலி பின்னூட்டமிடுவதை தவிர..ஆக பலர் போலியின் போர்வையில் போலி பின்னூட்ட கைவரிசை காட்டுகின்றனர் என்று தெரிந்தது...

  ஆகவே,போலி போலிகளை கண்டறிந்து - தோலுரிப்பது தான் நோக்கம்..

  கணிணி நெட்வொட்க் ஆராய்ச்சி மற்றும் பணி துறையில் கால் பதித்து வெற்றி நடைபோடும் என் கல்லூரி நண்பர்கள் உதவியுடன் வஜ்ரா பெயரில் / அல்லது வஜ்ராவே போட்ட சர்ச்சைக்குரிய பின்னூட்டத்தை வைத்து கண்டுபிடிக்க முயற்ச்சி செய்யலாம் என்பதே திட்டம்...

  என் கல்லூரி நன்பர் ஒருவர் கூகுள் நிறுவனத்திலும் பணிபுரிவதாக கேள்வி.

  நன்பர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்..அவர்களுக்கும் விடுமுறை..எனக்கும் விடுமுறை..வெள்ளியன்றே தொலைபேசினேன்..அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் வெள்ளி மாலை இந்திய நேரத்திற்க்கு அவர்கள் பணி முடித்து சென்றுவிட்டனர்...

  ஆகவே, திங்கள் அன்று அவர்களிடம் உள்ள மென்பொருள் உதவியுடன் முயற்ச்சி செய்யலாம் என்பதே திட்டம்.

  ஆனால் நீங்கள் - அவசரப்பட்டுவிட்டீர்..என்னிடம் ஒரு மடல் அனுப்பி கேட்டிருந்தால் நான் தகுந்த தன்னிலை விளக்கம் கொடுத்திருப்பேன்..

  இனிவரும் காலங்களிலாவது என் போல் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க யாராவது புகார் கொடுத்தால் - இருதரப்பு வாதங்களையும் கேட்டு பிறகு முடிவெடுக்கவும்...

  மேலும் மறுமொழி நிலவரச் சேவை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்..

  இதன் நகல்:

  காசி
  லக்கிலூக்
  விடாது கருப்பு
  குமரன்
  வெற்றி
  முத்து தமிழினி
  டோண்டு
  ஜெயராமன்
  வஜ்ரா
  கானா பிரபா
  கொங்கு ராசா
  துளசி கோபால்
  இளவஞ்சி
  நாமக்கல் சிபி
  பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்
  பாஸ்டன் பாலா

  இதனை என் பதிவில் இடுகிறேன்.

  By Blogger ரவி, At July 05, 2006 12:03 AM  

 • இந்த முழு விளையாட்டையும், கொஞ்சம் தூரமாய் நின்று கவனித்துக்கொண்டிருந்தேன். மனிதனுக்கு எல்லா உரிமைகளும், சுதந்திரமும் வழங்கப்பட வேண்டுமென்பதில் எனக்கு கருத்து வேற்றுமை இல்லை. ஆனால், அந்த உரிமைகளின் பேரில் மனிதன், பிறமனிதர்களின் சுதந்திரத்தில், அந்தரங்கத்தில் நுழைவது கண்டிக்கபடவேண்டியது. இந்த அத்துமீறல் தொடர்ந்து நடைபெறும்போது, அவனிடமிருந்து உரிமைகளைப் பறிப்பதே சரியான தீர்வு. இது மன நிலை சரியில்லாத ஒருவனிடமிருந்து கூர்மையான பொருட்களைப் பிடுங்குவதற்கு நிகரானது. அதில் தவறில்லை. மத சாதி வேறுபாடின்றி, தனிமனித தாக்குதல், அவமதிப்பு செய்யும் பதிவுகளை செய்வோர் மற்றும் அனுமதிப்போருக்கு இதுவே சரியான தீர்வு!

  By Blogger புதுமை விரும்பி, At July 05, 2006 6:37 AM  

 • செந்தழல் ரவி, உங்களுக்கு அனுப்பியிருந்த மடலைப் பார்க்காமலேயே பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்திருக்கிறீர்கள். எல்லாத் தெளிவுகளும் இந்த இடுகையிலேயே இருக்கிறது. பொறுமையாகப் படித்துப் பாருங்கள்.

  நான் அனுப்பியிருந்த மடலில் தெரிவித்திருந்தபடியும் நடவடிக்கை எடுத்து மீண்டும் சேவை வழங்க நீங்கள் கேட்டுக்கொண்டபடியால் மறுமொழி நிலவரச் சேவையை உங்களுக்கு ஏலுமாக்குகிறோம்.

  இந்த விதயத்திற்கு இதோடு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம்.

  By Blogger இரா. செல்வராசு (R.Selvaraj), At July 05, 2006 10:45 PM  

 • Thiru.Selvaraj அவர்களின் கவனத்திற்கு,

  என்னிடம் கூட எந்த விளக்கமும் கேட்காமலும கூறாமலும் திரு.ஆறுமுகத்திடமிருந்து என்னுடைய blog moderation நிறுத்தப்பட்டதாக தகவல் வந்தது. நான் விளக்கம் கேட்டும் பதில் இல்லை. Thiru.Ravi எந்த காரணத்திற்காக comment அனுமதித்தாரோ அதே காரணத்திற்காகத்தான் நானும் அனுமதித்தேன்.

  நீங்கள் பதிவுகளில் கூறியுள்ள எந்த நடைமுறையையும் என் விசயத்தில் arumugam அவர்கள் கடைபிடிக்கவில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்த ுகொள்க்கிறேன்.
  இதைப்பற்றி நான் முத்து(தமிழினி) மற்றும் கவிதா ஆகியோரிடமும் தெரிவித்துஇருந்தேன்.

  எனக்கு எந்த பதிலும் Thiru.Arumugam அவர்களிடமிருந்து வராததால் நான் இப்படி முடிவு செய்துவிட்டேன்..

  தமிழ்மணத்தில் சர்வாதிகாரம் ஜனநாயகமுறையில் கடைபிடிக்கப்படுகிறது என்று.

  அதனால் என் BLOG யை Delist செய்ய சொல்லி மடல் அனுப்பினேன்...பாருங்கள் அதி்சியம் உடனடியாக என் blog delist செய்யப்பட்டது. தமிழ்மணத்தின் அதிவிரைவு நடவடிக்கைகள என்னை புல்லரிக்க வைத்துவிட்டது.

  இது போன்ற உங்கள் நடவடிக்கைகள் யாரை ஊக்கப்படுத்தும் என்பது நீங்கள் அறியாத ஒன்றா!!!!

  என்னத்த சொல்ல..இதை நீங்கள்
  பிரசுரிப்பீர்களா என்ற சந்தேகம்
  வந்ததால் Thiru.Ravi யின் வழியிலேயே மற்ற Blogeer களுக்கும் என் இதே கருததை mail செய்துவிட்டேன்.

  என்னங்க பண்றது தமிழ்மணம் கொடுத்த முன் அனுபவம்..

  www.manamy.blogspot.com

  By Blogger Darren, At July 06, 2006 5:17 AM  

 • //He only fought with him. It does not mean that he abused him in filthy language. That is Poli Dondu's style and not Bala's, who is a very respectable person.//

  எங்கே எந்த இடத்தில் என்ன பெயரில் பாலா என்பவர் முகமூடி வந்து போலிகளை எதிர்த்தார் என்று சரியாகச் சுட்டிக்காட்டினால்தானே அவர் எழுதியது நாகரீகமான மறுமொழியா இல்லையா என்பதை நாங்கள் அறியலாம். அவர் என்ன எழுதினார் என்பது தெரிந்தால்தானே ரெஸ்பெகட்புள் பெர்சனா இல்லை கேவலமானவரா என்பது விளங்கும். போலிகளை எதிர்க்கும் நீங்களே இன்னொருபுறம் போலிகளை வளர்ப்பது மிகவும் கேவலமான செயல்.

  //As for Poli Dondu, he deserves no other description. It is quite rich on the part of Goinchami to talk of decency here.//

  இப்படிச் சொல்லி சொல்லியே இருக்கும் கொஞ்சம் நஞ்ச மரியாதையையும் கெடுத்துக் கொள்வது யாரென்று சிந்தித்துப் பார்த்தீர்களா? உங்களை, உங்கள் கருத்துக்களை எதிர்க்கும் அல்லது உங்களுக்குப் பிடிக்காத எல்லோருமே போலிடோண்டு என்று நீங்கள் சொல்வது சிரிப்பாக இருக்கிறது. புதுசா எதுனா எழுது... போ!

  By Blogger வால்டர், At July 10, 2006 11:53 PM  

 • தமிழ்மணம் நிர்வாகக் குழு பார்வைக்கு,


  los angeles times ல் வந்த செய்தியைப் பார்க்க

  மற்றொரு செய்தி
  ..
  All publishers (including blog publishers) are legally responsible for what they publish and allowing anonymous publications in a blog requires the same responsibilities as print publications. They struggle with anonymous people who use their forum as a vehicle to publish foul, inappropriate, and sometimes illegal content.
  ..

  தமிழ்மண நிர்வாகம் blogger மட்டுமே பின்னூட்டமிடும் வகையில் உள்ள வலைப்பதிவுகளை மட்டுமே அனுமதிக்கவேண்டும்...

  இது ஒரு கோரிக்கையே...உலகளவில் இந்த அனானிகள், அதர் ஆப்ஷன் தொல்லைகள் உள்ளன.

  By Blogger வஜ்ரா, At August 29, 2006 9:08 AM  

 • "ஆண்டிகள் கூடி மடம் கட்டுகிறார்களாம்......"
  இது தமிழ்மணத்திற்கு சரியாக பொருந்தும்.

  bloggerல் others and anonymous optionsஐ எடுக்க வேண்டும் என போராடுபவர்கள் அனைவரும் மற்றும் பலரும் , எதோ ஒரு ஜாதி அல்லது மதத்திற்கு அல்லது தான் சார்ந்த கட்சிக்கு கூஜா தூக்கிக்கொண்டிருப்பவர்கள். இவர்களின் பதிவுகளில் எதாவது ஒன்றில் மேலே கூறிய எதாவது ஒன்றுக்கு சப்பை கட்டும் படி ஒரு பதிவோ அல்லது அடுத்தவர்களை மறைமுகமாக சாடியோ ஒரு பதிவு போட்டு இருப்பவர்கள். இவர்களின் தனி மனித தாக்குதலில்லால்தான் பல்வேறு பிரச்சனைகள் எற்படுகிறது. தமிழ்மணம் என்பது ஏதோ தமிழ்லை இணையத்தில் பரப்புவதற்கான புதுமையான முயற்சி என்று எண்ணி நான் தமிழ்மணத்திற்கு வந்தேன். ஆனால் இதுவும் அரசியல் போல் சுயநல சாக்கடை. சுயநலவாதிகள் தங்கள் சுயநலத்தை நிலைநாட்ட போராடிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு பலர் தமிழில் ஒரு பதிவு,தமக்கு பிடித்த சமஸ்கிருதம்,ஹிந்தி மற்றும் வேறு பல மொழிகளுக்கு அதே blogger accountல் மற்றுமொறு பதிவு என கடைபிடிகின்றர்.
  இங்கு ஆக்கபூர்வமான விசயம், மற்றும் அறிவியல் சம்மந்தமான விசயங்கள் பேசுவர்கள் அதிகம் இல்லை.
  தாங்கள் குப்பைகளை அகற்ற நினைகிறிர்கள். அதைவிட மேல் சாக்கடையை சுத்திகரித்தீர்கள் எனில் குப்பைகள் அன்றாது.

  By Blogger நாடோடி, At September 04, 2006 2:18 AM  

 • அன்பு செல்வராஜ் அவர்களுக்கு உங்களது பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

  //தமிழ்மண நிர்வாகம் blogger மட்டுமே பின்னூட்டமிடும் வகையில் உள்ள வலைப்பதிவுகளை மட்டுமே அனுமதிக்கவேண்டும்...//

  நான் அனானியாக எந்த பின்னூட்டங்களும் பதிவதில்லை. இருப்பினும் வஜ்ரா சொல்லியுள்ள மேற்கூறிய கருத்துப்படி தமிழ்மணம் செயல்பட துவங்கினால் வலைப்பூக்கள் இல்லாதவர்கள் சொல்ல வருகிற நல்ல கருத்துக்களை இழக்க வேண்டிய சூழல் உருவாகும். சொந்த பெயர் இல்லாமல் மாற்று பெயர்களில் எழுதுவதும் ஒருவகையில் அனானி போன்றதே. பின்னூட்டங்களை மட்டுறுத்தி எதை வெளியிடுவது எது கூடாது என தீர்மானித்து செயல்படுவது மட்டுமே இதற்கு நல்ல தீர்வாக அமையும்.

  கருத்துக்களை சொல்ல வாய்ப்பை உருவாக்க தமிழ்மணம் அயராது நடைபோட வாழ்த்துகிறேன்.

  By Blogger thiru, At September 04, 2006 9:44 AM  

 • அநாமதேயர்கள் அடுத்தவர்களின் ப்ளாக்கர் கணக்கிலே பின்னூட்டும் இவ்வேளையிலே மேற்கூறிய தமிழ்மணம் நிலைப்பாட்டினை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்.

  By Blogger தமிழ்மணம், At February 05, 2007 9:48 AM  

 • எனக்கு இந்த பிரச்சினையே இல்லை!
  ஹி! ஹி! ஹி!

  இஈஈஈது எப்படி இருக்குது?

  By Blogger மாசிலா, At February 05, 2007 9:58 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]<< Home