வாக்கெடுக்கலாம் வாருங்கள்
தமிழ்மணம் தளத்தில் ஒரு வாக்குப்பெட்டி இயங்கி வருவதைப் பார்த்திருக்கலாம். இந்த வாக்குப்பெட்டி மூலமாக வாக்களிக்க மட்டுமில்லாமல் வாக்கெடுப்பு அமைக்கவும் பயனர்களாகிய அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். வாக்கெடுப்பு யோசனைகள் (என்ன தலைப்பு/கேள்வி? விடைகள்/தெரிவுகள் எவை?) இருப்பவர்கள், இந்த இடுகைக்கு மறுமொழி இடுவதன்மூலம் பங்களிக்கலாம். அளிக்கப்படும் யோசனைகளை ஏற்றுக்கொள்ள/மறுக்க/மாற்றியமைக்க நிர்வாகக்குழுவுக்கு உரிமை உண்டு.
மக்களே, இனி உங்கள் சமத்து:-)
மக்களே, இனி உங்கள் சமத்து:-)
16 Comments:
முத்து ( தமிழினி) said...
காசி,
ஏதாவது மசாலா தமிழ் திரைபடங்கள் வந்தால் பார்க்கலாமா என்பதைப்பற்றி வாக்கெடுப்பு நடத்தலாம்.
ஆரம்பித்து வைக்கிறேன்.:)))
-------------------------------
By Kasi Arumugam, At March 09, 2006 2:34 AM
காசி, இதோ என் பங்குக்கு
1. வைகோ கூட்டணி மாறியது சரியா ?
2. சமீபத்திய சலுகைகள் ஜெயலலிதாவுக்கு ஆதராவாக அமையுமா?
3. கருணாநிதிக்கு பின் திமுக உடையுமா ?
4. ஸ்டாலினுக்கு முதல்வராகும் தகுதியிருக்கிறதா ?
5. ராகுல் டிராவிட் கங்குலியை விட திறம்பட அணியை வழிநடத்துகிறாரா ?
By பழூர் கார்த்தி, At March 09, 2006 3:41 AM
என்னங்க காசி,
நலமா? முத்து( தமிழினி) சொன்னாப்புலே மசாலாவை பார்க்க வாக்கெடுப்பு நடத்துனா நான் அம்பேல். இங்கே
எனக்கு வர்றது எப்படிப்பட்ட படங்கள்னு உங்களுக்கெல்லாம் தெரியும்தானே?
வேணுமுன்னா, டிவி. தொடர்கள் பார்க்கணுமா வேணாமான்னு வாக்கெடுக்கலாம்.(ஹை, இங்கே அதெல்லாம் வர்றதில்லையே)
By துளசி கோபால், At March 09, 2006 4:01 AM
எங்கே பார்த்தாலும் ஒரே வாக்குப் பதிவாக இருக்குதே- `வாக்கு சேகரிப்பு வவவவருடம்'னு பெயர் சூட்டிடலாம்? இதற்கு எத்தனை வாக்கு விழும்?
By தாணு, At March 09, 2006 4:29 AM
ஆங்கிலக்கலப்பில்லாமல் தமிழ் எதிர்காலத்தில் பேசப்படுமா?
By சிவக்குமார் (Sivakumar), At March 09, 2006 5:24 AM
சென்ற வருடம் நடந்த புத்தக விளையாட்டு
1.சுயதம்பட்டம்
2.நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்தியது. (குறைந்தபட்சம் சிலருக்கு).
3.ஆரோக்கியமான விடயம்.
By குமரேஸ், At March 09, 2006 12:16 PM
சென்ற வருடம் நடந்த புத்தக விளையாட்டு
1.சுயதம்பட்டம்
2.நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்தியது. (குறைந்தபட்சம் சிலருக்கு).
3.ஆரோக்கியமான விடயம்.
By குமரேஸ், At March 09, 2006 12:16 PM
1.எந்த தமிழ் வலைபதிவு சிறந்த பதிவு?
2.எந்த தமிழ் வலைபதிவு பார்க்க அழகாக உள்ளது?
3. சிறப்பாக பின்னூட்டம் இடுபவர் யார்?
இந்த கருத்து கணிப்பு நடத்துங்க. விவாதம், ஒட்டு, அடிதடி, பின்னூட்டம் அனைத்தும் குவியும்.
காசி, எப்ப இந்த கணிப்பு நடத்துவிங்க.
By பாலசந்தர் கணேசன்., At March 09, 2006 5:41 PM
இது போன்ற வாக்கெடுப்புகள்
அ) தேவையானதே
ஆ) வெட்டிவேலை
;))
By முகமூடி, At March 09, 2006 8:48 PM
ஆனந்த விகடன், ஆபாச விகடனாக மாறி வருகின்றதா?
1. ஆம். படிப்பதற்கு எரிச்சலாக உள்ளது.
2. இல்லை. காலத்தையொட்டிய மாற்றம்.
3. ஆம் என்று சொன்னால் ஆசிரியர் குழு குஷியாகி விடுவார்களோ?
4. இல்லை என்று சொன்னால் இன்னமும் தீவிரம் காட்ட ஆரம்பித்து விடுவார்களோ?
By Simulation, At March 09, 2006 9:13 PM
அனைவருக்கும் நன்றி. யோசனைகள் அளித்த சோமேறி பையன், பாரதி, குமரேஸ், பாலசந்தர் கணேசன், முகமூடி, சிமுலேஷன் ஆகியோருக்கு சிறப்பு நன்றி. தினமும் ஒரு வாக்கெடுப்பு நடக்கும். இந்த யோசனைகளை நிர்வாகக்குழு பயன்படுத்திக்கொள்ளும். இது ஒரு தொடர்முயற்சி, எனவே யோசனைகளை தொடர்ந்து எழுதலாம்.
By Kasi Arumugam, At March 09, 2006 9:17 PM
சோமேறி=சோம்பேறி. தட்டுப்பிழைக்கு மன்னிக்கவும்
By Kasi Arumugam, At March 09, 2006 9:17 PM
இதோ என் தலைப்பு!!
விஜய்காந்த் + BJP + ஜனதா இவர்களின் கூட்டணி வரும் பட்சத்தில், தமிழக மக்கள், கழகங்கள் மீதான தங்களின் அதிருப்தியை வெளியிடும் வகையில், மாற்றம் நிகழுமா [அ] நிகழாதா?
By VSK, At March 09, 2006 11:04 PM
ஏனுங்க காசியண்னா...
கொஞ்சம் நகைச்சுவையான விசயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். எப்பவுமே சீரியர்ஷ் மேட்டர்கள் வேணாம்னு தோனுது.
நா சொல்றது சரி தானுங்களே...
By - யெஸ்.பாலபாரதி, At March 13, 2006 9:36 PM
தமிழெழுத்துக்களில் உகர, ஊகாரச் சீர்திருத்தம்:
- தேவை
- தேவையில்லை (*)
* என்பது என் வாக்கு :)
By Voice on Wings, At March 14, 2006 4:52 AM
அமெரிக்காவுடனான உறவுக்கு இந்தியா,
1. முழு ஆதரவு தரவேண்டும்
2. கட்டுப்பாடோடு நடக்கவேண்டும்
தமிழ்நாட்டுத் தேர்தலில் சாதிக் கட்சிகள்
1. ஆதரிக்கப்படவேண்டும்
2. நிராகரிக்கப்படவேண்டும்
By சிறில் அலெக்ஸ், At March 14, 2006 12:07 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home