தமிழ்மணம் அறிவிப்புகள்

Wednesday, March 15, 2006

ஒரு வேண்டுகோள்.

தமிழ்மணம் சேவையை உபயோகிக்கும் வலைப்பதிவு நண்பர்கள், மறுமொழிகளை தமிழ் மணப் பட்டியலில் காட்டுதல், பட்டியை நிறுவதில் ஏற்படும் சிக்கல்கள், போன்றவை குறித்து விளக்கங்கள் வேண்டி, மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளும் போது, சம்மந்தப் பட்ட வலைப்பதிவு முகவரியையும் குறிப்பிட்டு எழுதுவது நலமாக இருக்கும்.

உதாரணத்துக்கு, ஒருவர், தன் பதிவின் மறுமொழிகள், முகப்புப் பக்கத்தில் தோன்றுவதில்லை என்று சொல்லும் பொழுது, அவர் நாலைந்துக்கு மேற்பட்ட பதிவுகள் வைத்திருக்கும் பட்சத்தில், எந்தப் பதிவில் சிக்கல் என்று சொன்னால்தான், விரைவாக செயல் பட ஏதுவாக இருக்கும்.

"என்னுடையை வலைப்பதிவு தமிழ் மணத்தில் தெரிவதில்லை. please do the needful" என்று வரும் ( சில சமயம் கையெழுத்து கூட இல்லாமல்) ஒற்றை வரி மடல்களில் மின்னஞ்சல் முகவரியில் இருந்து, பெயர்களைத் தேடி, அன்னாரது வலைப்பதிவைக் கண்டு பிடித்து, சிக்கலைச் சரி செய்ய ஆகும் நேரத்தில், அதுக்கு பதிலாக, bike & barrel க்குப் போய், 'உருப்படியாக' நேரத்தை செலவழிக்கலாம் ( அது என்னா எடம் என்று எனக்கு தனிமயிலு உடுவதற்கு பதிலாக, கூகுள் பண்ணி கண்டுபிடிச்சுக்கோங்க) என்று தோன்றிவிட்டால், தமிழ் வலைப்பதிவு உலகமே ஸ்தம்பித்துப் போய்விடதா? நீங்களே சொல்லுங்க..

ஆகவே, நண்பர்களே...

தமிழ்மணச் சேவை குறித்து மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்கும் போது, தங்கள் வலைப்பதிவின் முகவரியை குறிப்பிடும் படி கேட்டுக் கொள்கிறேன்.

15 Comments:

  • Hi

    I am Raja A.S. i am trying to put my blog into this site, when i trying that i am getting an error saying my page may contain some roman characters .I am using EKalappai Software thru which i am changing to unicode format while creating mypages in word(or) notepad.When i use such thing the font that getting selected was TSCu_Paranar.

    Pls let me know what changes i need do if i want my blog to be listed here.
    You can check my page
    http://rajashanmugam.blogspot.com/
    my Mail ID is RajaShanmugam@gmail.com

    By Blogger ராஜா, At March 15, 2006 9:26 AM  

  • My dear Prakash,
    as per your guidance I have created COCOMMENT box wherein the comments have
    not been listed.
    Can you guide me further pl
    blog:http:/njaanavelvi.blogspot.com/

    njaanavettiyaan

    By Blogger ஞானவெட்டியான், At March 15, 2006 10:42 AM  

  • Well Said

    By Anonymous Anonymous, At March 15, 2006 11:16 PM  

  • அய்யா, ஒரு வாரத்திற்கு முன் நான் மட்டுறுத்தம் செய்து, எனது பதிவில் சமீபத்திய மறுமொழிகளில் திரட்டப்படுவதில்லை என நான் மின்னஞ்சல் செய்திருந்தேன். இது எனது மூன்றாவது வேண்டுகோள்.. இதுவரை தமிழ்மணத்தில் மறுமொழி காட்டப்படவில்லை. அவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.
    எனது தளம் http://rajasugumaran.blogspot.com மின்னஞ்சல் rajasugumaran@hotmail.com புதுச்சேரி இரா. சுகுமாரன்

    By Blogger இரா.சுகுமாரன், At March 16, 2006 12:07 AM  

  • prakash.

    my new blog

    www.muthuvinsports.blogspot.com

    is not showing comments in thamizmanam. help me

    By Blogger Muthu, At March 16, 2006 12:49 AM  

  • எனது பதிவான http://karuppupaiyan.blogspot.com என்ற வலைப்பதிவு சமீபத்திய மறுமொழிகளில் திரட்டப்படவில்லை. இதுகுறித்து கூகுள் குழுமத்திலும் முறறயிட்டு இருக்கிறேன். ஆவன செய்யவும்.

    மிக்க நன்றி.

    By Blogger கருப்பு, At March 16, 2006 2:59 AM  

  • ராஜா சண்முகம்,
    உங்கள் பதிவு யுனிகோடிலும் திஸ்கி ( TSCII)யிலும் கலந்துகட்டி குழப்பமாக இருக்கிறது சரி செய்யவும். மூன்று முழு இடுகைகள் எழுதிய பின்னர் சமர்ப்பிக்கவும்.

    By Blogger Kasi Arumugam, At March 18, 2006 4:40 AM  

  • சுகுமாரன், உங்கள் பிரச்னை இப்போதும் இருக்கிறதா? எல்லாம் சரியாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.

    By Blogger Kasi Arumugam, At March 18, 2006 4:44 AM  

  • விடாதுகருப்பு,

    தமிழ்மணம் கருவிப்பட்டை வெளியிட்ட முதல் சில நாள்களில் சோதனையாக இயங்கிய வடிவ நிரலை நீங்கள் பாவிக்கிறீர்கள். அத்ற்குப்பின் முழுமையான பயன்பாட்டுக்கு வெளியிட்ட நிரல் இங்கே.

    By Blogger Kasi Arumugam, At March 18, 2006 4:49 AM  

  • எங்கள் முத்தமிழ் ஏடு வலைபதிவுக்கு பின்னூட்ட மட்டுறுத்தல் வசதி செய்யப்பட்டிருந்தும் பின்னூட்டம் திரட்டப்படாது என்று தமிழ்மணம் தகவல் தருகிறது.தயவு செய்து அதை சரிபார்த்து பின்னூட்டங்கள் திரட்டபட செய்யவும்

    நேசமுடன்
    தேரெழுந்தூர் கம்பன்

    http://thamizamma.blogspot.com

    By Blogger முத்தமிழ், At March 18, 2006 5:03 AM  

  • prakash.

    my blog www.pakkam5.blogspot.com

    is not showing comments in thamizmanam. please help me

    By Blogger பட்டணத்து ராசா, At March 19, 2006 4:57 AM  

  • இந்த மாதிரி பிரச்சனை வந்தா என்னவெல்லாம் சரிபார்க்கனும்னு, ஒரு "checklist" போட்டு அதை உதவி பக்கத்தில் சேர்த்தீங்கனா உதவியா இருக்கும்.

    By Anonymous Anonymous, At March 19, 2006 8:29 PM  

  • இப்போது சரி செய்துவிட்டேன். சரியாக இருக்கிறதா எனப் பார்த்து சமீபத்திய மறுமொழிகளில் சேர்த்துக் கொள்ளவும். தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.

    http://karuppupaiyan.blogspot.com

    By Blogger கருப்பு, At March 19, 2006 11:28 PM  

  • பிரகாஷ்.

    புதிய இடுகைகளை என்னால் இட முடியவில்லை. புது இடுகைகள் ஏதும் இல்லை என்று தகவல் வருகிறது.ஏதாவது செய்யவும்.

    www.muthuvinsports.blogspot.com

    with regards
    Muthu

    By Blogger Muthu, At March 19, 2006 11:37 PM  

  • பிரகாஷ், காசி,

    விடாது கருப்பு இன்னும் சமீபத்திய பதிவுகளில் வரவில்லை. எனக்கு கணினி அறிவு கொஞ்சம் குறைவு. ஒரு மாதிரியாக தாங்கள் கொடுத்த சுட்டியில் இருந்து எடுத்து இணைத்து இருக்கிறேம்.

    http://karuppupaiyan.blogspot.com

    By Blogger கருப்பு, At March 23, 2006 11:44 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home