தமிழ்மணம் அறிவிப்புகள்

Friday, March 18, 2005

போலீஸ் வேலை

தமிழ்மணம் தளத்தின் சேவை தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளுக்கே என்பது வெளிப்படையான ஒன்று. ஒரு பதிவைப் பட்டியலில் சேர்க்கும்போதே 'அது தமிழில் எழுதப்பட்டுவரும் ஒன்றுதானா?' என்று பார்க்கப்படுகிறது. முழுக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் விடப்பட்டிருக்கின்றன. சிலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி எழுதுவதும் உண்டு. அவர்களை ஒரேயடியாக விலக்கிவைப்பதில்லை. ஆனாலும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆக்கங்களை(posts) அவ்வப்போது தமிழ்மணம் தளத்திலிருந்து மறைத்து வைக்கிறோம். இந்த அதிகாரம் தற்போது தமிழ்மணம் தளத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளுக்குமாக 8 பேரிடம் இருக்கிறது. தானியங்கியாதலால் தளத்தில் விரும்பத்தகாத (உ.ம்.: ஆபாசமான) ஆக்கங்கள் காட்டப்படுவதை முற்றிலும் தவிர்க்க முடியாதானாலும், எட்டுப் பேரில் யார்கண்ணில் பட்டாலும் அவர்கள் உடனேயே அந்த சர்ச்சைக்குரிய ஆக்கத்தை நீக்கலாம். இதுவரை இப்படித்தான் நடந்து வருகிறது.

இதே வசதியால்,
 • தவறிப்போய் தஸ்கி(TSCII)யில் வந்துவிட்டவை,
 • எதிர்பாராமல் இரண்டாம் முறை வந்துவிட்டவை,
 • ப்ளாக்கர்.காம் சொதப்பியதால் குழறியவை
போன்றவையும் நீக்கப்பட்டுவிடுகின்றன.

சிவப்பு வண்ணத்தில் 'நீக்கக் கோரிக்கை' விடுக்கும் பொத்தான் ஏற்பாட்டின்படி யாராவது வேண்டினாலும் அது இயன்றவிரைவில் பார்வையிடப்பட்டு தேவையானால் இம்முறையிலேயே நீக்கப்படுகிறது. தனியாக மின்னஞ்சல் வழியாகக் கோரிக்கை விடுப்பவர்கள் abuse@thamizmanam.com என்ற முகவரிக்கும் எழுதலாம்.

இந்த முறையிலேயே முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழ் சூழலுக்கோ சமூகத்துக்கோ சற்றும் சம்பந்தமில்லாத ஆக்கங்களும் நீக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கூடுதல் பணியை செய்து உதவும் நண்பர்கள் செல்வராஜுக்கும் மதி கந்தசாமிக்கும் நன்றி சொல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

கடந்த சில நாட்களில் இத்தகைய ஆங்கில ஆக்கங்கள் அடிக்கடி வருவதால், இந்த வேலையை மெனக்கெட்டு கண்காணிப்பதைவிட அதையும் தானியங்கியால் செய்ய முயற்சி செய்திருக்கிறேன். இதன்படி குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆங்கிலப் பகுதியைக் கொண்டிருக்கும் ஆக்கங்கள் தானாகவே மறைக்கப்பட்டுவிடும். இது சோதனைமுறையில் இயங்க ஆரம்பித்துள்ளது. ஆகவே தவறுதலாக மறைக்கவேண்டாததை மறைத்துவிடவும் வாய்ப்புள்ளது. எனவே அப்படி எதையாவது வலைப்பதிவர்கள் கண்டால் என் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டுகிறேன்.

இந்த ஏற்பாட்டின் அவசியத்தை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
-காசி

3 Comments:

 • ஒரு பதிவு ஆங்கிலத்தில் இருந்தால், தமிழ்மணம், அதைக் காட்டாதா? சுவாரசியமான puzzle ஒன்றை, ஆங்கிலத்தில் போட்டு விட்டு, எங்கடா தமிழ்மணத்துலே இன்னும் காணோம் என்று தலையை 'பிச்சிக் கொண்டிருந்தேன்' ( ஏற்கனவே என் தலையிலே முடி ஜாஸ்தி.:-) ) . நல்ல வேளையாக விஷயத்தைச் சொன்னீர்கள்.

  By Blogger Jayaprakash Sampath, At March 18, 2005 6:37 PM  

 • பிரகாஷ்,

  // ஒரு பதிவு ஆங்கிலத்தில் இருந்தால், தமிழ்மணம், அதைக் காட்டாதா?//

  அப்படித் தட்டையாக:P சொல்லமுடியாது. ஆங்கிலத்தினூடே தமிழும் கொஞ்சமாவது இருந்தாலே காட்டப்படும். ஆங்கிலத்தில் மட்டும் அல்லது சாங்கியத்துக்கு ஓரிரண்டு தமிழ்ச் சொற்களுடன் மட்டும் வந்தால் காட்டப்படாது.

  உங்கள் புதிரை சில தமிழ் விமர்சனத்தோடு போடுங்களேன் பார்க்கலாம். (நல்ல கினிபிக் மாட்டினார்:-D)ஆனாலும் முடிக்கெல்லாம் நான் உத்தரவாதமில்லை;-)

  By Blogger Kasi Arumugam, At March 18, 2005 6:55 PM  

 • //உங்கள் புதிரை சில தமிழ் விமர்சனத்தோடு போடுங்களேன் பார்க்கலாம். (நல்ல கினிபிக் மாட்டினார்:-D)ஆனாலும் முடிக்கெல்லாம் நான் உத்தரவாதமில்லை;-) //


  ரொம்பக் கஷ்டம் ( அதாவது எனக்கு). http://icarus1972us.blogspot.com/2005/03/ending-from-scratch_18.html இதை கிளிக்கவும். இதை எப்படி தமிழ்ல சொல்றதுன்னு தெரியலை. தமிழ் மணம் வாசகர்களுக்கு கொடுப்பினை இல்லை :-)

  By Blogger Jayaprakash Sampath, At March 18, 2005 7:28 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]<< Home