தமிழ்மணம் அறிவிப்புகள்

Wednesday, April 18, 2007

விலக்கப்பட்ட பதிவுகள்

தமிழ்மணத்தின் பயனர் விதிகள் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி தனக்கு தெரியவரும் பதிவர்களின் தகவல்களை அமெரிக்க நீதித்துறையின் ஆணையில்லாதவிடத்து எவருடனும் எக்காரணத்தை முன்னிட்டும் பகிர்ந்துகொள்வதில்லை என்பதனை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்

தமிழ்மணத்தில் யார் யார் என்னென்ன பணிகள் செய்கிறார்கள் என்பதனை, எம் தார்மீகக் காரணத்திற்கப்பால், கேள்வி கேட்பர்களுக்கெல்லாம் விளக்கிக்கொண்டிருக்க இயலாது என்பதையும் தெளிவாக்கியுள்ளோம்.

இந்த இரண்டு வெவ்வேறு விஷயங்களைக் குழப்பிக்கொண்டு கேட்கப்படும் குறுக்குக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் அவசியம் இல்லை என்றே கருதுகிறோம்.

தமிழ்மணம்-பதிவர்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை ஒன்றே பதிவர்கள் தமிழ்மணத்தில் இணைவதற்கும், தமிழ்மணம் பதிவர்களை இணைத்துக்கொள்வதற்கும் அடிப்படை. இதைத் தவிர தமிழ்மணத்தைப் பொறுத்தவரையில் வேறெந்த காரணமும் இல்லை. தமிழ்மணத்தின் மீது நம்பிக்கையிழந்த பதிவர்கள் தமிழ்மணத்தில் தொடர்வது அவர்களின் மனவமைதியையும் கெடுக்கும். தமிழ்மணத்தின் வளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கும்.

பதிவர் அரவிந்தன் நீலகண்டன் எமது முந்தைய இடுகையில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வாயிலாகவும், தன் பதிவில் வெளியிட்டுள்ள இடுகை, அதில் அனுமதித்துள்ள பின்னூட்டங்கள் வாயிலாகவும் தமிழ்மணத்தின் மீதான தன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியிருப்பதாகவே உறுதியாக நம்புகிறோம். அதேபோல அவர் தமிழ்மணத்திற்கெதிரான நச்சுப் பிரச்சாரத்தை நிறுத்துவார் என்ற நம்பிக்கை எமக்கும் இல்லாததாலும், அத்தகைய பிரச்சாரத்திற்கு தமிழ்மணத்தையே பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டும் அவருடைய பதிவு தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படுகிறது.

பதிவர் ஆதிசேஷன் வெளியிட்டுவரும் பின்னூட்டங்கள் சில தனிநபர்கள் மீதான வரம்பு மீறியத் தாக்குதலாக இருப்பதை முன்னிட்டு அவருக்கு மின்னஞ்சல்கள் மூலமாகவும், இடுகைகளை நீக்கியும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்திருக்கிறோம். இருப்பினும் அத்தகைய வரம்பு மீறிய பின்னூட்டங்களை அவர் தொடர்ந்து அனுமதித்துக்கொண்டிருப்பதால் அவருடைய பதிவு தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படுகிறது.

பதிவர்களின் புரிதலுக்கும், தொடர்ந்த ஒத்துழைப்புக்கும் நன்றி.

அன்புடன்,
தமிழ்மணம் நிர்வாகம்

22 Comments:

 • தகவலுக்கு நன்றி

  By Blogger துளசி கோபால், At April 19, 2007 12:07 AM  

 • உங்களுடைய டெம்ப்ளேட்டில் நிறைய பகுதிகள் (உதாரணத்திற்கு கமெண்டு) ஜாங்கிரி சுடுவது போல எனக்குத் தெரிகிறது. டெம்ப்ளேட்டை சரி செய்யவும்!

  By Blogger லக்கிலுக், At April 19, 2007 12:32 AM  

 • தங்கள் பாசிச நிலைப்பாட்டை விளக்கியமைக்கு நன்றி. தமிழ்மணம் தனது பதிவர்கள் குறித்த தகவல்களை அளித்துள்ளது எனும் ஐயத்தினை மேலும் உறுதியாக்கியமைக்கும் நன்றி.

  By Blogger அரவிந்தன் நீலகண்டன், At April 19, 2007 12:40 AM  

 • நல்ல முடிவு!

  By Blogger VSK, At April 19, 2007 1:06 AM  

 • "உன் சுதந்திரத்தின் எல்லை எங்கு முடிகிறதோ, அங்குதான் மற்றவரின் சுதந்திரம் ஆரம்பிக்கிறது" பிரஞ்ச் பழமொழி.

  இதை உணராத ஒரு சிலர் மற்றவர்களை அழிக்க முற்படுவதுமில்லாமல், தங்களை தாங்களே அழித்துக் கொண்டும் வருகிறார்கள்.

  தமிழ்மண நிர்வாகிகளின் சரியான முடிவை வரவேற்கிறேன்.

  By Blogger மாசிலா, At April 19, 2007 2:22 AM  

 • தமிழ்மண நிர்வாகத்திற்கு,

  திரு. அரவிந்தன் அவர்கள் சுட்டிக் காட்டிய தமிழ்மணம் மற்றும் பூங்காவின் செயல்பாடுகள் பற்றிய கருத்துக்கள் முழுவதும் சரி என்பதுதான் என் நிலைப்பாடு. பூங்காவில் நிகழ்ந்த தவறொன்றையும் என் இடுகை ஒன்றில் எடுத்துக் காட்டியுள்ளேன். தற்போது தமிழ்மண நிர்வாகத்தின் போக்கும் பதிவாளர்களின் திரட்டப்பட்ட தகவல்கள் தவறான கைகளில் சிக்கக் கூடிய அபாயமும் என்னை பயமுறுத்தியதால் நானே விலகிவிட்டேன். இல்லாவிட்டாலும் சீக்கிரமே என் பதிவை நீக்கியிருப்பீர்கள்!

  நேசகுமார் அவர்களின் பதிவு நீக்கப்பட்டவுடனேயே காற்று எப்படி வீசுகிறது என்பது அங்கை நெல்லியென தெளிவாகி விட்டது. வரிக்கு வரி பார்ப்பார பன்னாடை என்று விஷம் கக்கும் பதிவுகளும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பகிரங்கமான கருத்துக்களை முன்வைக்கும் பதிவுகளும், மற்றும் இந்துமதக் கடவுட்களையும் வேதங்களையும் தாறுமாறாகவும் தரக்குறைவாகவும் ஏசும் பதிவுகளும் தொடர்ந்து பளபளவென திரட்டப்படும்போது, உண்மை பேசியவர்கள் விரட்டப் பட்டுள்ளனர். ஆனால் திரட்டி உங்களுடையது. மேலும் இது இலவச சேவை. அதை எப்படி நடத்தவேண்டும் என்று நீங்கள் தீர்மானிப்பதைப் பற்றி விமரிசிக்க வேறு யாருக்கும் உரிமையில்லை என்ற வாதம் சரியென்றாலும், இந்த விஷயத்தில் என் கருத்தை ஒரு முறையாவது தெரியப்படுத்தவேண்டும் என்கிற நோக்கில்தான் இதை எழுதுகிறேன். ஏன், நீங்களேகூட உங்கள் முடிவுகளை மாற்றிக்கொள்ளலாம் அல்லவா!

  நான் தமிழ்மண விசைப்பலகையையும், மற்றும் வேறு javascript-களையும் என் பதிவின் template-இலிருந்து நீக்கிவிட்டேன்.

  தாங்கள் தயை கூர்ந்து என்னுடைய மற்றும் என் பதிவு பற்றிய சேகரிக்கப்பட விவரங்களை தங்கள் database-இலிருந்து முழுவதுமாக அகற்றுமாறும், அதனை செய்து முடித்ததை தங்கள் பதிவில் அறிவுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இணையத்தில் தற்போது identity திருட்டும், social engineering முறைகேடுகளும் அதிகமாகி விட்டன. நம்மை அறியாமலே நம் சர்வர்கள் ஹேக் செய்யப்படும் வாய்ப்புக்கள் அதிகம். என் கவலையை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  என்னை ஒரு முறை நட்சத்திரப் பதிவராக்கி கௌரவித்த திருமதி. மதி கந்தசாமி அவர்களுக்கு நன்றிகள்.

  அன்புடன் விடைபெறும்,

  எஸ்.கே

  By Blogger எஸ்.கே, At April 19, 2007 2:57 AM  

 • அரவிந்தன், தமிழ்மணத்தில் இன்று ஒரு தேவையான, அவசியமான counter balance என்று நான் நினைத்தாலும், தமிழ்மணத்தை எதிர்ப்பதற்கு தமிழ்மணத்தையே பயன்படுத்துவது அனுமதிக்க முடியாது என்ற உங்கள் முடிவை ஆமோதிக்கிறேன். மட்டுமல்லாமல் பதிவர்களின் தகவல்களை நீங்கள் ஒரு போதும் compromise செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. S.K சொல்வது போல் அரவிந்தன் உண்மை பேசியதற்காகவோ, idealogically உங்களுக்கு எதிராக இருப்பதற்காகவோ அவர் பதிவை நிறுத்தியிருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
  ஆனால் ஒரு திரட்டி என்ற நிலையை தாண்டி உங்கள் கருத்துக்களை மிகவும் public ஆக வைத்து perception of bias வருவதற்க்கு நீங்களும் (unfortuantely) ஒரு காரணமாகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  என் நிலை: இது போன்ற ஒரு திரட்டியின் பின் நின்று நடத்துபவர்கள் யார் என்றோ, அவர்கள் ஜாதியோ, மதமோ, idealogy யோ எனக்கு தெரிய வேண்டாம். தேன்கூடு சாகரன் மறைவு வரை அவர்தான் ஆரம்பித்தார் என்று எனக்கு தெரியாது. இப்போது யார் நடத்துகிறார்கள் என்றும் எனக்கு தெரியாது. Ignorance is bliss. My two cents.

  உங்கள் உழைப்பிற்கும் தமிழ்மணத்தை சாத்தியமாக்கியதற்கும் நன்றி.


  சுவாமி

  By Blogger சுவாமி, At April 20, 2007 4:08 AM  

 • தமிழ்மணம் கைமாறியதிலிருந்தே தமிழ்மானம் காற்றில் பறக்க ஆரம்பித்துவிட்டது. அரவிந்தன் போன்ற அறிவிற் சிறந்தவர்கள் எழுதுகையில் தமிழ்மணத்திற்கு பெருமையே தவிர, தமிழ்மணத்தால் அவருக்கு எதுவும் பயனில்லை. உங்கள் சகிப்புத்தன்மை திராவிட சிந்தனைகளுடன் மட்டுமே என்று தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

  "தமிழ்மனம் இனி மெல்லச் சாகும்" - என வாழ்த்துகிறேன்.

  யாருமே இல்லாத கடைல யாருக்குபா டீ ஆத்தப் போறீங்க?

  By Blogger Krishna (#24094743), At April 20, 2007 5:56 AM  

 • அன்புள்ள தமிழ்மணத்தாருக்கு,

  தொடரும் உறுதியான நடவடிக்கைகளுக்குப் பாராட்டுக்கள். இதனையே ஒரு சாக்காகக் கொண்டு தங்கள் மீது அவதூறு ப்ரப்ப முனைவோர் தன்னெஞ்சறிந்து பொய் மட்டுமே சொல்கின்றனர் என்பது மேலே அவர்கள் இட்டுள்ள பின்னூட்டங்களின் மூலம் அங்கை நெல்லிக்கனியாய் விளங்குகிறது.

  சமுதாய அக்கறையோடு நீங்கள் எடுத்த நிலைபாட்டிற்கு நன்றிகள் பல!

  By Blogger அட்றா சக்கை, At April 20, 2007 6:08 AM  

 • சுவாமி!

  நீங்கள் ஒரு தமிழ் பதிவரா? தமிழ்மணத்தில் இருக்கிறீர்களா? வலைப்பூவே இல்லாத உங்களுக்கு எதுக்கு வேண்டாத வேலை?

  By Blogger லக்கிலுக், At April 20, 2007 7:10 AM  

 • //் அரவிந்தன் உண்மை பேசியதற்காகவோ, idealogically உங்களுக்கு எதிராக இருப்பதற்காகவோ அவர் பதிவை நிறுத்தியிருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.//


  சுவாமிஜி , இப்படி காமடி பண்ணலாமா ? வேறு எதற்க்கு நீக்கினார்களாம் ?
  அவர் கேட்ட கேள்விக்கு பதிலை காணோமே ?

  ஆக இவர்கள் ஆபாச பாசிச வாதிகள்தான் , இணையத்தில் எளியதுதான் வாழும் , தமிழ்மணம் தன் தற்கொலையை தானே தேடிக்கொண்டுள்ளது

  By Blogger கரு.மூர்த்தி, At April 20, 2007 8:07 AM  

 • பலர் ஆபாசமாகவும், வெறுப்புமிழ்ந்தும் பதிவெழுதும் வேளையில், ஒரு சாரர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது தமிழ்மணத்தின் சார்பிலாத்தன்மையை கேள்விக்குறியதாக்குகிறது...

  By Blogger Nakkiran, At April 20, 2007 1:23 PM  

 • //பலர் ஆபாசமாகவும், வெறுப்புமிழ்ந்தும் பதிவெழுதும் வேளையில், ஒரு சாரர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது தமிழ்மணத்தின் சார்பிலாத்தன்மையை கேள்விக்குறியதாக்குகிறது... //

  ஆபாசமாக எழுதியதால் விடாது கருப்பு, விட்டுது சிகப்பு, ஆதிசேஷன் பதிவுகள் நீக்கப்பட்டன. இது எப்படி ஒரு சாரார் மீது நடவடிக்கை ஆகும்?

  நேசக்குமாரோ, அரவிந்தனோ இந்து மதத்தை தாங்கி எழுதுவது இங்கே பிரச்சனை இல்லை. தமிழ்மணத்தை ஆதாரம் இன்றி குற்றம் சாட்டியதால்தான் நீக்கப்பட்டனர். தமிழ்மணம் இந்து மதத்திற்கு எதிராக செயல்படுவதாக ஒரு மாய தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஏராளமான பதிவர்கள் இந்து மத பதிவுகளை தொடர்ந்து எழுதி வருகின்றனர். சந்தேகம் இருப்பின் சென்ற ஒரு வாரகால பதிவுகளை உற்று நோக்குங்கள்.

  விலக்கப்பட்டவர்கள் தமிழ்மண நிர்வாகிகள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால்தான் இவ்வாறு பேசுகின்றனர் என்பது என் ஏண்ணம். தமிழ்மணத்திற்கு போட்டியாக வேறு ஒரு திரட்டியை மாற்றி அமைப்பது பற்றி பேசியதில் இருந்தே அவர்களின் அடிமனதில் உள்ள வேட்கையை பற்றி அறிந்து கொள்ளலாம்.

  மேலும் ஆபாச பதிவுகள் எழுதிய ஒரு பதிவரை காப்பாற்றும் நோக்கில் நடத்தப்படும் ஒரு திசை திருப்பல் நாடகமே இவர்களின் கூச்சல்.

  By Blogger அருண்மொழி, At April 22, 2007 12:36 AM  

 • எனது இடுகையின் பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் தெரிவதில்லை. நான் மட்டுறுத்தல் செய்து தான் இருக்கிறேன்.
  http://1padam.adadaa.com/

  By Blogger Unknown, At April 23, 2007 12:14 PM  

 • என் பதிவுகளில் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன
  அன்புடன்
  மாலன்

  By Blogger மாலன், At July 05, 2007 11:35 AM  

 • எனது இடுகையின் பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் தெரிவதில்லை. நான் மட்டுறுத்தல் செய்துவிட்டேன்.
  என் பதிவு:
  http://jegadeesangurusamy.blogspot.com
  நன்றி..

  By Blogger ஜெகதீசன், At August 13, 2007 8:49 AM  

 • மன்னிக்கவும்.என் பதிவில் பின்னூட்டங்கள் தற்பொது தெரிகிறது. நன்றி
  -ஜெகதீசன்

  By Blogger ஜெகதீசன், At August 13, 2007 8:53 AM  

 • hi i have posted a new psot in tedujobs.blogpsot.com , but it didnt get updated in thamizmanam special area, pls chk that and help to rectify this problem. thanks

  http://tedujobs.blogspot.com/

  By Blogger கார்த்திக் பிரபு, At September 24, 2007 2:37 AM  

 • என்னுடைய கூகுள் பக்கத்தை தமிழ் மணத்தில் விட்ஜட்டாக இணைக்க கோருகிறேன்.

  அந்த பக்கத்தின் முகவரி -http://gkpstar.googlepages.com/

  இது சம்பந்தமான பறிமாற்றத்துக்கு gkpstar@gmail.com ல் தொடர்பு கொள்ளவும். நன்றி

  By Blogger கார்த்திக் பிரபு, At October 03, 2007 8:58 AM  

 • எனது இடுகையின் பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் தெரியச் செய்யவும். நான் மட்டுறுத்தல் செய்து இருக்கிறேன்

  By Blogger RK, At October 13, 2007 9:15 AM  

 • கமெண்ட் மாடுரேசன் செய்துள்ளேன், மறுமொழி திரட்டப்படும் பதிவுகளில் என் பதிவையும் சேர்த்துக்கொள்ளுமாரு கேட்டுக்கொள்கிறேன்

  By Blogger நிலா, At October 28, 2007 6:05 PM  

 • அய்யா எனது நந்து f/o நிலா எனும் வலைப்பதிவு இன்னும் தமிழ்மணத்தில் காத்திருபோர் பட்டியலில் உள்ளது.எனது பதிவில் வேறு எதேனும் தவறு உள்ளதா என தெரியவில்லை.பரீசீலித்து அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி

  By Blogger நந்து f/o நிலா, At October 29, 2007 2:19 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]<< Home