தமிழ்மணம் அறிவிப்புகள்

Wednesday, March 02, 2005

இந்த வலைப்பதிவின் நோக்கம்

அனைவருக்கும் வணக்கம்.

இந்த வலைப்பதிவு எதற்கு?

 1. தமிழ்மணம் வலைவாசலும், வலைப்பதிவர் மன்றமும், என் சொந்த வலைப்பதிவும் ஒரே வழங்கி(server)யிலிருந்து இயங்குகின்றன. இப்போதைக்கு தமிழ்வலைப்பதிவுகளுக்கான முக்கிய வாசலாக தமிழ்மணம் இருக்கிறது. ஏதாவது காரணத்தால் தமிழ்மணம்.காம் இயங்குவது தடைப்பட்டால் வலைப்பதிவுகள் வாசிப்பதற்கு தடங்கல் வர வாய்ப்புள்ளது. தளத்தின் நிலவரத்தைப் பகிர்ந்துகொள்ளவும், மாற்று ஏற்பாடுகள் பற்றி அறிவிக்கவும், வேறு இடத்திலிருந்து இயங்கும் இந்த வலைப்பதிவு பயனாகும்.

 2. நான் தமிழ் வலைப்பதிவர்களுக்குப் பொதுவாக வெளியிட விரும்பும் செய்திகளை என் சொந்த வலைப்பதிவிலிருந்து பிரித்து வைக்க இது உதவும்.

 3. 80% பேருக்கு மேல் பாவிக்கும் ப்ளாக்கர் சேவை இயங்கும் விதத்தை நானும் புரிந்துகொள்ளவும், ஒத்தியங்கவேண்டிய மேலதிக சேவைகள் அளிக்கும்போது சோதனைகளுக்கும் எனக்கும் ஒரு (நடப்பிலிருக்கும்) ப்ளாக்கர் வலைப்பதிவு தேவைப்படுகிறது. அதுவும் இதன் பயன்.
200வது நாளை எதிர்நோக்கியுள்ள தமிழ்மணம் பட்டியலில் 400வது வலைப்பதிவாக இணைந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

அன்புடன்,
-காசி

19 Comments:

 • அப்பாடி என் நகம் கடித்தல் நின்றது. அந்த 400வது பதிவாளர் யாராக இருக்கும் என்று சுவாரசியமாக மலர் கொத்துடன் காத்துக் கொண்டிருந்தேன்.

  பிடிங்க காசி, மலர்க்கொத்தை :-) அப்புறம் மேலே அண்ணாந்து பாருங்க .... ஜிகினா காகிதம் கொட்டுகிறதா ? ! :-)

  ( "நகம் கடிக்கும் காத்திருத்தல்" பொறுக்காமல் நானே ஒன்று தொடங்கிடலாமா என்று கூட ஒரு யோசனை மனதில் வந்து போயிற்று
  :-) !!

  By Blogger Aruna Srinivasan, At March 03, 2005 7:45 AM  

 • /200வது நாளை எதிர்நோக்கியுள்ள தமிழ்மணம் பட்டியலில் 400வது வலைப்பதிவாக இணைந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்./

  conflict of interest ;-)
  ஒப்பந்தம் வழங்கு பொறியியலாளரே கட்டிட ஒப்பந்தக்காரர் ஆனதான வேலையாய்ப் போச்சு ;-)

  By Blogger -/பெயரிலி., At March 03, 2005 7:54 AM  

 • தமிழ்மணத்தின் 400ஆவது வலைப்பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்.

  By Blogger வசந்தன்(Vasanthan), At March 03, 2005 8:28 AM  

 • வாழ்த்துக்கள் காசி!!!!!

  400வது வலைப்பதிவா? பேஷ் பேஷ்!!! சந்தோஷமா இருக்கு!!!!

  வெற்றிகரமாக 200 நாட்களைக் கடந்து பீடு நடை( சரியான வார்த்தையா?) போடும் தமிழ்மணத்திற்கு
  ஜே!!!!( எல்லோரும் ஜே போடுங்கப்பா!)

  என்றும் அன்புடன்,
  துளசி.

  By Blogger துளசி கோபால், At March 03, 2005 2:24 PM  

 • வரவேற்புகு நன்றி, நண்பர்களே.

  அருணா, 500வது பதிவு யாருடயதாக இருக்கும்?:P

  By Blogger Kasi Arumugam, At March 03, 2005 2:25 PM  

 • /500வது பதிவு யாருடயதாக இருக்கும்?/

  எனக்குத் தெரியும்; நீங்களே, "தமிழ் மனம் - என்ன நகைக்குது இங்கே?" என்று அதை வேறே உங்கள் பட்டிக்குள்ளே போட்டுக்கொள்வீர்கள்?

  :-))))

  By Blogger -/பெயரிலி., At March 03, 2005 2:29 PM  

 • Congrats Kasi. :-)
  இடையுறு காலத்தில் இந்த வலைப்பூ பயனுள்ளதாக இருக்கும்.

  By Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady, At March 03, 2005 2:50 PM  

 • 400-வது பதிவிற்கு வாழ்த்துகள் காசி!

  By Blogger இராதாகிருஷ்ணன், At March 03, 2005 4:07 PM  

 • மிஸ் ஆகிப் போச்சே ;;)

  ஆயிரத்துக்கு நான் இப்பவே முன்பதிவு செய்கிறேன்!

  By Blogger Boston Bala, At March 03, 2005 5:12 PM  

 • பெயரிலி://நீங்களே, "தமிழ் மனம் - என்ன நகைக்குது இங்கே?" என்று அதை வேறே உங்கள் பட்டிக்குள்ளே போட்டுக்கொள்வீர்கள்? //

  ஹாஹா...10 மதிப்பெண். (இப்படிக்கூட செய்யலாம்போலிருக்கே)

  ராதா, கங்கா, நன்றி.

  துளசிக்கா பீடுநடை சரியான தமிழ்தான், ஆனா போடுவது பீடுநடைதானா தெரியலை, பெயரிலியைக் கேட்டா எழுத்துக்களைக் குலுக்கிப்போட்டு புதுசா ஒண்ணு செய்துதருவார்:-)

  By Blogger Kasi Arumugam, At March 03, 2005 9:06 PM  

 • 400 பதிவுகள்!
  வாழ்த்துகள் காசி.
  400 பேர் எழுதுகிறார்கள் தமிழில். ஆச்சர்யம்தான்.
  நன்றி

  By Blogger Thangamani, At March 03, 2005 11:45 PM  

 • இது (அ)நியாயமா காசி 400வது பதிவை நான் ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள்.சரி போனால் போகட்டும் வாழ்த்துக்கள்.இப்படியாவது நான் 401,நான் 402 என்று (தமிழ்நாட்டுக் காவல்துறை இலக்கம் மாதிரி) யாராவது பதிவுகள் ஆரம்பித்து 500 ஐ எட்டிவிட்டால் சந்தோஷம்

  By Blogger ஈழநாதன்(Eelanathan), At March 04, 2005 12:22 AM  

 • தமிழ்மணத்தின் 400ஆவது வலைப்பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்.

  By Blogger Chandravathanaa, At March 04, 2005 3:06 AM  

 • தமிழ் வலைப்பூக்களின் வள்ர்ச்சி பெருமையும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கிறது. ஆயிரத்தை அதி விரைவில் எட்டுவோம் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. வெறும் எண்ணிக்கை மட்டும் வளர்ச்சி அல்ல. வலைப்பூக்களின் பன்முகத்தன்மை அது தமிழ் எழுத்துலகிற்குக் கொண்டு வந்திருக்கும் புதிய எழுத்தார்வம் மிக்க கைகள் இவையே மகிழ்ச்சிக்குரியவை. தவறில்லாமல் தமிழ் எழுதுவது, வெட்டி அரட்டைகளைக் குறைத்துக் கொள்வது, தனிநபர் தாக்குதலைத் தவிர்ப்பது, போன்ற சிறு சிறு முன்னேற்றங்களை அடைந்து விட்டால் வலைப்பூக்கள் ஓர் சக்தி வாய்ந்த மாற்று ஊடகமாகிவிடும்.
  ' பார்த்துக் கொண்டே இருக்கும் போது கிடுகிடுவென்று வளர்ந்து விடுகிற பெண்குழந்தைகளைப் போல' என்று வலைப்பூவின் வளர்ச்சி பற்றி பிப்ரவரி மாத திசைகளில் எழுதியிருந்தேன். இந்தக் குழந்தை எல்லா நலங்களும் பெற்றுச் சிறக்க வாழ்த்துகிறேன்.

  By Blogger மாலன், At March 04, 2005 8:07 AM  

 • என்ன நடக்குது இங்கே -ன்னு கேட்டவுடனே, என்னமோ காசி சார், பொங்கி எழுந்து நம்மளதான் வாம்புக்கு இழுக்குறாரோன்னு [what the hell is happening here ?]தோனிச்சு. :))
  வாழ்த்துக்கள்.
  பெயரிலி ரீலி(தி)லே
  1000-த்துக்கு - தமிழ் மெளனம் - என்ன நாக்கு இது ? --எப்படி இருக்கு?? :)) ஹி ஹி

  By Blogger SnackDragon, At March 04, 2005 8:54 AM  

 • மாலன் சொன்னது போல் நடக்கனும் என்றாலும், தெருச்சண்ண்டை இல்லையென்றால் நமது தமிழர் ப(பு)ண்பாடு என்ன ஆவது.

  ஆறுமுக நாவலரும், அடகளாரும் அடிச்சுக்குட்டாதான் இலக்கிய சண்டையா?
  நாங்க அடிச்சுகிட்டா இல்லையா?


  வேணூமின்னா, நாங்க பாட்டில் வீசறது, செயின் சுத்துறது எல்லாம் கத்துகிட்டு வந்து கத்திகிட்டே (கத்தியும் உண்டு) சண்டைபோடுறோம்.


  ஜனநாயகம் நா... சண்டை இல்லைன்னா எப்படி ?

  விடுக்குறது விட்டு எடுக்குறது எடுப்பது அல்லவோ சரி?? :)

  By Blogger SnackDragon, At March 04, 2005 8:58 AM  

 • //ஆறுமுக நாவலரும், அடகளாரும் அடிச்சுக்குட்டாதான் இலக்கிய சண்டையா?//

  எதோ வாய்க்கு வந்ததை உளறிவிட்டேனா?

  அடிகளாருக்கும். ஆறுமுகத்துக்கும் சண்டையே இல்லையா?? ;-)

  By Blogger SnackDragon, At March 04, 2005 9:00 AM  

 • Your site Blogger, is cool. When I was searching for 5553 yours was one of the best. While working on my site 5553 I have been seeking ways to make it better and found yours to be helpful. Thanks!

  By Anonymous Anonymous, At November 26, 2005 2:43 PM  

 • Your site Blogger, is cool. When I was searching for Báscula yours was one of the best. While working on my site Báscula I have been seeking ways to make it better and found yours to be helpful. Thanks!

  By Anonymous Anonymous, At December 05, 2005 3:10 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]<< Home