தலைப்புக்களுக்கான தனித்தனி செய்தியோடைகள்.
இதுநாள்வரை தமிழ்மணம் அளித்து வந்த செய்தியோடை ஒன்றுதான். (அதன் வலைமுகவரி எங்கே கொடுக்கப்பட்டது என்று சிலர் நெற்றியை உயர்த்துவது தெரிகிறது...:-)) இடுகைகள் வகைப்படுத்தப்படுவதன் இன்னொரு பலனாக இனிமேல் தனித்தனி தலைப்புகளுக்கான செய்தியோடைகளை இனிப் பெற முடியும். இதன்மூலம், செய்தியோடைவழியாக வாசிப்பவர்கள், தாங்கள் தேர்வு செய்துகொண்ட தலைப்புகளில் மட்டும் புதிதாக எழுதப்பட்டிருக்கின்றனவா என்று அறிந்து தங்கள் நேரத்தை சரியாக செலவிடமுடியும்.
அளிக்கப்படும் அனைத்து செய்தியோடைகளையும் இங்கே காணலாம்.
இத்துடன் இன்னும் சில கூடுதல் பலன்களும் உண்டு. இனிமேல் ஒவ்வொரு இடுகைக்கும் எழுதியவர் பெயர் (<dc:creator> tag) மற்றும் வகை(தலைப்பு) (<category> tag) ஆகியவையும் இனி செய்தியோடையுடன் அளிக்கப்படும். இதனால் சரியான படிப்பான்கள் கொண்டு படிக்கப்படும்போது மேம்பட்ட பயன்பாட்டு அனுபவம் கிட்டும்.
அளிக்கப்படும் அனைத்து செய்தியோடைகளையும் இங்கே காணலாம்.
இத்துடன் இன்னும் சில கூடுதல் பலன்களும் உண்டு. இனிமேல் ஒவ்வொரு இடுகைக்கும் எழுதியவர் பெயர் (<dc:creator> tag) மற்றும் வகை(தலைப்பு) (<category> tag) ஆகியவையும் இனி செய்தியோடையுடன் அளிக்கப்படும். இதனால் சரியான படிப்பான்கள் கொண்டு படிக்கப்படும்போது மேம்பட்ட பயன்பாட்டு அனுபவம் கிட்டும்.
10 Comments:
வலைப் பதிவுமனைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பிரமிப்பை தருகிறது. உங்கள் தமிழ் பணி மிகச்சிறந்தது. வாழ்த்துகள்.
அன்புடன்
ஜீவா
By Iyappan Krishnan, At March 18, 2006 4:33 AM
மிக்க நன்றி, காசி..பாராட்டுக்கள் உங்களுக்கு.. இதோ சற்றே வித்தியாசமான பாராட்டு...
for(i=1;i<=10;i++)
{
printf("வலைப் பதிவுமனைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பிரமிப்பை தருகிறது. உங்கள் தமிழ் பணி மிகச்சிறந்தது. வாழ்த்துகள்.");
}
By பழூர் கார்த்தி, At March 18, 2006 6:09 AM
நன்றி காசி
By குழலி / Kuzhali, At March 18, 2006 9:42 AM
ஒரு சிற்பி தன் ஆக்கத்தை பார்த்து பார்த்து சீராக்குவதுபோல தமிழ்மணத்தை மேன்மேலும் சிறப்புறச் செய்கிறீர்கள். நன்றிகள் பல. சில படிப்பான்களையும் பதிவுகள் tabஇல் சுட்டலாமே.
By மணியன், At March 18, 2006 12:44 PM
அன்புள்ள காசி,
என்னவோ 'மேம்பாடு' செஞ்சிருக்கறீங்கன்னு தெரியுது. ஆனா........ என்னன்னு புரியலையே.
இப்படிக்கு க.கை.நா.
By துளசி கோபால், At March 18, 2006 8:45 PM
துளசி கோபால் சொல்வதுபோல நான் இதைப் பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்த முயன்று அது ஒரு வலைப்பூவாக இன்று பதிந்துவிட்டது (?).
பயன்படுத்தும் விதம் பற்றி சற்று விளக்குங்களேன்.
By Ram.K, At March 18, 2006 10:22 PM
நானும் துளசி கேஸ்தான். இதை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று புரியலையே!
By தாணு, At March 19, 2006 3:35 AM
//நானும் துளசி கேஸ்தான். இதை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று புரியலையே!//
repeattae
senshe
By சென்ஷி, At February 01, 2007 3:58 AM
வணக்கம் காசி உங்களின் புதிய முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
என்னுடைய www.batti-central.blogspot.com என்னும் வலைப்பூவில் மறுமொழி திரட்டுகை நடை பெறவில்லை.www.thamizmanam.blogspot.com இற்கு ஏற்கனவே 3 தடவைகள் அறிவித்திருந்தேன்.ஆனால் இன்ன்மும் மாற்றம் இல்லை என்ன காரணமாக இருக்க கூடும் என்று சொல்ல முடியுமானால் நன்று.
நட்புடன்
சோமி
By சோமி, At February 01, 2007 4:15 AM
உங்கள் தமிழ் பணி மிகச்சிறந்தது. வாழ்த்துகள் திருவாளர் காசி அவர்களே!
SP.VR.சுப்பையா
கோயம்புத்தூர்
By SP.VR. SUBBIAH, At February 01, 2007 4:33 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home