தமிழ்மணம் அறிவிப்புகள்

Thursday, April 05, 2007

இடுகைகள் நீக்கம் குறித்த அறிவிப்பு

1.
அனாமதேயமாக தமிழ்மணத்தின் தாய்நிறுவனமான டிஎம்ஐ இனைச் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்ட பின்னூட்டப்பட இணைப்புகள், பதிவர்கள் ஜடாயு, முகமூடி ஆகியோரின் இடுகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவை தங்கள் பெயர்களுக்குக் களங்கம் விளைவிக்க முயல்வதாக இரண்டு பதிவர்கள் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு முறையீடு செய்திருக்கின்றனர். இம்முறையீட்டின் அடிப்படையிலும் டிஎம்ஐ இன் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயல்வதன் அடிப்படையிலும் இந்த இணைப்புகளைத் தம் இடுகைகளிலிருந்து நீக்குமாறு தமிழ்மணம் நிர்வாகம் இரு பதிவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது.

நீக்கப்படாதவிடத்து, சம்பந்தப்பட்ட இடுகைகளுக்கான இணைப்புகள் தமிழ்மணம் களஞ்சியத்திலிருந்து நீக்கப்படுமென அறியத் தருகிறோம்.

2.
தமிழ்மணம் திரட்டியிலிருந்து விலக்கப்பட்ட 'விட்டது சிகப்பு' என்ற பதிவரின் இடுகையை பதிவர் ஆதிசேஷன் பதிவில் மீள்பதிப்பு செய்துள்ளதாக எமக்கு முறையீடுகள் வந்துள்ளன. திரட்டியிலிருந்து விதிமுறை மீறல்களின் காரணமாக விலக்கப்பட்ட பதிவர்களின் இடுகைகளை வேறு வழிகளில் தமிழ்மணத்தில் இணைப்பதை அனுமதிக்க இயலாது. அதனால், இதை அறிந்த பதிவர் குறிப்பிட்ட இடுகையை அவர் பதிவிலிருந்து நீக்காவிடில் தமிழ்மணம் நிர்வாகம் அவ்விடுகையைத் திரட்டலிலிருந்து நீக்கி அறிவிக்கும்.

தொடர்ந்தும் இதேபோல, விலக்கப்பட்ட பதிவுகளின் இடுகைகள் வேறு பதிவுகளிலே இடப்படுவது அறியத்தரப்படின், அப்படியான இடுகைகளும் தமிழ்மணம் திரட்டுதலிலேயிருந்து நீக்கப்படும் என்பதையும் அறிவிக்கக்கடப்பாடுள்ளோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

6 Comments:

  • அன்புள்ள தமிழ்மணம்,

    என்னுடைய http://sempunakki.blogspot.com பதிவில் பின்னூட்ட மாடரேசன் செய்து இருக்கிறேன். எனவே எனது பதிவின் பின்னூட்டங்களையும் திரட்டவும்.

    சொம்புநக்கி

    By Anonymous Anonymous, At April 06, 2007 2:18 AM  

  • 07 ஏப்ரல் 07

    நீக்கப்பட்ட பதிவுகள்

    கட்டுமானத்துறை - வடுவூர் குமார்: பதிவரின் வேண்டுகோளுக்கேற்ப நீக்கப்பட்டது

    சொம்புநக்கி - சொம்புநக்கி: பதிவுகள் அநாவசியமாக தமிழ்மணம் குறித்து தூண்டும் விதத்திலே எழுதப்பட்டதும் அதன் பின்னான முறையற்ற பின்னூட்டங்களும். உங்கள் பின்னூட்டங்கள் திரட்டப்படவேண்டிய அவசியமில்லை.

    தொடர்பான குறிப்புகள்:

    1. தமிழ்மணம், டிஎம்ஐ குறித்து தமிழ்மணம் அறிவிப்பு பதிவுகளிலே வெளிவரும் அறிவிப்புகள், பின்னூட்டங்கள் மட்டுமே தமிழ்மணம், டிஎம்ஐ ஆகியவற்றின் கருத்துகளைத் தெறிக்கும். தமிழ்மணம் சார்பிலோ, டிஎம்ஐ சார்பிலோ வேறெந்தப்பதிவினையோ பின்னூட்டமிடல்களையோ தமிழ்மண நிர்வாகம் செய்வதில்லை என்பதைத் தெளிவாக அறியத்தருகின்றோம்.

    2. தமிழ்மணம் / டிஎம்ஐ மேலான ஆதாரபூர்வமான, நிதானமான, ஏரணம் பொருந்திய கலந்துரையாடல்களையும் கருத்துவெளிப்பாடுகளையும் வரவேற்கின்றோம். ஆனால், நோய்க்காவிகள்போல பதிவுகளிலே தமிழ்மணத்தினையும் டிஎம்ஐ இனையும் தாக்குவதையே பொழுதுபோக்காகக் கொண்டிருப்பதனை அனுமதிக்க விரும்பவில்லை. தமிழ்மணத்தின் செயற்பாடுகள் உங்களுக்கு ஒவ்வாதென்பதாகத் தென்பட்டால், அறியத் தாருங்கள். இதுவரைநாள் முயன்றதுபோல, இயன்றவரை மாற்ற வேண்டியவிடங்களிலே விடயங்களிலே மாற்ற முயல்கின்றோம். ஆனால், தனிப்பட்ட பதிவர்களின் பதிவுகளிலே தோன்றும் கருத்துகளுக்குத் தமிழ்மணம்/டிஎம்ஐ ஆகியவற்றினைத் தாக்குவது, திரட்டி என்ற அளவிலே பொருந்தாதென்பதை இத்தனை நாட்கள் நாம் அறிவித்ததிலே புரிந்து கொண்டிருப்பீர்கள். அதற்குமேலும் மீண்டும் மீண்டும் தமிழ்மணத்தினையும் டிஎம்ஐ இனையும் தாக்கிக்கொண்டிருப்பது, சிந்திக்கக்கூடிய பதிவர்களின் செயற்பாடுகளல்ல என்று எல்லோருக்கும் புரிந்துகொள்ளமுடியும். தமிழ்மணம் உங்களை வெளியேற்றியது என்பதாக ஒரு தோற்றத்தினை உருவாக்குவதற்காக நீங்கள் இதனைச் செய்துகொண்டிருப்பின், அதற்குத் தமிழ்மணம் அதனை நீங்கள் விரும்பிய நேரத்திலே செய்ய உதவ முடியாது. சேர்ந்து கொள்ளவிரும்பும் அனைவரின் பதிவுகளையும் கருத்துகளையும் வரவேற்கின்றோம். பொருத்தமற்ற களமென்று எண்ணி விரும்பிச் செல்ல விரும்புவோர் தாராளமாக வடுவூர் குமார் அவர்கள் போல அகற்றும்படி வேண்டுகோள் விடுத்து விலகிக்கொள்ளலாம்; பதிவுப்பட்டையினை அகற்றினாலுங்கூட, உங்கள் பதிவு தமிழ்மணத்திலே தோன்றாது. ஆனால், அதற்காக, சகபதிவர்களின் பதிவுகளுக்குத் தமிழ்மணம் எதையும் செய்யமுடியாதென்று அறிந்திருந்தும் தமிழ்மணத்திலே குற்றப்பத்திரிகை வாசிக்கும் சிறுபிள்ளைத்தனமாக செயற்பாட்டிலும்விட சிறப்பாகச் செய்ய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளியெறியும் பதிவர்களுக்குத் திறமையுண்டு என நாம் நிச்சயமாக நம்புகிறோம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பாலும் நாங்கள் அறியாத மறைமுகமான ஏதேனும் காரணமிருப்பின், அறியத்தாருங்கள். நாங்கள் மாற/மாற்ற வேண்டியிருப்பின்,முயற்சிக்கிறோம்.

    3. தமிழ்மணம்/டிஎம்ஐ அங்கத்தவர்களின் தனிப்பட்ட பதிவுகள், பின்னூட்டங்கள் அவர்களின் சொந்தக்கருத்துகளைமட்டுமே தெறிக்கும்; தமிழ்மணம், டிஎம்ஐ என்பவற்றின் கருத்துகளையல்ல.

    4. பதிவுகளை நீக்கிச் சில மணிநேரங்களிலே வரும் முறையற்ற தமிழஞ்சல்கள் இம்முறையும் அனுமதிக்கப்படமாட்டா.

    புரிதலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி

    By Blogger தமிழ்மணம், At April 07, 2007 1:34 AM  

  • அன்புள்ள தமிழ்மணம்

    என்னுடைய http://truetamilans.blogspot.com-ஐ கடந்த மாதம் 23ம் தேதி துவக்கினேன். தமிழ்மணத்தில் எனது பிளாக்கர் தளத்தை இணைத்துக் கொள்ள விண்ணப்பத்திருந்தேன்.. 7 நாட்களில் இணைக்கப்படும் என்று உதவி பக்கத்தில் படித்தேன். ஆனால் இன்னமும் எனது தளம் தமிழ்மணத்தில் வரவில்லை. எப்பொழுது இணைக்கப்படும்? தாமதத்திற்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?

    By Blogger உண்மைத்தமிழன், At April 07, 2007 3:38 AM  

  • இது நாள் வரை என் பதிவுகளை திரட்டிய தமிழ்மணத்துக்கு நன்றி.

    By Blogger வடுவூர் குமார், At April 07, 2007 9:54 AM  

  • விலக்கப்பட்ட இடுகைகள்
    1
    கிருஷ்ணனின் FULL LONG குழல் கொண்டு ஊதிக்கொண்டே வருவோம்.-.---- ராவணன் . : VANJOOR
    (உள்ளடக்கம் காரணமாக விலக்கப்பட்டது)

    2
    ஆதிசேஷனின் இடுகை (பின்னூட்டங்களின் தன்மை, இணைப்புகள் காரணமாக)
    பின்னூட்டங்கள் இவ்வாறே தொடரும் பட்சத்தில், இப்பதிவு நீக்கப்படும்

    By Blogger தமிழ்மணம், At April 15, 2007 1:52 AM  

  • விலக்கப்பட்ட பதிவும் இடுகையும்

    "தமிழ்மணத்தின் மீதான ஆதாரமற்ற அவதூறுகளை எதிர்கொள்ளல்" அறிவிப்பில் தமிழ்மணம் கோரியிருந்தவாறு பதிவர் நேசகுமார் தன் அவதூறுக்கு ஆதாரம் எதை அளிக்காமல் தமிழ்மணத்தின் மீதும், சில நிர்வாகிகள் மீதும் மேலும் அவதூறுகளை வீசியுள்ளதால் ஏற்கனவே அறிவித்திருந்தபடி அவருடைய பதிவு தமிழ்மணம் திரட்டியிலிருந்து விலக்கப்படுகிறது.

    இறைநேசனின் "பார்ப்பன பன்னாடைகளும், காம வியாபாரமும்" இடுகை அதன் உள்ளக்கம் காரணமாக நீக்கப்பட்டிருக்கின்றது.

    By Blogger தமிழ்மணம், At April 15, 2007 12:56 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home