தமிழ்மணம் அறிவிப்புகள்

Thursday, December 15, 2005

தமிழ்மணம் தள வழங்கியில் மாற்றம்

தமிழ்மணம்.காம் சேவை இத்தனை நாள் இயங்கிக்கொண்டிருக்கும் வழங்கியிலிருந்து வேறு வழங்கிக்கு மாறுகிறது. ஒரு தனியாள் தன் தேவைகளுக்காக பாவிக்க என்று அளிக்கப்பட்ட (இலவச) சேவை ஒன்றில் ஆரம்பித்து, பிறகு பொதுப்பயனுக்கு வந்ததால் தேவை அதிகமாகி, ஒரு குறைந்த கட்டண சேவைக்கு மாறியது. மேலும் மேலும் பதிவுகளின்/வாசகர்களின் எண்ணிக்கை அதிகமானதால் வழங்கியின் பளு தாங்கமுடியாத அளவுக்குப் போய்விட்டதாகவும், இனியும் இந்தத்தளம் தற்போதைய வழங்கியில் தொடரமுடியாதென்றும் சேவையளிப்போரிடமிருந்து ஓலை வந்து ஒருமாதமாகிவிட்டது. எனவே இந்த சுரண்டலை நிறுத்திக்கொண்டு முழு வழங்கியை வாடகைக்குப் பிடித்தாயிற்று. அதற்குக் குடிபெயர்வது நடந்துகொண்டிருக்கிறது. இதனால் அடுத்த சில நாட்களில் இடையிடையே சேவையில் தடங்கல் ஏற்படலாம். பொறுத்துக்கொள்ளவேண்டுகிறோம்.

மேம்பட்ட வசதிகளோடு தமிழ்மணம் சேவையின் புதுப்பதிப்பை வெளியிடவும் நாள் குறித்தாயிற்று. ஆனால் அதற்குள் எதிர்பாராதவிதமாக இந்த ஓலை! இருப்பினும் கூடிய அளவு மேம்பாட்டுடன் புத்தாண்டில் புது தமிழ்மணம் மணக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்காரணமாக டிசம்பர் 25 முதல் ஜனவரி 1 வரை இடையிடையே தடங்கல்கள் நேரவும் வாய்ப்பிருக்கிறது.

புது வசதிகளோடே சில நடைமுறை மாற்றங்களும் வரும். வலைப்பதிவர்கள் பலனை எண்ணி சுமைகளைத் தாங்கி ஒத்துழைக்க வேண்டுகிறேன். எவ்வகையான நடைமுறை மாற்றங்கள் என்பது தக்க சமயத்தில் விளக்கப்படும்.

வலைப்பதிவர் மன்றம் அடிக்கடி வன்முறைக்கு இலக்காவதால் இதற்கு மாற்றாக வேறு ஏற்பாடு செய்யப்படுகிறது. வலைப்பதிவரில் பெரும்பாலானோர் கூகிள் அளிக்கும் ஜிமெயில் பயனாளர்களாக இருப்பதால், கூகிள் குழுமம் ஒன்று தமிழ்மணம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இனி மன்றம் வழியாக நடந்த பரிமாற்றங்களை இந்தக் குழுமம் வாயிலாக நடத்த எண்ணம். இதில் சில அனுகூலங்கள்: தமிழ்மணம் தளம் இயங்காதபோதும் தொடர்புக்கு பயனாகும். கூகிள் பொறுப்பில் இருப்பதால் வன்முறைக்கு நாம் அஞ்சவேண்டியதோ அரண்கட்டுவதோ தேவையில்லை. மேலும், அழகாக அதற்கும் கூகிள் செய்தியோடை பதிப்பிப்பதால் தமிழ்மணம் மன்றம் பக்கத்தில் நடப்புகளை முன்புபோலவே காட்டமுடியும். இப்படிக் காட்டுவது தமிழ்மணம் புதுப் பதிப்பு வெளியாகும்போது முழு நடைமுறைக்கு வரும் என்றாலும், இப்போதிருந்தே இந்த குழுமத்தைப் பயன்படுத்த அனைவரையும் அழைக்கிறோம். இடையே வர இருக்கும் தடங்கல் குறித்தும், இங்கே தகவல் பரிமாறிக்கொள்ள வாய்ப்பிருக்கிறதல்லவா?

தடங்கல் வரும்போது கைகொடுக்க டெக்னோரட்டி முழுதாக உதவாதென்றாலும் நண்பர் ஒருவர் இன்னொரு வலைப்பதிவுகள் திரட்டி அமைத்திருக்கிறார். அதைப்பற்றியும் அறிவிப்பு வெளியாகலாம். அங்கும் உடனடியாக புதிதாக எழுதப்பட்டவற்றை அறிந்துகொள்ளலாம்.

தமிழ்வலைப்பதிவுகள் இன்னும் பரவலாக பயன்பாட்டுக்கு வர இந்த முயற்சிகள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்று நாம் காணும் வளர்ச்சிக்கு ஆதாரமான நூற்றுக்கணக்கான வலைப்பதிவர்களோடும், ஆயிரக்கணக்கான வாசகர்களோடும், இந்த முயற்சிகளில் ஆர்வத்தோடு பங்கேற்பதில் தமிழ்மணம்.காம் பெருமைகொள்கிறது.

அனைவருக்கும் நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
(தமிழ்மணம்.காம் சார்பாக)
-காசி

17 Comments:

  • முன்னறிவிற்கு நன்றிகள் காசி.

    By Blogger பூனைக்குட்டி, At December 15, 2005 3:30 AM  

  • காசி,

    என்ன சொல்ல?...

    நன்றிகளும் வாழ்த்துக்களும்!

    By Blogger Kannan, At December 15, 2005 3:35 AM  

  • முன்னாடியெ சொன்னதுக்கு நன்றி காசி. தமிழ்மணம் பார்க்கலேன்னா கையொடிஞ்சமாதிரி ஆயிருது.

    இப்ப தடங்கல் ஏற்படப்போகுது/ஏற்பட்டிருக்குன்னா கொஞ்சம் சமாதானமா இருக்கலாமுல்லையா?

    By Blogger துளசி கோபால், At December 15, 2005 3:40 AM  

  • நன்றி

    By Blogger Chandravathanaa, At December 15, 2005 3:47 AM  

  • திரு. காசி அவர்களே,
    நன்றி.

    =இஸ்மாயில் கனி

    By Anonymous Anonymous, At December 15, 2005 4:18 AM  

  • காசி,
    தமிழ்மணம் இல்லாவிட்டால் துளசியக்கா சொன்னதைப்போல் கையொடிந்த மாதிரியே தான்.. :))

    புதுவருடத்தில் மேலும் சிறப்பாக அமையுமென்று நினைக்கிறேன்.

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    By Blogger rv, At December 15, 2005 5:21 AM  

  • தமிழ்மணத்தின் பெருமை மிக்க வளர்ச்சிக்கு வாழ்த்துக்களும், உங்கள் குழுவின் இடையறாப் பணிகளுக்கு மிகுந்த நன்றியும்!

    By Blogger சுந்தரவடிவேல், At December 15, 2005 5:24 AM  

  • முன்னறிவிப்பிற்கு நன்றி காசி.

    By Blogger குமரன் (Kumaran), At December 15, 2005 6:34 AM  

  • காசி,
    தகவலுக்கு நன்றி. தங்களின் (மற்றும் மதி, செல்வா ஆகியோரின்) உழைப்புக்கும் தான் !!! புதுப் பொலிவுடன் தமிழ் மணம் பிரகாசிக்க வாழ்த்துக்கள்.
    என்றென்றும் அன்புடன்
    பாலா

    By Blogger enRenRum-anbudan.BALA, At December 15, 2005 6:40 AM  

  • அன்பு நண்பரே, திரு.காசி,

    வலைப்பூக்களின் இணைப்புப் பாலத்தை இத்துணை இன்னல்களுடன் சரி செய்து பணியாற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டும், நன்றியும் உரித்தாகுக.

    By Blogger ஞானவெட்டியான், At December 15, 2005 8:42 AM  

  • என் மனமொப்பிய நன்றி!கூடவே புதுவருட வாழ்த்துக்களை முன்கூட்டிச் சொல்கிறேன்.

    By Blogger Sri Rangan, At December 15, 2005 9:25 AM  

  • உங்களுக்கும் உங்களுடன் உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    By Blogger Sundar Padmanaban, At December 15, 2005 10:52 AM  

  • உங்கட நேரத்துக்கும் உழைப்புக்கும் நன்றி காசி. வாழ்த்துக்களும்.

    By Blogger `மழை` ஷ்ரேயா(Shreya), At December 15, 2005 5:33 PM  

  • மறுமொழி எழுதிய நண்பர்கள் எல்லாம் குழுமத்தில் சேர்ந்தாச்சா? ரொம்பக் கொறச்சலா இருக்கே உறுப்பினர் எண்ணிக்கை. ஒரு நூறு பேராவது இன்னிக்குள்ள சேர்ந்திருப்பாங்கன்னு பாத்தா? வெறும் 11...

    கூகுள் கணக்கு என்கிட்டயும் 99 பாக்கி இருக்கு. வேண்டுவோர் வேண்டலாம்.

    By Blogger வலைஞன், At December 16, 2005 3:31 AM  

  • வழங்கிமாற்றத்தை நல்லமுறையில் முடித்தமைக்கு பாராட்டுக்களும், நன்றியும்.

    By Blogger அன்பு, At December 18, 2005 11:05 AM  

  • உங்களுக்கும் உங்களுடன் உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    By Anonymous Anonymous, At December 18, 2005 11:16 AM  

  • அனைவருக்கும் நன்றி.


    அனுராக், குழுமத்தின் அஞ்சல்கள் இங்கே தொடுப்பாகக் காட்ட ஆரம்பித்தால் பலர் இன்னும் சேருவார்கள் என்று நம்புகிறேன். மேலும் கேள்விகள் வரும்போது சேரலாம்.

    By Blogger Kasi Arumugam, At December 18, 2005 9:40 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home