தமிழ்மணம் அறிவிப்புகள்

Friday, March 25, 2005

மென்னிதழ் சோதனைக்கு யார் தயார்?

பலரும் வலைப்பதிவுகளைப் படிப்பதில் கண்ட நுட்பச் சிக்கல்: எழுத்துரு. இயங்கு எழுத்துரு அமைப்பித்தால் ஓரளவுக்கு இது சரியாகலாம். ஆனாலும் எல்லாரும் செய்வதில்லை. செய்ய அறிவு, ஆர்வம், வசதி இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு ஒரு தீர்வாக ஒரு சோதனை முயற்சி:

இந்த ஆக்கத்தின் மேலே பார்த்தால் ஒரு பட்டையில் நீல வண்ணத்தில் ஒரு தொடுப்பு இருக்கும். pdf கோப்பாக செய்துகொள்ள இது உதவும். அதை வலது பொத்தானால் சொடுக்கி, save-as என்று கோப்பாக சேமித்துக்கொண்டால், தொடர்ந்து இணையத் தொடர்பில்லாதவர்கள், எழுத்துரு பிரச்னை உள்ளவர்கள் ஆகியோருக்கு வசதியாக சேமித்துக்கொள்ளலாம். உங்கள் நண்பர் உங்கள் வலைப்பதிவைப் படிக்காமல் டிமிக்கி கொடுக்கிறாரா, கவலையை விடுங்க, பிடிஎஃப் ஆக மின்ஞ்சல் அனுப்பிப் போட்டுத்தாக்குங்க.

இதற்கு தேவையான நிரல்துண்டு இங்கே: (ப்ளாக்கருக்கு மட்டும் இப்போதைக்கு):

<div style="font-size: 10pt;margin:5px; padding: 5px;border: 1px dashed #FF8;background-color:#FFA;">
Difficulty in reading this post due to font issues?
<a href="http://www.thamizmanam.com/kasi/pdf_url.php?url=<$BlogItemPermalinkURL$>"
target="_blank">Click here</a>
for a PDF copy. Works best if you right-click and select 'Save as'</div>

கவனிக்க:
சோதனையில் இருக்கிறது, எனவே நான் மீண்டும் கேட்கும்போது மாற்றத்தயாராக இருப்பவர்கள் சரியாக இயங்காவிட்டால் எரிச்சலடையாதவர்கள் மட்டும், இப்போதைக்குப் பயனபடுத்துங்கள்.

என்சாய் :-}

அன்புடன்,
-காசி

19 Comments:

 • வாவ், நல்லதொரு வழி. இப்போதே சேர்த்து விடுகிறேன்.

  By Blogger jeevagv, At March 25, 2005 12:48 AM  

 • செய்கிறேன்

  By Blogger வலைஞன், At March 25, 2005 12:52 AM  

 • ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். இது உள்ளடக்கத்தை தமிழ்மணம் தரவுத்தளத்திலிருந்து(database) பெறுகிறது. எனவே செய்தியோடை அமைப்பில் full என்று இருந்தாலே முழு ஆக்கமும் இதில் வரும்.

  By Blogger Kasi Arumugam, At March 25, 2005 12:59 AM  

 • காசி,
  வேலை செய்கிறது. ஐஇ மற்றும் ஃபைர்பாக்ஸ் - இரண்டிலும். சுட்டியில் கிளிக் செய்ததும் PDF வ்ந்தது (Acrobat 6.0 on XP)
  ஆனால்:
  1. தற்போதைய பதிவு வரவில்லை - ஆறு பதிவுகளுக்கு முன்னாலான பதிவுதான் வந்தது. (இரண்டு முறை நான் தலைப்பை மாற்றினேன், அதனாலோ?)
  2. அவ்வாறு வந்த பதிவில் இருந்த பட்ம் (JPG) PDF-இல் சேரவில்லை)

  By Blogger jeevagv, At March 25, 2005 1:05 AM  

 • jeeva,

  please use it within <Blogger> & </Blogger> tags.

  No support for pictures (and many other tags) yet. This is not an attempt to replace browser. It only aids in the absence of font, so TEXT is primary objective.

  By Blogger Kasi Arumugam, At March 25, 2005 1:12 AM  

 • காசி,
  ஆம், அப்படித்தான் செய்திருக்கிறேன்.
  நான் மாற்றியது சரியா பாருங்கள்:

  <$BlogItemPermalinkURL$> ஐ
  http://jeevagv.blogspot.com
  என்று மாற்றினேன்.


  நன்றி.

  By Blogger jeevagv, At March 25, 2005 1:24 AM  

 • Kasi: I tried this using IE6.0 in my XP-Professional. It works fine. What a nice neat utility. Can you switch over to some other embeded font which is esthetically more beautiful? Kannan,N

  By Blogger Dr.N.Kannan, At March 25, 2005 2:26 AM  

 • Kasi: Is it possible to include a feature in Tamilmanam by which we could assemble our favorite blogs. My idea is like in Raaga where you open an account and collect your favorite songs for later hearing. The suggestion is to allow us to subscribe to Tamil manam and have such features.

  Blogspot.com does not pass through our firewall (I view all the blogs using a proxy setting). I heared that many countries restrict such entries. Is it possible to view a blog within the frame of Tamil Manam?

  (sorry to add this here)

  Kannan,N

  By Blogger Dr.N.Kannan, At March 25, 2005 2:33 AM  

 • சூப்பருங்கண்ணா!! நல்லா வேலை செய்யுது, அப்படியே அத்தன வலைபதிவுகளையும் ஒரே PDF ல கொண்டுவர வழி இருக்குங்களா?

  இததான் "இருக்க இடங்கொடுத்தா மடத்த பிடிக்கறது..." அப்படீங்கறீங்களா? :)

  By Blogger ilavanji, At March 25, 2005 3:30 AM  

 • காசியண்ணே! உங்களுக்கு நாங்க என்ன கைமாறு செய்ய போறோம். எங்களையெல்லாம் தமிழ்மணத்துல சொகுசா ராஜா மாதிரி வச்சிருக்கீங்களே.

  உணர்ச்சிவயப்பட்டது போக திரு.கண்ணன் சொன்னமாதிரி வேறு ஏதாவது ஃபாண்டை (font) பி.டி.எப்-ல் பயன்படுத்தலாமா? பாண்ட் கொஞ்சம் சொள்ளையாக இருக்கிறது. அதற்கு பதிலாக TheeneeUni, TheeNeeUniTx பயன்படுத்தினால் ஜிலு ஜிலு ராசகுமாரி மாதிரி எங்கள் எழுத்துக்கள் தெரியுமல்லவா?

  By Blogger Vijayakumar, At March 25, 2005 5:16 AM  

 • ஜீவா,

  தவறு. கொடுத்ததை அப்படியே போடுங்க.

  மற்ற பின்னூட்டங்களுக்கு நன்றி. இயன்ற அளவில் செய்வேன்.

  By Blogger Kasi Arumugam, At March 25, 2005 9:18 AM  

 • ஆக்கத்தின் கீழே போட்டுவதைவிட இப்படி முகப்பில் போடுவதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  By Blogger Kasi Arumugam, At March 25, 2005 10:04 AM  

 • காசி, 'டி' என்ற எழுத்து உடைந்து தெரிகிறதே, Firefoxல் பார்த்ததில்? முன்பு இருந்த எழுத்துருவிலும் அப்படியே இருந்ததாக நினைவு...

  By Blogger சன்னாசி, At March 25, 2005 10:10 AM  

 • காசி,
  என்னை மாதிரி ஆட்களையெல்லாம் 'ஒன்னுத்துக்கும் உதவாதன்' என்று சொல்லாமல் சொல்வதில் உங்களுக்கு அப்படியென்ன சந்தோஷம் :-(.
  சரி, எதுக்கும் உங்கள் உழைப்பின் விளைபொருட்களில் ® © போன்ற குறிகளை போட்டு வையுங்கள்

  By Blogger மு. சுந்தரமூர்த்தி, At March 25, 2005 11:03 AM  

 • // காசி, 'டி' என்ற எழுத்து உடைந்து தெரிகிறதே, //

  ஆமாம், இன்னும் சில சில்லறை வேலைகள் இருக்கின்றன. செய்யணும்.

  சுந்தரமூர்த்தி, எங்க வீட்டுல வந்துகேட்டா இதே பேரை எனக்கு சூட்டுவாங்க, இதெல்லாம் தளத்துக்குத்தளம் மாறும்ங்க. கண்டுக்கக்கூடாது.

  அந்த r, c, எல்லாம் இன்னும் யோசிக்கலை. நன்றி.

  By Blogger Kasi Arumugam, At March 25, 2005 12:47 PM  

 • Kasi,
  I tried it in my blog.
  Very neat piece of work which works ;-)

  Since it takes from your database, i could not see my old postings in PDF. Is there a workaround for this ?

  - desikan

  By Blogger Desikan, At March 28, 2005 3:44 AM  

 • தேசிகன்,

  அது அப்படித்தான், வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. இதிலேயே படங்களும் தெரியுமாறு செய்யவேண்டும். மேலும், ஒரு வலைப்பதிவின் பல ஆக்கங்களைத் தேர்வு செய்து ஒரே பிடிஎஃப் கோப்பாக செய்யும் வசதியும் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.

  By Blogger Kasi Arumugam, At March 28, 2005 12:32 PM  

 • காசி,
  இது அருமையாக வேலை செய்கிறது. மிக்க நன்றி :-).

  By Blogger Muthu, At March 28, 2005 6:46 PM  

 • காசி, முதலில் இதை நான் பரிசோதித்துப் பார்க்க போவதில்லை. மனசாட்சி வேணும்யா மனுசனுக்கு, எவ்வளவுதான் இலவசமாக கொடுக்க போகிறீர்கள். நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு செயலிக்கும் காசு கொடுக்காமல் உபயோகிப்பது நல்ல செயலாக தெரியவில்லை. முதலில் சுந்தர மூர்த்தி சொன்னது போல், பெரிய எழுத்தில் 'C'யை போடுங்களய்யா. நான் இப்போது தான் ஆப்பிளின் வளர்ச்சி பற்றி பிஸினஸ் 2வில் படித்து கனவில் மிதந்து கொண்டிருக்கிறேன். தலைவரே, நல்ல வணிக சாத்தியக்கூறுகள் இதற்கு இருக்கிறது. ஆகவே, கொஞ்சம் வணிகரீதியாய் எப்படி மேம்படுத்துவது என்று யோசிப்போம். கொஞ்சமே கொஞ்சமாய் bloglines பாருங்கள் அல்லது del.icio.us பாருங்கள். அதுப் போன்றதொரு விஷயத்தை கொண்டு வந்து விட்டால், வணிக ரீதியான முதல்படியாய் எடுத்து சென்றுவிடலாம். ப்ரியா கொடுக்கறதுக்கும் மனசு வேணும் ஆனா ப்ரீயா உபயோகிக்கறதுக்கு தான் மனசு வரமாட்டேங்குது..

  சொல்லுங்கப்பா எல்லாரும்.....

  By Blogger Narain Rajagopalan, At March 30, 2005 9:25 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]<< Home