தமிழ்மணம் அறிவிப்புகள்

Monday, September 04, 2006

தமிழ்மணத்தின் பூங்கா வலையிதழ்

புரட்டாதி மாதம் முதற்கொண்டு தமிழ்மணம் திரட்டி ஒவ்வொரு வாரமும் திரட்டப்படும் பதிவுகளிலே சிறந்த பதிவுகளைத் தொகுத்து பூங்கா வலையிதழாக வெளியிடவிருக்கிறது. வெள்ளி முதற்கொண்டு அடுத்த வியாழன் வரையிலான, தொகுப்பதற்குப் பதிவர்களினால் அனுமதிக்கப்பட்ட பல்வேறுதுறைப்பதிவுகளிலிருந்து சிறந்த பதிவுகள் தொகுக்கப்பட்டு பூங்கா இதழாக தொடரும் திங்கட்கிழமையிலே வெளியிடப்படும். இதற்கான தேர்வினை பூங்கா ஆசிரியர் குழுவும் தொகுக்கப்படும் வாரத்துக்கு முன்னைய வாரத்தின் சிறப்பு நட்சத்திரமும் தேர்ந்தெடுப்பார்கள். பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டியிலே உள்ளிடும்போதே அப்பதிவுகளைப் பூங்கா இதழுக்குத் தேர்ந்தெடுக்க சம்மதம் தெரிவிக்கவோ மறுக்கவோ பதிவருக்கு வசதி செய்யப்படும். இதுபற்றிய செயல்முறை விளக்கமாக இன்னும் ஓரிரு நாட்களிலே தமிழ்மணம் அறிவிப்பிலே பதியப்படும்.